02 ஆகஸ்ட் 2015

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம்..!


மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம். நம்ம இந்தியாவின் மிக நீளமான  நெடுஞ்சாலை மேம்பாலம் இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைப்போல மிக நீளமான  ரயில் பாலம் பற்றி அறிவோம்.
                             இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம் என்ற பெருமையை வேம்பநாடு ரயில் பாலம் பெற்றிருக்கிறது. கொச்சி நகரின் எடப்பள்ளி ரயில் நிலையத்திற்கும் வல்லர்படம் தீவிற்கும் இடையில் இந்த பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
பொருளாதாரத்தில் வேகமாக வளரந்து வரும் இந்தியாவில், முன்பு சர்வதேச தரத்திலான ஒரு சரக்கு மாற்று வசதி கொண்ட துறைமுகம் கூட இல்லை. இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால் அந்த குறையை வல்லர்படம் துறைமுகம்தான் நிறைவு செய்து வருகிறது. இந்த துறைமுகத்திற்காகவே அமைக்கப்பட்ட மிக முக்கியமான ரயில் பாலம்தான் இது. இந்த ரயில் வழித்தடம் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த பாலம் 4.62 கிமீ நீளம் கொண்டது. 5 மீட்டர் அகலமும் 7.5 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தில் 134 தூண்கள் இருக்கின்றன.
இந்த பாலத்தின் 80 சதவீதம் நீருக்கு மேலே கட்டப்பட்டிருக்கிறது. அத்துடன் 3 குட்டித் தீவுகளையும் கடந்து செல்கிறது. எடப்பள்ளியிலிருக்கும் சரக்கு கையாளும் நிலையத்திற்கும் வல்லர்படம் துறைமுகத்தையும் இணைக்கிறது.
2007ம் ஆண்டு இந்த ரயில் பாலத்தின் கட்டுமானம் துவங்கி 2010ல் முடிந்தது. 2011ல் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. Afcons infrastructure ltd நிறுவனம் இந்த ரயில் பாலத்தை கட்டமைத்தது.
இந்த ரயில் பாலம் ரூ.298 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாலத்திற்காக 18,000 டன் சிமென்ட்டும் 50,000 டன் உலோகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய பொறியியல் துறையின் வல்லமையை எடுத்துக்காட்டும் பாலமாக இது கம்பீரமாக நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...