21 ஜனவரி 2015

பொது அறிவினை பட்டை தீட்டுங்க!.........

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். இதோ பொது அறிவு பட்டை தீட்ட..............
      . WWF - World Wide fund for Nature
இந்த நிறுவனம் உலகம் முழுவதும் வன உயிரினங்களையும் வனப்பகுதிகளையும் பாதுகாக்க என்று ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்! 

 <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
1.சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.
2.ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.
3உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
4.மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
5.இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யா
6.விலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.
7.மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியா
8.தோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு
9.மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)
10.கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.
11 • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
12• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
13• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
14• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
15• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
16• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.
17• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
18• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.
19• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
20• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.
21• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.
22• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
23• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.
24• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
25• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.
26• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.
27*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...