30 ஜூன் 2015

தலைக்கவசம் அணியுங்க-புனித ஜோசப் மேனிலைப்பள்ளி-சூசைபுரம்.

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.  1ஜூலை2015இன்றுஈரோடு மாவட்டம் சூசைபுரம் புனித ஜோசப் மேனிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக தலைக்கவசம் அணியுங்க விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 
என அன்பன் 
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம்,
தமிழ்நாடு.
http://konguthendral.blogspot.com
http://consumerandroad.blogspot.com
 

27 ஜூன் 2015

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
 வீட்டிலேயே முடி வளர்ச்சி தைலம் தயாரிக்கலாம்...அதன் விவரம் தங்களது பார்வைக்காக..

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.
இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

செல்போனின் IMEI எண் தெரிந்து கொள்ள வேண்டுமா?

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

             உங்க செல்போனின் IMEI  (International Mobile Equipment Identity) எண் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக..
1.உங்க செல்போனிலிருந்து  *#06#  என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்க.
2.உங்க செல்போனுக்கு ஒரு 15 டிஜிட் நெம்பர் கிடைக்கும்.
3.இந்த எண்தாங்க உங்க செல்போனின் IMEI எண் இந்த எண்ணை உடனே பத்திரமாக எழுதி வையுங்க.
4.செல்போன் தொலைந்துவிட்டால் உடனே இந்த எண்ணை cop@vsnl.net என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்க.
5.போலிசுக்கு போக வேண்டியதில்லைங்க.
6.உங்க செல்போனை 24 மணி நேரத்தில்  GPRS மற்றும் INTERNET  மூலம் கண்டுபிடித்துவிடுவார்கள்.
7.உங்க செல்போனில் வேறு சிம் போட்டு  பயன்படுத்தினாலும் கூட அதை கண்டுபிடித்துவிடுவார்கள்.


24 ஜூன் 2015

தலைக்கவசம் அணியுங்க விவாத நிகழ்ச்சி-புதிய தலைமுறை டிவி,''உரக்கச்சொல்லுங்க'' நிகழ்ச்சியில்....



மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். 

       தலைக்கவசம் (HELMET) அணியுங்க பற்றிய விவாத நிகழ்ச்சி நம்ம தொலைக்காட்சியாம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்....பாருங்க-விழிப்புணர்வு பெறுங்க.....
          

28-06-15 விவரம்
                  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வருகிற 28.06.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் தங்களுடைய பார்வைக்காக.....



















28-06-15 விவரம்
06:00 am - 07:00 am முத்துச்சரம்
07:00 am - 08:00 am புதுப்புது அர்த்தங்கள்
08:00 am - 08:30 am புதிய விடியல்
08:30 am - 09:03 am உழவுக்கு உயிரூட்டு-91
09:03 am - 09:30 am சிக்கனம் சேமிப்பு செல்வம்
09:30 am - 10:00 am புதுப்புது அர்த்தங்கள்
10:00 am - 10:30 am விரைவு செய்திகள்
10:30 am - 11:00 am உரக்க சொல்லுங்கள்-35
11:00 am - 11:30 am உரக்க சொல்லுங்கள்
11:30 am - 12:30 pm புதிய தலைமுறை செய்திகள்
12:30 pm - 1:00 pm சாமானியருடன் ஒருநாள்
1:00 pm - 1:30 pm மதியம் வரை இன்று
1:30 pm - 2:00 pm கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
2:00 pm - 3:00 pm அக்னிப்பரிட்சை
3:00 pm - 3:30 pm 3 வரை இன்று
3:30 pm - 4:00 pm ரோபோ லீக்ஸ்
4:00 pm - 4:30 pm 4 வரை இன்று
4:30 pm - 5:00 pm ஆயுதம் செய்வோம்
5:00 pm - 5:30 pm 5 வரை இன்று
5:30 pm - 6:00 pm நம்மால் முடியும் -68
6:00 pm - 6:30 pm 6 வரை இன்று
6:30 pm - 7:00 pm டென்ட் கொட்டாய்
7:00 pm - 7:30 pm இன்றைய தினம்
7:30 pm - 8:03 pm சர்வதேச ஆவணப்படம்
8:03 pm - 8:30 pm புதிய தலைமுறை செய்திகள்
8:30 pm - 9:03 pm ரௌத்திரம் பழகு
9:03 pm - 10:00 pm உரக்க சொல்லுங்கள்
10:00 pm - 10:30 pm விரைவு செய்திகள்
10:30 pm - 11:03 pm ரோபோ லீக்ஸ்
11:03 pm - 00:00 am புதிய தலைமுறை செய்திகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் தொடர்பு எண்....

