29 ஆகஸ்ட் 2015

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு FB விண்ணப்பம்.



 போக்குவரத்துக்கு  தடை ஏற்படுத்துவதை தடுக்க கோரி விண்ணப்பம்.

அனுப்புநர்;
               C.பரமேஸ்வரன்,
                        செயலாளர் ,
                         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
             (அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு)
                  Mobile Number: 9585600733   

மரியாதைக்குரிய ஐயா,
        வணக்கம்.கடந்த சில தினங்களாக தாளவாடி சுற்றுவட்டாரங்களில் வெட்டப்படும் கரும்புகளை பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி ஏற்றுகின்றனர்.
              
              குறிப்பாக பேருந்துகள் ஒருமணி நேர இடைவெளியில் இயக்கப்படும் சூழ்நிலையில் அதிலும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி இயக்கும் நேரங்களில் பயணிகளின் சூழ்நிலையை பற்றிக் கவலைப்படாமல் மணிக்கணக்கில் தாமதம் செய்து பிறகு வழி விடுகின்றனர்.அத்துடன் அனுமதிக்கப்பட அளவை விட அதிகமான  பாரங்களை ஏற்றி இயக்குவதால் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு மாறாக நடுச்சாலையில் நிறுத்திக்கொள்கின்றனர்.இதனால் சாலை ஓரம் ஆபத்தாக ஒதுங்கிச்செல்லும் நிலை.சம்பவ இடத்திலிருந்து உரிய பாதுகாப்பு அல்லது உதவி கேட்டு காவல்துறையை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் பயணிகள் பேருந்தை பாதுகாப்பில்லாமல் இயக்க வேண்டி உள்ளது.
            
              எனவே தங்கள் மேலான சமூகம் அவர்கள்  பயணிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பிற வாகன இயக்கங்களின் நலன் கருதி போக்குவரத்து இல்லாத நேரங்களில் கரும்பு ஏற்றவும்,அனுமதிக்கப்பட்ட அளவு பாரங்களை ஏற்றி இயக்கவும்,அனைத்து வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யாமல் வழிவிட்டு சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து மலைவாழ் பொதுமக்களுக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

               உதாரணத்திற்காக இத்துடன் புகைப்படம் ஒன்று அனுப்பி உள்ளேன்.
(நாள் 28.08.2015 மாலை4.15மணி தாளவாடி-பனகஹள்ளி செல்லும் வழியில் எரகனஹள்ளி தாண்டி பசப்பதொட்டி என்ற ஊர் அருகில் மற்ற போக்குவரத்து தடை ஏற்படுத்திக்கொண்டு பயணிகளைப்பற்றி கவலைப்படாமல்  வழிவிட மறுத்தது மட்டுமின்றி  ஓட்டுநர் லாரியின் கூரைமேல் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.)

 இப்படிக்கு,சமூக நலன் கருதி தங்கள் உண்மையுள்ள C.பரமேஸ்வரன், (Mobile Number :9585600733)
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.


அனுப்பிய தேதி ;29.08.2015 இரவு 8.57மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...