மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இதோ படியுங்க..இருபது ரூபாய் டாக்டர் பற்றி தெரிந்துகொள்ளுங்க..
இன்று இந்த பதிவை படித்து விட்டு, பிரிஸ்கிரிப்சன்
ரிஸிப்ட்டில் குறிப்பிட்டிருக்கும் அவரது செல்லில்
அழைத்து, "எனது சந்தேகங்கள் சிலவற்றுக்கு விளக்கம்
கேட்கலாமா? நீங்க பிசியா ப்ரீயா" என்றபோது "தாராளமா
கேளுங்க" என்றார். போனில் பேசக்கூட தயங்கும் டாக்டர்கள்
உலகில், எல்லா விபரமும் சொல்லிவிட்டு, "சந்தேகமிருந்தா
திரும்ப கூப்பிடுங்க!" என்றார். நோயை பார்க்கின் அசராமல்
கல்லாக்கட்டும் இவ்வுலகில், இந்த டாக்டர் ரொம்பவே வித்தியாசமானவர்.
-------
கோவை ஆவாரம் பாளையம் போகும் வழியில்
ராமகிருஷ்ணா கல்லூரி எதிரில் ஒரு சிறிய கிளீனிக். .
வழி தெரியாவிட்டால் "இருபது ரூபாய்" டாக்டர் கிளீனிக்
எங்க இருக்குங்க" என்று கேட்டால் போதும். . அனைவரும்
வழி காட்டுவார்கள். .
சாதாரண காய்ச்சல் என்று போனாலே ஆயிரக்கணக்கில்
புடுங்கும் ஆஸ்பத்திகளுக்கு மத்தியில். . என்ன வியாதியாக இருந்தாலும். .அதற்கு தகுந்த ஆலோசனை. . கொடுத்து
குறைவான விலையுள்ள மருந்துகளை எழுதி கொடுத்து
ஊசி (தேவைபட்டால்) போடுவார். அவ்வளவுதான். இதற்கு
அவர் வாங்கும் பணமே இருபது ரூபாய் தான். . அதுவும்
பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தவர். சில்லரை தட்டுப்பாட்டால் நோயாளிகள் கேட்டுக்கொண்டதற்க்கு
இணங்க இருபது ரூபாய் வாங்குகிறார். .
சில வியாதிகளுக்கு நாட்டு மருந்து, அயுர்வேதம் தான்
சிறந்தது என யோசித்தால் அதையும் அவரே கூறி அந்த
அந்த மருத்துவர் பெயரை பரிந்துரை செய்து சீட்டு
எழுதியும் கொடுப்பார். .
"சீட்டை காட்டுங்க காசு கம்மியா வாங்குவாங்க புரியுதா"
என அதட்டுவதை கேட்க நன்றாக இருக்கும். .
முதல் முதலாக கேள்விபட்டதும் நான் நம்பவேயில்லை. .
பிறகு போய் பார்த்தேன். இதுவரை மூன்று முறை
சென்றுள்ளேன். . அதில் கல் அடைப்பு பிரச்சனைக்கு ஒரு
முறை போய் பார்த்தேன். .
"தம்பி இதுக்கு நாட்டு மருந்து தான் கரெக்ட்டு" என்று ஒரு
சீட்டை எடுத்து எழுதி எந்த பஸ்ஸில் ஏற வேண்டும் இறங்கும்
இடம். . சில அடையாளங்கள் என குழந்தைக்கு கூறுவதை
போல் கூறி, "பாத்துட்டு என்னானு போன் பண்ணி சொல்லு
புரியுதா?" என்பார்.
மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே வந்து பார்பார். .
வியாபாரமாகி போன இந்த மருத்துவ உலகில் சேவை மனப்பான்மையுள்ள சிலரில் இந்த "இருபது ரூபாய்"
டாக்டரும் ஒருவர்.

ஆழ்ந்த இரங்கல்கள் :( :( :(
பதிலளிநீக்குகோவை "இருபது ருபாய் டாக்டர்" என்றழைக்கப்பட்ட மருத்துவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் .
ஏழைகளுக்காகவே என்னுடைய மருத்துவ சேவை என்ற லட்சியம் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் 20 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு எத்தனையோ ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தவர் .
இவரது மருத்துவ சேவையால் கோவைக்கு பெருமை தேடி கொடுத்து " கோவையின் அடையாளம் "என்ற பட்டமும் "இருபது ரூபாய் டாக்டர்"என்று ஏழைகளின் மனதில்பட்டமும் பெற்றவர்.
இவரது இறப்பு மருத்துவ உலகிற்கு பெரும் இழப்பு, நகர்புறத்தில் உள்ள எத்தனையோ ஏழைகளுக்கு இனி இவரை போன்றொரு மருத்துவர் வருவாரா???...
Dr.பாலசுப்பிரமணியம் அய்யா அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களுடைய குடும்பத்தாரின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் ...
அய்யா டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்