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். நம்ம ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க தேவைப்படுகிறதா? இதோ நம்முடைய பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை பற்றி புகார் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களது பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் எண் தங்களுடைய கவனத்திற்காக.....உங்க பகுதியின் பிரச்சினைகளை பேஸ்புக் முகவரியில் புகார் பதிவு செய்யலாம் மற்றும் வீடியோ எடுத்து அல்லது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம்.


மொபைல் எண்ணை அழைக்கும்போது மறைப்பது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். உங்க அலைபேசி எண் நீங்க அழைக்கும் நபர்களுக்கு தெரியாமல் மறைக்க.............
மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!
ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின்
மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் எண் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த தொழில்நுட்பம்  (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.


                   அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல்
போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர்
தெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.

உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்
அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

                    
                இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.
            
         ****(India users need to enable Caller ID blocking before they can use the blocking prefix.)
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
 

       இதே முறையை இப்படியும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.
அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென
நினைத்தால், மீண்டும்     கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.


        முக்கிய குறிப்பு:
                  இந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

               பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.


                    Use a caller ID blocking prefix. In many countries, you can enter a code before you dial a number and your phone number will be blocked from appearing on the recipient's caller ID. The code varies depending on your country and your service provider, and it is not possible to block in all countries. Enter the prefix, followed immediately by the number you are dialing. For example, if you are in the US and want to call (555)123-4567, you would enter *675551234567.
North America - *67 or #31#
Albania, Australia, Denmark, Greece, Israel, Italy, Netherlands, Sweden: #31#
Argentina, Iceland, Switzerland, South Africa: *31*
Germany: *31# or #31#
Hong Kong: 133
Japan: 184
UK and Ireland: 141
New Zealand: 0197 (Telecom) or *67 (Vodafone)
Australia: 1831 or #31#
India: *31# - Must be enabled by network.
If your country is not listed, chances are you can use either *67 or #31#. Most GSM mobile networks work with #31#.[1]

Contact your carrier. If you want all of your phone calls to always be blocked, you can contact your carrier and set up permanent Caller ID blocking. There is typically a charge for this, and the fees and terms will vary from carrier to carrier.
Most pre-paid plans cannot enable permanent Caller ID blocking.
India users need to enable Caller ID blocking before they can use the blocking prefix.
Some people have Anonymous Call Rejection enabled, which means your call will not be able to be completed unless you call from an unblocked number.
If you want to make an unblocked call after setting up a block on all your outgoing calls, you will need to enter the unblocking prefix before the phone number. Some of these include:
Australia: 1832
Ireland: 142
UK: 1470
North America: *82
New Zealand: 0196 (Telecom) or *82 (Vodafone)
Hong Kong: 1357
Japan: 186
Most GSM Networks: *31#


