22 ஜனவரி 2015

ரீஃபைண்டு ஆயில்.பயன்படுத்தாதீங்க!!!.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.ரீபைண்டு ஆயில் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க.......
 ரீபைண்ட் ஆயில் மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )
எனவே ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்கலாமா?
           .  ரீபைண்ட் ஆயில் என்றாலே சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் என்றுதான் நினைத்து வருகிறோம்.ஆனால் ரீபைண்டு ஆயில் சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத சக்கை எண்ணெய் ஆகும்.
ரீபைண்ட் ஆயில் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்க!......
            மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதற்காக பெரிய தொகைகளை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள்  மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில். யோசிச்சு பாருங்க இவ்வளவு கெடுதலான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி,நாமே விலை கொடுத்து நம் ஆரோக்கியத்தை  பாழ்படுத்திக் கொள்கிறோம்.
அப்படி என்றால் எந்த எண்ணெய் தான் வாங்குவது? 
               ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதைத் தானே நம்ம முன்னோர்கள் பயன்படுத்தினாங்க.
   கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா மாரடைப்பு,இரத்தக்கொதிப்பு வரும்,அதிக எடை கூடும் என சொல்லுவாங்களே! என நினைக்கிறீர்களா?
கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
               எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
            ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம் என்று பார்க்காதீங்க! டாக்டருக்கு செலவு செய்வதையும் பாருங்க!அதனால் விலைக்கேற்றபடி குறைத்து பயன்படுத்துங்க
  நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ? நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.
தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...