01 ஜனவரி 2015

கறிவேப்பிலை மீன் குழம்பு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.முகநூல் நண்பர் திரு.முகம்மது அலி அவர்களது தினம் ஒரு உணவு பதிவில் ஒரு பகிர்வு  தங்களுக்காக
கறிவேப்பிலை மீன் குழம்பு
தேவையானது :-
மீன் - அரை கிலோ (வஞ்சிரம் (அ) ஏதேனும் முள்ளில்லாத மீன்)
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - இரண்டு
முழுப் பூண்டு - ஒன்று
புளிக் கரைசல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
வரமிளகாய் - 5 (அ) 6
பூண்டு - 4 பல்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வதக்க:
கறிவேப்பிலை - ஒன்றரை கப்
தேங்காய்பூ - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - கால் கப்
கடுகு - அரைத் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :-
மீனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும்.
வதக்க வேண்டியவற்றை பச்சை வாசனை போக வதக்கியெடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் வறுத்தவற்றுடன் வதக்கியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், மீனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான கறிவேப்பிலை மீன் குழம்பு தயார். சூடான சாதம், இட்லி, தோசை ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக