10 ஆகஸ்ட் 2015

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கம்பெனி ஆட்சியும் பேரரசாட்சியும்

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம். கி.பி.19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களின் கம்பெனி ஆட்சியும், 1835 ல் நடந்த சிப்பாய்க்கலகத்திற்கு பிறகு ஆங்கிலேய பேரரசி விக்டோரியா மகாராணியார் நேரடிப்பார்வையில் நடைபெற்ற பேரரசு ஆட்சியும் பற்றி காண்போம்.

     கி.பி.19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலைகொண்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக்கம்பெனி சென்னை மண்டலத்தில்  திருவிதாங்கூர்,புதுக்கோட்டை முதலிய ஒரு சில சமஸ்தானங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகள் முழுவதையும் தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தது.
 கி.பி.1789 ஆம் ஆண்டில் வெல்லெஸ்லி பிரபு தஞ்சை மன்னர் சரபோஜியுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு அந்த மன்னர் வாழ்ந்த கோட்டை ஒன்றைத் தவிர தஞ்சை முழுவதையும் ரெஸிடெண்டின் ஆட்சியின்  கீழ் கொண்டு வந்தார்.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டானியநாடாளுமன்றம் ஆங்கில வணிகக் குழுவினர் (கம்பெனி ஆட்சி)ஆட்சி முறையை ஒழுங்குபடுத்தவும் , அதன் மீது நேரடிப்பார்வையைச் செலுத்தவும் சட்டங்கள் கொண்டு வந்தது. கி.பி.1723-இல் ஒழுங்குமுறை சட்டத்தையும், கி.பி.1784-இல் பிட் இந்திய
சட்டத்தையும், பிற சட்டங்களையும் கொண்டு வந்தது. சென்னை,மும்பாய் முதலிய மாநில ஆளுநர்களுக்கு மலோக, ‘தலைமைஆளுநர்’ (GOVERNER - GENERAL) நியமனம் செய்யப் பெற்றார். பிட்இந்தியா சட்டப்படி, சென்னை ஆளுநர்சபையில் ஆளுநருடன்சேர்ந்து நான்கு உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டனர். ஆளுநர்,படையமைப்பு, வரித்தண்டல், போர்     ஆகிய அனைத்துநிர்வாகங்களையும் கவனித்து வந்தார்.

    19-ஆம் நூற்றாண்டில் படிப்படியாக வளர்ந்த ஆங்கிலக்கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் மாநிலம் பல மாவட்டங்களாகப்பிரிக்கப் பெற்று, கலெக்டர்களின் நிர்வாகத்தின்கீழ்க் கொணரப்பெற்றது. மாவட்ட நீதிபதிகள் நீதித்துறைப் பொறுப்புகளை ஏற்றுநடத்தினர்.
 1813-ஆம் ஆண்டுச் சட்டம் கல்வி, சட்டம், நீதி,வரித்தண்டல் ஆகியவற்றில் ஆளுநரின் பொறுப்புகளைவரையறுத்தது. 1833-ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப் பெற்றசட்டத்தால், சென்னை மண்டலத்தில் நிலவி வந்த சட்டங்களை
ஒழித்து, நாடு முழுவதிற்கும் பொதுவாகத் தலைமை ஆளுநர்சபையில் இயற்றப்படும் சட்டங்களே நடைமுறைப் படுத்தப்பெற்றன. தலைமை ஆளுநர் வங்கத்திலிருந்து செயல்பட்டார்.

    கி.பி. 1858-ஆம் ஆண்டு கொண்டு வரப்பெற்ற இந்திய அரசுச்சட்டப்படி, அவ்வாண்டு ஆகஸ்டுத் திங்களிலிருந்து இந்தியாமுழுவதும், இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்த விக்டோரியாபேரரசியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலக் கம்பெனிஆதிக்கம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. தலைமை ஆளுநர்
இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். மாநிலஆளுநர்கள் இங்கிலாந்து அரசியால் நியமிக்கப்பட்டனர். இந்தியாமுழுவதிற்குமாக இங்கிலாந்தில் இயற்றப்படும் சட்டங்களின்படி,ஆளுநர்கள் பொதுத்துறை அதிகாரிகளைக் கொண்டு மாநிலங்களைஆண்டனர்.


