23 ஜனவரி 2025

சோற்றுக்கற்றாழை-செங்குமரி -

                 குமரி என்றழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை பற்றி இந்தப் பதிவில் அறிவோம். konguthendral.blogspot.com 

             கற்றாழையின் வகைகள்

  • சோற்றுக் கற்றாழை
  • சிறு கற்றாழை
  • பெரும் கற்றாழை
  • பேய் கற்றாழை
  • கருங்கற்றாழை
  • சிவப்புக் கற்றாழை
  • இரயில் கற்றாழை


             செங்குமரி...சிவப்பு சோற்றுக்கற்றாழை- RED ALOE VERA 


செங்கற்றாழை என்றால் சிவப்புநிறத்தில் இருக்கும் என கருதாதீர்? கீழுள்ள கற்றாழை செங்கற்றாழைதாங்க. மடலை உடைத்தால் அதனுடைய ஜெல் சிறிதுநேரத்தில் இரத்த சிவப்பாக மாறும். 



செங்கற்றாழை கற்பம்

கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் 
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி 
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும் 
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா 
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும் 
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை 
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே

                                                                      நந்தீசர் – ஞானம்

இதன் பொருள்  சென்குமரியினை உட்கொள்ளும் போது நமது  நமது உடலானது பல பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். உடலில் இருந்து வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும். சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று “குண்டலினி” யோகம் சித்திக்கும்.

சிவப்புக் கற்றாழையின் தோற்றம்

செங்குமரி இதனை குமரி என்று அழைக்க காரணம் என்றும் இளமை தரவல்லது. செங்கற்றாழையில் இருந்து சித்தர்கள் காயகற்பம் என்னும் அருமருந்தினை தயாரித்தனர். இதன் மடல்கள் பசுமை கலந்த செம்மை நிறத்தில்  நல்ல சதைபற்றுடன்  இருக்கும். மடல்களில் மிகச் சிறிய வெள்ளைப் புள்ளிகளும்,  ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் காணப்படும். அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து,  நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சோற்றுக்கற்றாழை-செங்குமரி -

                 குமரி என்றழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை பற்றி இந்தப் பதிவில் அறிவோம். konguthendral.blogspot.com               கற்றாழையின் ...