முத்தமிழ்ச்சங்கம் வழங்கும் முகநூல் வேந்தர் விருது-2015

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
              தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்டங்களில் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்விலும் பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் 96 பேருக்கு காஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள வாகை சூட வா... என்ற நிகழ்வில்பட்டிமன்றம் நடுவர், எழுத்தாளர், திரைப்பட நடிகர், கலைமாமணி என பன்முகம் கொண்ட பேராசிரியர் முனைவர்*கு.ஞானசம்பந்தன்* அவர்களின் திருக்கரங்களால்
*முகநூல் வேந்தர்* என்ற விருது வழங்கப்படவுள்ளது..
மேலும் இந்நிகழ்வு உலக சாதனையாக மாற உள்ளது.
முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் பயன்படுத்தி *முகநூல்வேந்தர் விருது* பெறும் சமூக ஆர்வலர்கள் 96 பேரும் மேடையில் சான்றோர்கள் முன்னிலையில் விருது பெற்று ஒருங்கே நிற்கும் தருவாயில் அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1000 கல்லூரி மாணவ/மாணவிகள்,
"உலகில் உள்ள முகநூல் அன்பர்கள் அனைவரும் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்து ,அப்புகைப்படத்தை ஒரே நேரத்தில் அந்த 1000 பேரும் முகநூலில் பதிவேற்றவுள்ளார்கள்.இது உலக சாதனையாக மாற உள்ளது.
நிகழ்ச்சியினை 26.7.2015 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... நண்பர்களே.. நமது பணிகளை நாமறியாமலேயே எங்கோ சில நண்பர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...!?












பரமேஸ்வரன்.9585600733

BARCODE NUMBERS- பார்கோடு எண்கள்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். பட்டை வடிவ கோட்டின் வடிவத்தை வைத்து அறிந்து தயாரித்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வது பற்றி காண்போம்.

               நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருப்பதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
                     (தவிர்ப்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),
                         சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.
                                        இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
                           நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons
Kadambur Vijay இன் புகைப்படம்.

23 ஜூன் 2015

அருந்ததிய மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுவிழா--21.06.2015

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். 
         ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அருந்ததிய மாணவ,மாணவிகளுக்கு பாராட்டும் பரிசளிப்பும் வழங்கும்விழா ஜூன் 21ந் தேதி  P.V. லாட்ஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது. அது சமயம் நம்ம சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. P.L.சுந்தரம் M.L.A., (பவானிசாகர் தொகுதி) உட்பட நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பங்களித்த காட்சி ....
 திருமிகு ,P.L. சுந்தரம் M.L.A.,சிறப்பு உரை...
 திருமிகு. R.கருப்புசாமி,READ இயக்குநர் வரவேற்புரை
    திரு.C.பரமேஸ்வரன்,வாழ்த்துரை..
திரு.C. பரமேஸ்வரன் அவர்கள் பரிசு வழங்கியபோது.....

 

21 ஜூன் 2015

2005ஆண்டு வரை அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது.....

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது...
  செய்தியிட்ட  2015ஜூன் 21ந்தேதியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிங்க.


                        புதுடில்லி: 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள், வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில், 'டிபாசிட்' செய்யலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
                      கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட, 1,000 மற்றும் 500 ரூபாய் உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே, இந்த
                            ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, கடந்த டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், ஜூன், 30ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. இதனால், 'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை,டிபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

                        ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை என்றால், அது, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு; அந்த நோட்டுகள் செல்லுபடியாகாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை, அதற்கு பின் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.
                     இதுகுறித்து, ரிசர்வ் வங்கிவட்டாரங்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை தான். இதற்கு முன், நம் நாட்டில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்தன.
அழித்தது எவ்வளவு?
               * கடந்த ஜனவரியுடன் முடிவடைந்த, 13 மாத காலத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 164 கோடி எண்ணிக்கை கொண்ட,21 ஆயிரத்து, 750 கோடி ரூபாய்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளன.
                            *ரிசர்வ் வங்கியால் அழிக்கப்பட்ட நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 87 கோடி; 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 56 கோடி; 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 21 கோடி. இந்த தகவல், கடந்த மார்ச் மாதம் பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.
 

19 ஜூன் 2015

தலைக் கவசம் அணிவோம், நமது உயிர் காப்போம்..

                 தர்மம் தலை காக்கும், தலைக் கவசமும் தலை காக்கும்.
மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
           தலைக்கவசம் அணிவோம் நமது உயிரை காப்போம். 
அரசு உத்தரவை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.ஹெல்மெட் அணிவது நமக்கு பாதுகாப்பு  என்பதை உணர்வோம்...


