21 ஆகஸ்ட் 2015

நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்க...

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். வெள்ளை சர்க்கரை என்னும் சீனி சர்க்கரை உடல் நலத்துக்கு கேடு..எனவே நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்,கருப்பட்டி பயன்படுத்துவோம்.
                         கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் கலரில் தான் கிடைக்கும். 

       அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. 

                           ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது. அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் "சல்ஃபர் டையாக்ஸைடு" கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை "பிளீச்" செய்யும். அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு "அஃப்ஃபினேஷன்" எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது
                   தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
உங்களின் இனிப்பு தேவைகளுக்கு கெமிக்கல் கலப்பு இல்லாத நாட்டுசர்க்கரை ,வெல்லம் ,பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு , மலைத்தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...