24 ஜனவரி 2025

அந்தப்புரம் என்றால இதுதானா?

                    கொங்குத்தென்றல் (கொளுவி) வலைப்பக்கத்திற்கு வருகைபுரிந்த வாசகர்களை அன்புடன் வரவேற்கிற்கிறோம்.

                           அந்தப்புரம் என்பதன் விளக்கம்.......

'அந்தம்' என்றசொல்லுக்கு பொருள்  'முற்று முடிவு'..

அதாவது படைவீரர்களின் மனைவியர் அவ்வீரனின் இறப்பிற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையே முடிந்தது போலாகிடும்.. தன் நாட்டிற்காக உயிர் துறந்த வீரனின் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை அல்லவா?. ஆதலால் அவர்கள் அனைவரும் அரண்மனையின் ஒருபகுதியில் பாதுகாப்பாக வாழலாம் எனவும் ,அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசனே உத்ரவாதம் எனவும் அவர்களுக்கு அரண்மனையின் பல பணிகளைவழங்கி, போரில் வீர மரணம் தழுவிய வீர‍ர்களின் மனைவிகளைப்  பேணி காக்கும் கடமை அரசனின் பொறுப்பு ஆதலால் அவர்களை அரசன் தெய்வமாக வணங்க வேண்டும் தான்தோன்றியாக நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசியே அந்த அந்தப்புரத்தில் தங்கி இருப்பார் .  மன்ன‍ன் அரசியைக்  காணவரும் போதெல்லாம் அரசனுக்கு இந்தநாடு இத்தகு தியாகத்தால் வாழ்கிறது என்கிற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவே  அவர்கள் சூழ ராணி இருப்பாள். நேரில் காணும்போதெல்லாம்  அவர்களின் வேதனை மனதில் வந்து உறுத்துவதால் அவசரமாக சுயநலமாக முடிவெடுக்க மன்னனே அஞ்சுவான் . தான் கொஞ்சம் பிசகினால் ராணியும் இப்படி தான் இருக்க வேண்டும் என்கிற அச்சம் மன்ன‍னுக்கு  வரும் என்பதே உண்மையான காரணம்.அந்தப்புரத்திற்கு விளக்கம்..

திரைப்படங்களில் காண்பதும்  நூல்கள் சொல்வதும் கற்பனைக்கான அழகியலுக்கு மட்டுமே... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...