19 ஜனவரி 2025

சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் -

                                                     அறிமுக‍க்கூட்டம்

                  சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம்...

                 இடம்; ஆனைக்கொம்பு அரங்கம்.

                                 சத்தியமங்கலம்.

               நாள்; 19-01-2025ஞாயிறு மாலை 5.30மணி

            ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக செயல்படும்சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என நீண்டகாலமாக தமிழார்லர்கள் கோரிக்கை விடுத்த‍தன் காரணமாக திருவள்ளுவர்தினமான 2025 ஜனவரி 15 ஆம் தேதி அன்று

                         "சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம்'' 

தொடங்கப்பட்டது.

                   அறிமுக‍க்கூட்டம 2025ஜனவரி 19ஆம்தேதி அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

               19-1-2025 இன்று மாலை சரியாக 5.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30மணிவரை  சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் நடைபெற்ற அறிமுக‍க்கூட்டத்திற்கு 

         மரியாதைக்குரிய ஆனைக்கொம்பு ஸ்ரீராம் அவர்கள் தலைமை வகித்து சிறப்பு செய்தார்.

            செ.பரமேஸ்வரன் செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.  கௌரவ ஆலோசகர்கள் தமிழ்ச்செம்மல் எழுத்தாளர் உமையவன் அவர்கள் மற்றும்  எழுத்தாளர் பௌசியா இக்பால் தொல்லியல் ஆய்வாளர் அவர்கள்,இணைச்செயலாளர் திருக்குறள்  வ.வெள்ளிங்கிரி அவர்கள், துணைத்தலைவர் பொறியாளர் தொ.அ.மூர்த்தி(யோகா)அவர்கள்,துணைச் செயலாளர் எழுத்தாளர் சிவா அவர்கள், இளம்பேச்சாளர் முகமதுதாணீஷ் அவர்கள் உட்பட பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.நிறைவாக பொருளாளர் கவிஞர்  கார்த்தி அவர்கள்நன்றியுரை நிகழ்த்தினார்.

சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள்: சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடின்றி  தமிழ்ப்பணியாற்றுவோம் என உறுதியேற்கப்பட்டது.

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(1) மாணவ,மாணவியருக்கு, எழுத்துப்பிழை,சொற்பிழை,வாசிப்புப்பிழை,பொருட்பிழை தவிர்க்கும்வகையில் பயிற்சி தருவது.நிறுத்தற்குறிகளும் கட்டாயத்தேவைகளும்,தமிழ் எண்களும் புரிந்துகொள்ள வைப்பது.

(2)தமிழ் இலக்கியங்கள்,மறுவாசிப்புநூல்களான திருக்குறள்,நாலடியார்,உலகநீதி,ஆத்திச்சூடி,கொன்றைவேந்தன்,நல்வழி,மூதுரை,வெற்றிவேற்கை ,தமிழர் பண்பாடும் ஆன்மீக வழிபாட்டில் அறிவியல் பற்றி கருத்தரங்கம்,விவாதக்களம்,இலக்கியமுகாம்,வாசிப்புமுகாம் நடத்துவது.

(3) இலக்கியவிழா நடத்தி வாசிப்பு போட்டி, கதைசொல்லல், பேச்சுப் போட்டி, திருக்குறள், நாலடியார், உலகநீதி , ஒப்புவித்தல் போட்டி நடத்துவது.

(4) சித்த மருத்துவம், மூலிகைத்தாவரங்கள், சிறுதானிய உணவுகள் சம்பந்தப்பட்ட கண்காட்சிகள் நடத்துவது.

(5) கொங்குமண்டலத்திலுள்ள வரலாற்றுச் சான்றுகள்,தொல்லியல் அடையாளங்கள் பற்றிய விளக்கம்பெறுவதற்காக வரலாற்று ஆய்வாளர் பௌசியா இக்பால் அவர்களின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கான  சுற்றுலா நடத்துவது.

(6) பள்ளிகள்,கல்லூரிகள்,பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தமிழிலக்கியத் திருவிழா நடத்துவது.

(7) சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் ஆண்டுதோறும்  பொங்கல் பண்டிகை அன்று பல்வேறு போட்டிகளுடன்  பொங்கல் திருவிழா சிறப்பாக நடத்துவது.

(8) அரியப்பம்பாளையம் பேரூராட்சி  மூலக்கிணறு ஆனைக்கொம்பு வி.வி.கல்யாண மண்டபத்திலும் அந்தப்பகுதியைச் சேர்ந்த பெரியோர்களின் ஆதரவுடன்  தமிழ் சார்ந்த நிகழ்வுகள் நடத்தி சுற்றுவட்டார கிராமப்பகுதி மாணவ,மாணவியர் பயன்பெறச் செய்வது.
(9) பவானிசாகர் தொட்டம்பாளையம் பகுதியிலும் அப்பகுதியிலுள்ள சான்றோர்களின் ஆதரவுடன் தமிழ்ப்பணியாற்றுவது.
(10) ஒவ்வொரு திட்டமிடலிலும் நேரமேலாண்மை கடைபிடிப்பது
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்வமுள்ள தமிழார்கள் உறுப்பினர்களாக இணைந்துகொண்டு தமிழ்ச்சேவை ஆற்றலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...