சமூகநலனில் அக்கறையுள்ள
 அன்பன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 

15 ஜூன் 2015

CHENNAI ANNA UNIVERSITY YRC CAMP @ HASANUR HILLS (THALAVADI - ERODE Dt)



மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். சென்னை அண்ணா பல்கலை கழகம்  பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களது தலைமையிலான ANNA UNIVERSITY- SCHOOL OF ARCHITECTURE AND PLANNING ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளேனிங் துறையைச் சேர்ந்த  YOUTH RED CROSS இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழு 

               2015ஜூன் 11 ந்தேதி முதல்18 ந்தேதி வரை
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஶ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் விடுதியில் தங்கி சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்குட்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போதைய பிரச்சினைகளும் பற்றி கேட்டறிவதோடு பழங்குடியின மாணவர்களுக்கு தன்னம்பிக்கை,சுற்றுச்சூழல் காப்பது, வனவளம் காப்பது ,மழைநீர் சேமிப்பது,பண்பாடு காப்பது,சுகாதாரம்,புகைத்தலும் மதுவும் போதைப்பொருட்களும் தவிர்த்து உடல்நலம் காப்பது,உயர்கல்விக்கான ஆலோசனை,நல உதவிகள் வழங்கல் போன்ற சமூகப்பணியினையும் ஆற்றி வருகிறது.
                 
                2015ஜூன் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று C. பரமேஸ்வரன் ஆகிய எனது  வழிகாட்டலின்போது தாளவாடி ஒன்றியம் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமின்போது பழங்குடியின மக்களின் வாழ்க்கைச்சூழல் மற்றும் பிரச்சினைகளைப்பற்றி உரைநிகழ்த்தி விடுத்த வேண்டுகோள் விவரம்....



                  சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள தலைமையில் சிறப்பு முகாமிட்டுள்ள  YRC மாணவர்கள் உட்பட   அவை சார்ந்த சான்றோர் மேன்மக்களே அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.
         ஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுக்கு உதவி செய்யச் சென்றவரை மறித்து
                     '' நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளீர்! என்றால் தயவு செய்து வந்த வழியே திரும்பி சென்றுவிடுங்க.அதே சமயம் எங்களது வாழ்வாதாரப்போராட்டம் உங்கள் வாழ்க்கையை நீலைத்து நீடிக்க உதவும் என்று உணர்ந்தால் வாங்க,நாம் ஒன்றாக இணைந்து போராடலாம்''  
                    என்று ஆஸ்திரேலியப் பழங்குடியின பெண்மணி ஒருவர் கூறியது மிக முக்கியம் வாய்ந்த கருத்து ஆகும்.

                      பழங்குடியின மக்கள் நலமுடன் வாழ்ந்தால்தான் அவர்களைச் சார்ந்துள்ள வனம்,நிலம்,நீர்,சுகாதாரம்,சுற்றுச்சூழல் போன்ற இயற்கை வளங்கள் சிறப்பாக இருக்கும்.இதனால் ஏனைய மக்களான நமக்கு வளமான,நிலையான வாழ்வு பாதுகாக்கப்படும்.

                  நம் நாட்டில்  பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் பாரம்பரியம்,வரலாறு,ஒழுக்கம்,நீதி என பலவகையான பண்பாடு கலாச்சாரக்கூறுகளை கொண்டு வாழ்ந்து உலகத்திற்கே உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
    
              நம் நாட்டின் முதல் குடிமக்களான பழங்குடி இன மக்கள் வனத்தைச் சார்ந்தே இயற்கையோடு ஒட்டி தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.

                     வனப்பகுதியிலுள்ள நிலங்களில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்துகொள்வதோடு வனத்தைப் பாதுகாத்தும்,
வனத்தில் கிடைக்கும் மூலிகைத்தாவரங்கள்,காய்ந்த மரக்கிளைகள்,வேர்,கிழங்கு,பட்டை,தேன்,பிசின்,அரக்குப்பொருட்கள்,கனிகள்,விதைகள்,கீரை வகைகள்,நீர்த்தாவரங்கள்,மீன்,நண்டு என பலவகையான வனப்பொருட்களை சேகரித்து விற்று தன் வாழ்வாதாரத்தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

    பழங்குடி இன மக்கள் தங்களுக்கென தனிக் கலாச்சாரம்,சமூகக்குழு, கூட்டுவாழ்க்கை,இயற்கை வைத்தியம்,சொந்தமாக இசை,நடனம்,பாடல் என தனிப்பண்பாடு உடையவர்களாக  வாழ்ந்து வருகின்றனர்.

              இந்திய பழங்குடி நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி,ஐக்கிய நாட்டு சபை அறிக்கையின்படி,சர்வைவல் இன்டர் நேசனல் என்னும் பன்னாட்டு அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகில் 622 வகையான பழங்குடி இன மக்கள் குழுக்கள் உள்ளனர். சுமார் எட்டரைக்கோடி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.100க்கும் அதிகமான நாடுகளில் வசிக்கின்றனர்.நாகரீக மக்கள் தொடர்பு இன்றி 100க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் இயற்கையாக வாழ்ந்து  விலங்குகள் வாழ்க்கை வருகின்றனர்.

          இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள்,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்கா உட்பட உலகின் பல இடங்களில் நிர்வாணமாக அதாவது ஆடையின்றி,நாகரீகமின்றி,நவீனத்தொழில் நுட்பத்தொடர்பின்றி,விலங்கு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

                        தமிழ்நாட்டின்  2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

   சுமார் ஆறரை இலட்சம் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
                                                                                                                                                           இருளர்,சோளகர்,ஊராளி,காட்டுநாயக்கர்,கோத்தர்,தோடர்,பளியர்,பளியன்,பள்ளியன்,
கணியன்,காணிக்கன்,காடர்,
 குருமன்ஸ்,குரும்பாஸ்,இரவலன்,மலைக்குடி,மலைவேடன்,மலைசார்,மலையாளி

      ( மலையாளி என்ற பெயரில் தனி பழங்குடி இனம் உள்ளது இவர்கள் கேரளாவேசார்ந்தவர்கள் அல்ல) 
                 என 36 வகையான பழங்குடி இன மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 90சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.

                  நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால்    புதிய பொருளாதாரக்கொள்கை,உலக மயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகளால்,இயற்கையை மீறி நம் தேவைகளை பெருக்கி வருவதாலும்,பேராசையாலும்,நகர மோகத்தாலும்,நவீன கருவிகளின் ஆதிக்கத்தாலும் ,கிராம மக்களின் மீது அக்கறை காட்டாமல்,விவசாய மக்களை மரியாதையுடன் நடத்தாமல் , நம் முதல்குடியான பழங்குடி இன மக்கள் மீது கவனம் செலுத்தாமல்  
                   நமது சுயநல மிகுதியால்  இன்று பழங்குடி மக்கள் தம் வாழ்க்கையில் சமூகப்பொருளாதாரத்தில் மிகவும் பின் தள்ளப்பட்டு  கல்வி மற்றும் பொருளாதாரம் பெற முடியாதவர்களாக வாழ்வாதாரப்பிரச்சினையில் சிக்கி விளிம்பின் நிலையில் வாழ்கின்றனர்.
  
            நம் முதல்குடியான பழங்குடி இன மக்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுத்து,கல்வி கொடுத்து,பொருளாதாரத்தில் மேம்படையச்செய்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் என  இந்நேரத்தில் உறுதி ஏற்று   

                          சென்னை அண்ணா பல்கலை கழகத்திலிருந்து வருகை தந்துள்ள  YRC மாணவர்களாகிய  தாங்கள் அனைவரும் கவனமாக பழங்குடி இன மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்தித்து வரும் ஆபத்துகளும் பற்றி தெரிந்துகொள்வதோடு ,

             தாளவாடி ஒன்றியம் ஆசனூரில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடமேல்நிலைபள்ளியாம் இப்பள்ளி மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்குமாறு தக்க ஆலோசனை வழங்கி நல்ல வழிகாட்டுமாறு நான் சார்ந்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்  தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

YOUTH RED CROSS CAMP AT SATHYAMANGALAM TIGER RESERVE FOREST.

               ANNA UNIVERSITY CHENNAI YRC CAMP AT SATHYAMANGALAM
                 SRI RAGAVENDRA MATRIC HR.SEC.SCHOOL - SATHYAMANGALAM.
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சென்னை அண்ணா பல்கலைக் கழகம் பேராசிரியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்களது தலைமையிலான YOUTH RED CROSS என்னும் இளஞ்செஞ்சிலுவை சங்கம் மாணவர் குழு சத்தியமங்கலம் ஶ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்ள்ளியில் தங்கி  சிறப்பு முகாம் அமைத்து பவானிசாகர் அணைப்பகுதி, தாளவாடி - ஆசனூர் பகுதி,புளியங்கோம்பை கம்பத்ராயன் கிரிமலை,சிக்கரசம்பாளையம்  போன்ற வனப்பகுதி மக்களுக்காக  சமூகப்பணி ஆற்றிவருகிறது.அதன் அறிமுகவிழா ...............
     
                                PROF.S.K.RAJASEKARAN CHENNAI ANNA UNIVERSITY

                    SRI RAGAVENDRA KALVI NIRUVANAM CORRESPONDENT 
                               S.C. SELVAM SATHYAMANGALAM
                               CPARSORG.PARAMESWARAN SATHYAMANGALAM



                        READ.ORG. KARUPPUSAMY SATHYAMANGALM-
தொடரும்.......

ANNA UNIVERSITY - YRC CAMP@SATHYAMANGALAM FOREST VILLAGE




மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
         சென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்கள் தலைமையிலான YOUTH RED CROSS  என்னும்  YRC மாணவர்கள் குழு  







                 2015ஜூன் 15ந்தேதி இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியிலுள்ள  புளியங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிய கருத்து கேட்டறிதல் ...


                   



.தொடரும்......

YOUTH RED CROSS - ANNA UNIVERSITY சிறப்பு முகாம் -நம்ம ஆசனூர் மலையில்


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை பேராசியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள் தலைமையிலான  YOUTH RED CROSS என்னும் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் இருபால் மாணவர் குழு,  
                 2015ஜூன்14ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி மலைப்பகுதியிலுள்ள  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆசனூரில்  சிறப்பு முகாம் நடத்தியது. 











முகாமில் சிறப்புரை நிகழ்த்திய  C.பரமேஸ்வரன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் செயலாளர்  அவர்கள் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளும் பற்றி எடுத்துக்கூறி வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடி இன மாணவர்களுக்கு நல்வழிகாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

           தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களின் தலைமையிலான YRC மாணவர்குழு 


        உயர் கல்விக்கான விழிப்புணர்வு,

                சுற்றுச்சூழல் காப்போம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என விளக்கவுரை, 
               புகை,மது,போதை பொருட்களை தவிர்ப்போம் என உடல் நலத்துக்கான விழிப்புரை,
சுத்தமே சுகாதாரத்துக்கான வழி என விழிப்புரை கொடுத்தல்,
               

       மழை நீரை சேமிப்போம் - வன வளம் காப்போம் என விழிப்புரை,
           பள்ளி வளாகம் சுத்தம் செய்தல்,
               போன்ற சேவைகளை செய்தனர்.

தொடர்ந்து 


                        GTRHSS பள்ளி மாணவர்களின் பழங்குடி மக்கள் நடனத்தை பார்த்து ரசித்த பல்கலை மாணவர்கள் கிளாசிக் மற்றும் மேற்கத்திய நடனமுறை ஆடி மகிழ்வித்தனர்.



            அது சமயம் பள்ளி மாணவ,மாணவியருக்கு மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கினர்.

                                             மதிய உணவு   
                                                  (சைவம்& அசைவம்)




                 அண்ணா பல்கலை இருபால் மாணவர்களும் அரசுப் பள்ளி இருபால் மாணவர்களும் கலந்துண்ட காட்சி...


          சென்னைஅண்ணா பல்கலை YRC மாணவர்களுக்கு  GTRHSS பள்ளி ஆசிரியர் முனைவர் திருநிறைச்செல்வன் அவர்கள் நன்றி கூறினார்.
 தொடரும் .....



                அதாவது சத்தியமங்கலம் புளியங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிய கலந்துரையாடல் நேரம் கிடைக்கும்போது...

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...