 மாநிலச் சட்டமன்றம்

 கி.பி. 1861-ஆம் ஆண்டு இந்திய மேலவைச் சட்டப்படி, சென்னை ஆளுநர் மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றும் ஒருசட்டமன்றத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றார். கி.பி. 1880-ஆம் ஆண்டுச் சட்டப்படி மாநில ஆளுநர் சபையில் 12உறுப்பினர்கள் இருந்தனர். கி.பி. 1892-ஆம் ஆண்டு இந்தியமேலவைச் சட்டம், மக்களாட்சி முறைக்கு ஓரளவு வழி வகுத்ததுஎனலாம். மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பெற்றனர். கி.பி. 1895-இல் ஆளுநரைத் தலைவராகக் கொண்டமன்றத்தில் 20 உறுப்பினர் இருந்தனர். இதில் பாதிப்பேர்அரசு ஊழியராவர். மீதமுள்ளவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். அக்காலகட்டத்தில் சென்னை மண்டலத்தில் 26மாவட்டங்கள் இருந்தன. தற்போதைய கர்நாடகம், கேரளம்,
ஆந்திரம் ஆகிய மாநிலப் பகுதிகள் அப்போதைய சென்னைமண்டலத்தில் இருந்தன. 1909-ஆம் ஆண்டுச் சட்டப்படி,சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 47 ஆகஉயர்ந்தது. இதில் 21 பேர் அரசு அலுவலர்கள் ஆவர். 5 பேர்
ஆளுநரால்நியமனமபெற்றவர்.எனவேமக்கள்பிரதிநிதிகளுக்குப்பெரும்பான்மை இல்லாத நிலையால் எந்தப் பயனும் இல்லாதுஇருந்தது. 1919-ஆம் ஆண்டு மாண்டேகு - செம்ஸ்போர்ட்சீர்திருத்தங்கள் என்ற பெயரால் அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது. இதனால் 132 உறுப்பினர்களைக் கொண்டதாகச்சட்டமன்றம் விரிவுபெற்றது. இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட98 பேர் இடம் பெற்றனர். இச்சட்டத்தால் இந்தியாவில் ஓரளவுமக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்தது எனலாம்.


இரட்டை ஆட்சிமுறை
 



 1919-ஆம் ஆண்டுச் சட்டத்தால் சென்னை மண்டலத்தில்
இரட்டை ஆட்சி முறை வந்தது. ஆளுநரின் கருத்துரைக் குழுவில்
அவரால் அமர்த்தப்பட்ட உறுப்பினர் ஒரு புறமும், மக்களால்
தேர்ந்தேடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஆளுநரால் அமர்த்தப்பட்ட
அமைச்சர்கள் ஒரு புறமும் நிருவாகப் பொறுப்பை இரண்டாகப்
பிரித்து ஆண்டனர்.     ஆனால்     ஆளுநரே அனைத்து
அதிகாரங்களும் பெற்ற தலைவராக விளங்கினார்

 1920-இல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி
பெற்றது. இக்கட்சி 1920-லிருந்து 1926 வரை ஆறாண்டுகள்
சென்னை மாநிலத்தை ஆண்டது. 1926-இல் நிகழ்ந்த பொதுத்
தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியுற்றது. காங்கிரஸ் கட்சி வெற்றி
பெற்றது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி வெள்ளையர்களை இந்திய
மண்ணிலிருந்து வெளியேற்றும் போராட்டத்தில் தீவிரமாக
ஈடுபட்டது. 1930-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில்ஜஸ்டிஸ் கட்சி
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 1919-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தையும் அதன்
இரட்டை ஆட்சி முறையையும்     எதிர்த்தும், இந்திய
விடுதலையைக் கோரியும் காந்தியடிகள் தலைமையில் நடந்த
போராட்டங்களுக்குப் பிறகு, 1935-ஆம் ஆண்டில் இந்திய அரசுச்
சட்டம் கொண்டு வரப் பெற்றது. இதன்படி, சென்னை மாநிலத்தில்
இரு சட்ட சபைகள் அமைக்கப்பெற்றன. இரட்டை ஆட்சி முறை
ஒழிக்கப்பட்டது. நடுவண் ஆட்சி கூட்டாட்சி முறையில் இயங்க வழி
செய்தது. இந்தியாவில 11 மாநிலங்களும், கவர்னர் - ஜெனரலுக்கு
உட்பட்ட ஆறுபகுதிகளும்     கூட்டாட்சியில் அடங்கின.
சட்டமன்றங்களும் அவற்றால் அமைக்கப்படும் அமைச்சரவையுமே
எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றன. ஆளுநருக்குத் தனி
அதிகாரங்கள் இருந்தன.


 1935-ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி, சென்னை மேலவை
(Legislative Council), கீழவை (Legislative Assembly) என
இரு     சட்டமன்றங்கள்     ஏற்பட்டன.     மேலவையில் 56
உறுப்பினர்களும், கீழவையில் 315 உறுப்பினர்களும் இருந்தனர்.

 இந்திய விடுதலை..
 நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஆங்கில அரசு
இந்திய நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டது.
கி.பி. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்
போருக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டில் தொழிற்கட்சி
பெரும்பான்மை பெற்று அமைச்சரவை அமைத்தது. இந்திய
விடுதலைக்கான தீர்மானத்தை இந்த அமைச்சரவை கொண்டு
வந்தது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா,
பாரதம், பாகிஸ்தான் என இரு கூறுகளாக்கப் பெற்று விடுதலை
அடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...