மரியாதைக்குரியவர்களே,
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் காலை வணக்கம்.
சகோதரர் முகம்மது அலி அவர்கள் தன் பதிவில் வீட்டில் பொங்கல் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது உங்க வீட்டில் எப்படி? என்ற கேள்விக்குதிரு, நண்பர் Thomas T- அவர்கள் "அப்தூல்காதார் க்கும் அமாவாசை க்கும் என்னயா சம்மந்தம்" என்று கேள்வி எழுப்பி வேதனைப்பட வைத்துள்ளார். ......பொங்கல் என்னும் தமிழர்திருநாள் பற்றிய பெருமை அவருக்காக இங்கு பதிவிட்டுள்ளேன்.(முதன் முதலில் தமிழர் திருநாள் என்ற சொல்லாட்சியை பொங்கலுக்கு சூட்டிய பேரறிஞர் கா.நமச்சிவாயனாரைப் போற்றி வணங்குவோம்.)மனித வாழ்வின் உயிர்நாடியான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவிய இயற்கைக்கும்,கால்நடைகளுக்கும் மரியாதை கொடுத்து நன்றி செலுத்தவே தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுகிற திருநாள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்.சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைத்து இல்லங்கள் இணைந்து,உள்ளங்கள் இணைந்து,ஊர்கள் இணைந்து,ஒரே சமுதாயமாகி அனைவரும் ஒரே மனித குலம் என்ற அடையாளம் காட்டுகிற அறிவுப்பூர்வமாக,உணர்வுப்பூர்வமாக எந்த வகையான புராணச்சார்புமில்லாத,மூடத்தன்மையற்ற விழா பொங்கல் திருவிழா.தமிழர்திருவிழாவாம் பொங்கல்திருவிழா சமய சார்பின்றி அனைவரும் நல்லுறவு கொண்டு சமுதாயவிழாவாக கொண்டாடி தமிழரின் பண்பாட்டினை உணர்த்தும் நாள். தமிழர்களின் மனித நேயப் பண்பாட்டை உலகிற்கே எடுத்துக்காட்டும் அற்புத திருநாள்.இயற்கைத்திருநாள்.இயற்கையை வழிபடும் திருநாள்.சமுதாய நகர்வுகளுக்கான அச்சாணியான வேளாண்மையை வழிபடும் திருநாள்.வேளாண்மை உற்பத்திக்காக உழைத்து உதவிசெய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள்.உழைப்பின் உயர்வை உழவின் சிறப்பை உறவின் பெருமையை உலகனைத்தும் பரவியிருகின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் திருநாள்.முக்காலத்தும் மனிதவாழ்வுக்கு தேவையான வழிகாட்டுதலை,அறிவுரைகளை தமிழருக்கு மட்டுமின்றி உலகிலுள்ள மனித குலத்துக்கே எல்லா காலத்திலும் பொருந்தும்படியாக போதித்த திருவள்ளுவப்பெருந்தகையாரைப் போற்றி வணங்கும் திருநாள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாய்மொழிக்கேற்ப புதியனவற்றை புகுத்திக் கொண்டாடும் திருநாள்.புஞ்சை,நஞ்சை நிலங்களானாலும் சரி,வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி,இரவு பகலாக உழைத்து உழுது,பயிரிட்டு,பாதுகாத்து,அறுவடை செய்த உணவுப்பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த நன்னாள்.சாதி,மத பேதமின்றி தமிழன் என்ற ஒரே குடையின்கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து தமிழர் என்ற வார்த்தைக்கு மட்டும் நான்கு எழுத்து அல்ல? பொங்கல் என்ற சொல்லுக்கும் நான்கு எழுத்து! அதுமட்டுமல்ல,பழையனவற்றைப்போக்கும் பண்டிகை என்னும் போகிப் பண்டிகை,பொங்கல்,மாட்டுப்பொங்கல்,காணும் பொங்கல்தமிழர் திருவிழா கொண்டாடுவதும் நான்கு நாட்கள் என்ற பெருமை கொண்ட திருநாள்.இல்லங்கள் இணைந்து,உள்ளங்கள் இணைந்து ஊர்கள் இணைந்து கொண்டாடும் சமுதாயத்திருநாளைப்பற்றி தாங்கள் நன்கு அறிந்து பெருமைப்படுங்க.அதைவிடுத்து அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?என்று கேட்டுவிட்டீரே! அமாவாசை அனைவருக்கும் பொதுவானதுதாங்க!அதாவது நிலம் பொது,நிலா பொது,கதிர் பொது,கதிரவன் பொது,நீரும் பொது,நெருப்பும் பொது,இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடும் பொங்கலும் பொது.என்பதை இனியாவது தெரிந்துகொள்ளுங்க! உங்க பகுதியில் அனைவரையும் ஒன்று கூட்டி பொங்கல்விழா கொண்டாடுங்க!..
என
அன்பன்
பரமேஸ்வரன்.C
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.
நன்றிங்க..
http://konguthendral.blogspot.com
http://paramesdriver.blogspot.com
+91 9585600733
paramesdriver@gmail.com...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு