மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
ரிட் மனு என்பதைப் பற்றி இங்கு காண்போம்..
"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா?

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல்
தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலம் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.
உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை! என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.
நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம்.
நீங்கள் புகார் அளித்து 60 நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை அதற்குரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
“ரிட்” மனுவை ஐந்து வகைகளில் தாக்கல் செய்யலாம்.
1.Writ of Mandamus நீதிப்பேராணை:
***************************************************
தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். இதற்கு நீதிப்பேராணை என்று பெயர். இதனை பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
2.Certiorari writ செர்ஷயோரரி ரிட்
**************************************************
ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ/ அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
3.Quowarranto Writ கோவாரண்டோ ரிட் மனு
******************************************************************
எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியுடன் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது இந்த மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.
4.Prohibition Writ பிராகிபிஷன் ரிட் மனு
********************************************************
ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும்போது, அதனை தடுக்கப் போடப்படும் மனு இதுவாகும். இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
5.Hebeas Corpus Writ ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு
**************************************************************************
இதற்கு ஆள் கொணர்வு ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவரை காணவில்லை என்றாலோ, அல்லது ஒருவரை காவல்துறையினர் தவறாக காவலில் வைத்திருந்தாலோ, அல்லது ஒருவரை யாரோ கடத்தி எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரித்து, நீதிமன்றமானது அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடும்.
பதிவிட்ட ஃபேஸ்புக் நண்பர்
திரு.செல்வம் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிங்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக