அமெரிக்கரான L. Dumont எழுதிய "தி திராவிடியன் கின் ஷிப்" எனும் நூல் தமிழர் அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய நூலாகும். நமது பாரம்பரியம், நம் முன்னோர் வகுத்துவைத்த வழிமுறைகளின் சிறப்புகள் குறித்து நாம் புரிந்து கொள்ள இது மிகவும் உதவும்.
நூலின் சாராம்சம்
இந்த நூலின் சாராம்சமானது எந்த ஒரு இனக்குழு தாய் மாமன் உறவு முறைப்படி திருமணம் செய்து வாழ்ந்திருக்குமோ அந்த இனக்குழுதான் உலகின் நிலையான சமூகத்தை ஏற்படுத்தி இருக்க முடியும் என்பதுதான். இந்த கோட்பாட்டை திரு. L. Dumont கற்பனையாகத்தான் முதலில் அமெரிக்காவில் இருந்து வகுத்தார். பிறகுதான் தென்னிந்தியாவில் இத்தகைய கோட்பாட்டில் இனக்குழு வாழ்ந்து வருவதை அறிந்து பிறகு "தி திராவிடியன் கின் ஷிப்" எனும் நூலாக தனது கோட்பாட்டினை வெளியிட்டார். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் இந்த நூலை படித்து பார்க்கவும்.
சித்தர் நிறுவிய உணவு
இது போன்றுதான் நமது ஒவ்வொரு பாரம்பரிய வழக்கமும் மிகப்பெரும் அறிவினைக் கொண்டது. எடுத்துக்காட்டாக நவபாஷாணம் கொண்டு பழனி முருகன் சிலையை நிறுவிய போகர் (பதினெண் சித்தர்களுள் ஒருவர்) பஞ்சாமிர்தம் எனும் அமிர்தக் கலவையையும் தயார் செய்து அதனை நம் மக்களின் வழக்கத்திற்கு கொண்டு வந்தார். இந்த பஞ்சாமிர்த கலவை அதீத மருத்துவ ஆற்றல் கொண்டது உடலுக்கு மிகப்பெரும் எதிர்ப்பு சக்தியை வழங்ககூடியது. அவ்வளவு சிறப்புகளை கொண்ட கலவை ஆதலால் மிகவும் நுட்பமாக இதனை தம் மக்களின் வாழ்க்கை முறையில் இணைத்தார்.
பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாமிர்தம் பிசைந்து பழனி முருகனுக்கு காவடி எடுத்துச் சென்று பிசைந்த பஞ்சாமிர்தத்தை ஊரில் அனைவரும் பகிர்ந்து வருடம் முழுக்க வைத்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. பல்லாயிரம் வருடமாக ஒரு வழக்கம் மக்களின் வாழ்க்கை முறையில் கடத்தப்பட்டு வருவதென்றால் அந்த உணவின் சிறப்பு எத்தகையதாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
பிரசாதம் மட்டுமல்ல மருந்தும் தான்
நம் அனைவருக்கும் பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக தான் தெரியும். ஆனால் இதில் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இன்றும் மழை காலத்தில் வரும் புது புது கிருமி தொற்றில் இருந்து காக்கவும், வெயிலின் தாக்கத்தில் உடலின் சூட்டை மிதப்படுத்தி ஆரோக்கியம் தரவும் பஞ்சாமிர்தத்தை தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக