13 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam Part -07


                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி -07
                             சமைத்துப் பழகலாம் வாங்க!                                                    
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

 (ஆ) ரசப் பொடி...
      தேவையான பொருட்கள் மற்றும்  அளவுகள்....
(1)தனியா(கொத்துமல்லி)-150 கிராம்.,
(2)சீரகம் - 300கிராம்,
(3)மிளகு- 300கிராம்,
காரத்திற்கு மிளகு இன்னும் அதிகமாக சேர்த்தால் மிளகாய் தேவையில்லைங்க...
 (4) மிளகாய்-25கிராம்,
(5)துவரம் பருப்பு-50கிராம்,
(6)கடலைப் பருப்பு-50கிராம்,
(7)வெந்தயம்-30கிராம்,
(8)கறிவேப்பிலை- மூன்று கட்டு அல்லது தேவைக்கேற்ப ,
 (9)பெருங்காயம்-25கிராம்,
(10)உப்பு-தேவைக்கேற்ப, (c.parameswaran Driver)
                    ஆகியனவற்றை தனித்தனியாக  வறுத்து எடுங்க. குறைவான தீயில்  கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்தெடுத்து எடுங்க.
ஆறவைத்து அரைத்து பத்திரப்படுத்துங்க....
                        -----------------------------------------
(இ) கரம் மசாலா பொடி
(மீன் தவிர மற்ற அசைவ வகைகள், சைவ குருமா,காய்கறிவறுவல்,சூப் வகைகளுக்கு)
தேவையான பொருட்கள்...
(1)தனியா(கொத்துமல்லி)-200கிராம்,
(2)சீரகம் - 100கிராம்,
(3)மிளகு - 30கிராம்,
(4)லவங்கப் பட்டை-10 ,
 (5)கிராம்பு-30கிராம்,
(6)சோம்பு - 30கிராம்,
 (7)ஏலக்காய் -10,
(8)பிரிஞ்சி இலை -10,
 (9)அன்னாச்சி மொக்கு ( நட்சத்திர சோம்பு ) -2,
 (10)கல்பாசி -30கிராம்,
 (11)ஜாதிப் பத்திரி -30கிராம்,
 (12)ஜாதிக்காய் -1,
 (13)விரலி மஞ்சள் -2 (c.parameswaran Driver)
மேற்கண்ட பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுங்க...
கருகவிடாமல் குறைவான தீயில் கவனமாக வறுத்துக் கொள்ளுங்க..
மிக்சி அல்லது மெசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்க.
                                    ------------------------------
(ஈ) மீன் மசாலா.....
( மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வதற்கு)
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்

செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளுங்க... ஆறவைத்து ஒன்றாக போட்டு அரைத்துக் கொள்ளுங்க.. (c.parameswaran Driver)
இதே மசாலா பொடியை புளிக்குழம்பு,காரக் குழம்பு ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்...




                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam Part 06

                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி 06
                                    சமைத்துப் பழகலாம் வாங்க!
                                            ------------------------------
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)
   வாசனை மட்டும் இருந்தால் போதுமா?ருசியும் வேண்டுமல்லவா!
              சமையல் விரைவாக முடிக்க முன்னரே சில பொருட்களை பொடிகளாகவும்,வேறு சில வடிவங்களிலும் மாற்றி இருப்பில் தயாராக வைத்திருக்க வேண்டும்.அந்த வரிசையில்....
(1)அங்காயப் பொடி,(2)மிளகாய்ப் பொடி,(3)மஞ்சள் பொடி,(4)தனியாப் பொடி(கொத்துமல்லிவிதை பொடி),(5)சாம்பார்ப் பொடி,(6)ரசப் பொடி,(7)கரம் மசாலாப் பொடி(கறி மசாலாப் பொடி),(8)கறிவேப்பிலைப் பொடி,(9)பருப்புப் பொடி(இட்லிப் பொடி),(10)பூண்டுப் பொடி,(11)இஞ்சிப் பொடி,(12)வெங்காயப் பொடி,(13)தக்காளிப் பொடி,(14)மாங்காய்ப் பொடி,(15)தேங்காய்ப் பொடி,(16)சுக்குப் பொடி,(17)மிளகுப் பொடி,(18)லவங்கப் பொடி என சமையலுக்கான மூலப்பொருட்களை   தனிவகை பொடியாகவும்,கூட்டு பொருட்கள் பொடியாகவும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

            நாம் அதிகமாக பயன்படுத்தும் பொடிகளான (அ)சாம்பார்ப் பொடி, (ஆ)ரசப் பொடி, (இ) கரம் மசாலாப் பொடி ஆகிய மூன்று பொடிகளுக்கும்  பொதுவாக பயன்படுத்தும் மூலப் பொருட்களாவன....(1)தனியா(கொத்துமல்லி)., (2)சீரகத் தூள், (3)மிளகுத் தூள் ஆகியனவாகும்.இவற்றுடன் கூடுதலாக (4) மிளகாய், (5)துவரம் பருப்பு, (6)கடலைப் பருப்பு, (7)வெந்தயம், (8)கறிவேப்பிலை, (9)பெருங்காயம், (10)உப்பு ஆகிய மூலப்பொருட்கள் (அ) சாம்பார்ப் பொடி மற்றும் (ஆ) ரசப் பொடிகளுக்கு சேர்க்கப்படுகின்றன.இந்த மூலப் பொருட்களுடன் கூடுதலாக (11)அரிசி,(12)கடுகு, (13)வெள்ளை உளுந்து ஆகியன (அ)சாம்பார்ப் பொடிக்கு சேர்க்கப்படுகின்றன.
(இ) கரம் மசாலாப் பொடிக்கு முதல் பட்டியலில் குறிப்பிட்டுள்ள (1)தனியா(கொத்துமல்லி), (2)மிளகு, (3)மிளகுத்தூள் ஆகியவற்றுடன், (1)லவங்கப் பட்டை, (2)கிராம்பு, (3)சோம்பு, (4)ஏலக்காய், (5)பிரிஞ்சி இலை, (6)அன்னாச்சி மொக்கு ( நட்சத்திர சோம்பு ), (7)கல்பாசி, (8)ஜாதிப் பத்திரி, (9)ஜாதிக்காய், (10)விரலி மஞ்சள் ஆகிய மசாலாப் பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.
  என்னங்க குழப்பமாக இருக்குதா? கவலையே வேண்டாம்...இனி  ஒவ்வொரு பொடியையும் தனித்தனியாக செய்வது பற்றி அறிவோம்....

 (அ) சாம்பார் பொடி...
தேவையான பொருட்கள் மற்றும்  அளவுகள்....
(1)தனியா(கொத்துமல்லி)-அரை கிலோ.,
(2)சீரகத் தூள் - 150கிராம்,
(3)மிளகுத் தூள்- 150கிராம்,
காரத்திற்கு மிளகு இன்னும் அதிகமாக சேர்த்தால் மிளகாய் தேவையில்லைங்க...
 (4) மிளகாய்-500கிராம்,
(5)துவரம் பருப்பு-100கிராம்,
(6)கடலைப் பருப்பு-100கிராம்,
(7)வெந்தயம்-100கிராம்,
(8)கறிவேப்பிலை- மூன்று கட்டு அல்லது தேவைக்கேற்ப ,
 (9)பெருங்காயம்-100கிராம்,
(10)உப்பு-தேவைக்கேற்ப,
 (11)அரிசி-50கிராம்,
(12)கடுகு-50கிராம்,
(13)வெள்ளை உளுந்து-100கிராம்,
ஆகியனவற்றை தனித்தனியாக  வறுத்து எடுங்க. குறைவான தீயில்  கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்தெடுத்து எடுங்க.
ஆறவைத்து அரைத்து பத்திரப்படுத்துங்க....
 அடுத்த பதிவில் ரசப் பொடி,கரம் மசாலாப் பொடி
 தயாரிப்பது பற்றி பார்ப்போம்.


                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam -05

             

                          நீங்களும் சமைக்கலாம் பகுதி -05
                             சமைத்துப் பழகலாம் வாங்க!                                                       
                              --------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.  (c.parameswaran Driver)

                    இந்தப் பதிவில் சமைத்தலுக்கு தேவையான நேர அளவுகளும்,தண்ணீர் போன்ற கலவைகளின் விகித அளவுகளும்,பற்றி அறிவோம்.

பிரஷ்சர் குக்கர் பயன்படுத்தும்போது.........
     LPG காஸ்,கரசின்,மின்சாரம்,கரி என எந்தவகை அடுப்பினை பயன்படுத்தினாலும் அதிக வெப்பத்தில் (Hi Flame & Pressure) அழுத்தம் உருவாக்கிய பின்னர் அந்த அழுத்தமானது நிலைக்க சூட்டினை(Low Flame) குறைத்திடுங்க!...

                 இனி குக்கரில் சமைக்கத் தேவையான தண்ணீர் அளவினை பார்ப்போம்.
            கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல உணவு தயாரிக்கும் நேரம் கூடுதலாகும்.இது இயற்கையின் விதி.....
        கீழ்கண்ட தண்ணீரின் அளவானது இடத்திற்கேற்ப,தங்களது விருப்பத்திற்கேற்ப சற்று மாறுபடும்.(c.parameswaran Driver)
   (1) அரிசி  குக்கரில் சமைக்க ... 3நிமிடங்கள்.
      அரிசிக்கு  தண்ணீர் இரண்டரை அல்லது (1:3) மூன்று பங்கு சேர்க்கவும்.
            
     கீழ்கண்ட பருப்பு வகைகளுக்கு தண்ணீர் மூன்று பங்கு அல்லது      
                             தேவைக்கேற்ப சேர்க்கவும். (c.parameswaran Driver)
  (2) துவரம் பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (3) பயத்தம் பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (4) கொள்ளு பருப்பு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்
  (5) தட்டைப்பயறு  குக்கரில் சமைக்க.....6நிமிடங்கள்

          கீழ்கண்டவைகளுக்கு  தேவைக்கேற்ப அல்லது
      மூழ்கும் அளவுக்கு சற்று அதிகமாக தண்ணீர்                
     சேர்க்கவும்.அதிகமாகிவிட்டால் நாம்தாங்க சாப்பிடுகிறோம்.
      அடுத்தமுறை சரிப்படுத்திக்கொள்வோம். (c.parameswaran Driver)
      (6) உருளைக்கிழங்கு  குக்கரில் சமைக்க.....4நிமிடங்கள்
  (7) வெங்காயம்  குக்கரில் சமைக்க.....3நிமிடங்கள்
   (8) தக்காளி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
  (9) கேரட்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(10) உலர்ந்த பட்டாணி குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(11) பச்சைப் பட்டாணி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
 (12) காலிஃபிளவர்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(13) முட்டைக்கோசு  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(14) பீன்ஸ்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(15) புடலங்காய்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(16) பரங்கிக்காய்  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
(17) முள்ளங்கி  குக்கரில் சமைக்க.....2நிமிடங்கள்
கீழ்கண்ட அசைவ வகைகளுக்கு தண்ணீர்  நான்கு மடங்கு அல்லது தேவைக்கற்ப சேர்க்கவும்.(c.parameswaran Driver)
(18) ஆட்டுக்கறி குக்கரில் சமைக்க.....12நிமிடங்கள்
(19) கோழி  குக்கரில் சமைக்க.....10நிமிடங்கள்
(20) மீன்  குக்கரில் சமைக்க.....3நிமிடங்கள்

 பயமே வேண்டாங்க!..
                  மேற்கண்டவைகளில் சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் உணவுகளின் விபரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க.இனி சமைக்க,சமைக்க ஓரிரு நாட்களில் பழகிவிடும்...ஒருஉணவுமுறையை பழகிவிட்டாலே அடுத்த உணவுவகைகள் சமைப்பதற்கு எளிதாக இருக்கும்.குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே கூடுதலாகவோ,குறைவாகவோ பயன்படுத்துகிறோம்.அதுவும் பெரும்போக்காக பயன்படுத்துகிறோம்.எரிக்கப்படும் தீயின் அளவு முக்கியம்.தாளித்தல்,வதக்குதல் போன்றவைகள் கருகிவிடாமல் இருக்க வேண்டும்.அதேபோன்று வேகும் அளவு குறையக்கூடாது.



                 நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

11 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam -04

                                நீங்களும் சமைக்கலாம் பகுதி -04
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                                    ---------------------------
மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உதாரணத்திற்காக... கிளிப் மாட்டும்  பட்டியல் தாள்
                                                  மேற்கண்டவாறு ஒரு தாளில் தேவையான பொருட்கள் பற்றிய விபரம் எழுதுங்க.அதில்  முன் தயாரிப்பு விபரம்,அரைத்து நசுக்குவதற்கான பொருட்கள் விபரம்,வறுத்துப் பொரித்தலுக்கான பொருட்கள் விபரம்,வதக்குதலுக்கான பொருட்கள் விபரம்,தாளிப்பதற்கான பொருட்கள் விபரம்,செய்முறை விபரம் என படிப்படியாக எழுதி சமைத்துப் பழகுங்க....

  (1)தாளில் பட்டியலிடுதல்...
        சமைத்து அனுபவமாகும்வரை  சமைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தேவையான பொருட்களை கண்ணில்படும்படி ஒரு தாளில் தெளிவாக வரிசைப்படுத்தி எழுதி சமையலறையில் கிளிப் போட்டு தொங்கவிடுங்க!மறவாதீங்க..அடுப்பு பற்றவைப்பதிலிருந்து,தீ குறைவாகவா,சாதாரணமாகவா? அதிகமாகவா? என எரியவிடுதல்,கருகிவிடாமல் தாளித்தல்,பொன்னிறமாக வறுத்தல்,அடிப்பிடிக்காமல் வதக்குதல் உட்பட ஒவ்வொன்றாக வரிசைப்படி எழுதிக்கொள்ளுங்க!..(c.parameswaran Driver - 9585600733)

(2)என்ன சமைக்கலாம்? என்ற முடிவெடுத்தல்....
காலை,மதியம்,இரவு என எத்தனை வேளை உணவு?,
சிறியவர்& பெரியவர் என சாப்பிடுவோர் எண்ணிக்கை!,
 என்ற திட்டமிடுதல் தேவைங்க...

(3)தீர்மானித்த உணவு சமைக்கத் தேவையான மூலப்பொருட்களை தனியே எடுத்துக்கொள்ளுங்க.....அதாவது பொடிவகைகள்,தாளிப்பு பொருட்கள்,எண்ணெய் வகைகள்,காய்கறிகள்,மசாலாப்பொருட்கள்,என தேவையானவற்றை முதலிலேயே தனித்தனியாக அதற்கான அளவான கிண்ணங்களிலோ,தட்டுக்களிலோ எடுத்துவையுங்க...

(4)இனி முன்தயாரிப்பு வேலைகளைச் செய்துகொள்ளுங்க...
முன் தயாரிப்பு வேலைகளில் சில
தங்களது சிந்தனைக்காக....
                    அரிசியை அலசி களைதல், புளி ஊறவைத்தல், வெங்காயம் தோலுரித்து நறுக்குதல், மிளகாய் காம்பு கிள்ளி பொடிப்பொடியாக நறுக்குதல், பூண்டு தோலுரித்தல், தக்காளி நறுக்குதல், கறிவேப்பிலை நறுக்குதல்,  இஞ்சி& பூண்டு நசுக்கி விழுதாக்குதல்(PASTE), காய்கறிகளை நறுக்குதல், தேங்காய் துருவுதல், வறுத்துப் பொடிக்க வேண்டியபொருட்களை வறுத்துப்பொடித்தல், வதக்கி நசுக்கவேண்டிய பொருட்களை வதக்கி நசுக்கிவைத்தல், தாளிப்பதற்குத் தேவையான பொருட்களை சிறு,சிறு கிண்ணங்களில் எடுத்துவைத்தல். உப்பு, மிளகாய்த்தூள் போன்ற பொடிவகைகளை தனியாக எடுத்து வைத்தல் போன்றவை....

அவ்வளவுதாங்க..அடிப்படை என்னும் புள்ளி போட்டாச்சு!...
(c.parameswaran Driver - 9585600733)
               கிளிப் மாட்டிய தாளில் உள்ளவாறு ,செய்முறை பற்றிய விபரங்களை பார்த்து,பார்த்து ,சமைத்தல் என்னும் கோலத்தினை விருப்பத்துடனே போட்டு அசத்துங்க....

   நீங்களும் சமைக்கலாம் இன்னும் தொடரும்........

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam -03

                               நீங்களும் சமைக்கலாம் பகுதி -03
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
    கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
         (1)சமையல் வகைகளை....
                 அடுப்பில்லா சமையல்,ஆரோக்கிய சமையல்,மூலிகை சமையல்,இயற்கை உணவுகள் என வகைப்படுத்தலாம்...
(c.parameswaran Driver - 9585600733)

சைவம்,அசைவம் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்....

(2) உணவு வகைகளை......
              சாத வகைகள்,சிற்றுண்டி வகைகள், துரித உணவுகள்,அவித்த உணவுகள்,சிறப்பு உணவுகள்,துவையல்,சட்னி,பொரியல்,வறுவல்,அவியல்,கூட்டு,வற்றல்,வடகம்,சாம்பார்,
ரசம்,குருமா,குழம்பு,மசாலா,ரசம்,கீரைகள்,சூப்,பொடிகள்,என வகைப்படுத்தலாம். (c.parameswaran Driver - 9585600733)
     (3)  சிறப்பு உணவுகளாக.....
  பணியிடங்களுக்கான டிபன்பாக்ஸ் உணவுகள்,பயணத்திற்கான உணவுகள்,
             பிரம்மச்சாரி உணவுகள்,குழந்தைகளுக்கான உணவுகள்,கர்ப்பிணிகளுக்கான உணவுகள்,முதியோர்களுக்கான உணவுகள்,நோயாளிகளுக்கான உணவுகள் ,கோடைக்கால உணவுகள்,குளிர்கால உணவுகள்,மழைக்கால உணவுகள்,அவசரத் தயாரிப்பு உணவுகள் என  வகைப்படுத்தலாம். (c.parameswaran Driver - 9585600733)

                                          இனி அறிந்துகொள்பவை....
(1)சாத வகைகள்...
1.1  அரிசி சாதம்,1.2 கம்மஞ்சோறு,1.3சோளச்சோறு,1.4ராகி களி , 1.5தினை சாதம், 1.6சாமை சாதம், 1.7வரகு சாதம், 1.8குதிரைவாலி சாதம்... (c.parameswaran Driver - 9585600733).

(2)கலவை சாத வகைகள்...
2.1துவரம் பருப்புச் சோறு, 2.2.தக்காளிச் சாதம், 2.3எலுமிச்சை சாதம்,  2.4தயிர் சாதம், 2.5புளிச்சோறு, 2.6காய்கறி சாதம், 2.7தேங்காய் சாதம், 2.8மாங்காய் சாதம்,  2.9கறிவேப்பிலை சாதம்,  2.10 பூண்டு சாதம்,  2.11புதினா சாதம்,  2.12சீரக சாதம்,  2.13எள்ளு சாதம், 2.14 வெண்பொங்கல், 2.15சர்க்கரைப் பொங்கல், 2.16பாசிப்பருப்பு பொங்கல்........ (c.parameswaran Driver - 9585600733).

(3)கூழ் வகைகள்...
3.1அரிசிக் கஞ்சி, 3.2ராகிக் கூழ், 3.3கம்மங்கூழ், 3.4கோதுமைக் கஞ்சி, 3.5பார்லிக் கஞ்சி......... (c.parameswaran Driver - 9585600733)
அசைவ உணவுகளாக...
 ஆடு,கோழி,புறா,காடை,கவுதாரி,முட்டை,மீன்,கருவாடு,நண்டு,இறால், என வகைப்படுத்தலாம்.....
               
                           இனி  அடுத்த பதிவில்  ...

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

Neengalum Samaikkalam -02

                                 நீங்களும் சமைக்கலாம் பகுதி -02
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                                     ----------------------

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

 சமையல் கலையில்  தொடக்கமாக அளவுகளை அறிந்துகொள்வோம்..
 டீ ஸ்பூன் என்பது தேக்கரண்டி என்றும்,டேபிள் ஸ்பூன் என்பது மேஜைக் கரண்டி என்றும்,பின்ச் என்பது சிட்டிகை என்றும் பொருள் அறிந்துகொள்ளுங்க..  (c.parameswaran Driver - 9585600733)
(1) ஒரு பின்ச் என்பது கட்டைவிரலையும்,ஆட்காட்டி விரலையும் குவித்து எடுக்கப்படும் அளவாகும்.(பெரும்பாலும் பொடிவகைகளுக்கு சிட்டிகை அளவு பயன்படுத்துகிறோம்).
(2)ஒரு டீஸ்பூன் என்பது 5 MLஅளவாகும்.
(3)ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 15 ML அளவாகும். (3டீ ஸ்பூன் )
(4).ஒரு கப் என்பது 16 டேபிள் ஸ்பூன் அளவாகும்.(200கிராம்)
இந்த அளவுகள் திரவ,திட பொருட்களுக்கு ஏற்ப எடை விகிதம் மாறுபடும்.
ஒரு கப் அளவு என்பது உதாரணமாக...
ரவை - 185கிராம், சர்க்கரை - 245கிராம், மைதா - 140கிராம்,  எண்ணெய் வகைகள் - 200கிராம், வெண்ணெய் - 226கிராம்   (c.parameswaran Driver - 9585600733)
எனவே  துல்லியமாக கணக்கிட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம்.
திடப் பொருட்கள் என்றால் 200கிராம் என்றும்,திரவப் பொருட்கள் என்றால் 210மில்லிகிராம் என்றும் அறிந்துகொள்ளுங்க.
                 கிராமங்களில் அளவு கருவிகளை பயன்படுத்தியா  சமைக்கிறார்கள்! அவரவர் மனதில தோன்றியவாறு குத்துமதிப்பாக ஒவ்வொரு பொருட்களையும் எடுத்துப் போட்டுத்தாங்க சமைக்கிறார்கள்!...
 மணமாக இருப்பதில்லையா? ருசியாக இருப்பதில்லையா?
      
                           அடுத்த பதிவில்    இன்னும் தொடரும்....
  
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

10 ஏப்ரல் 2020

Neengalum Samaikkalam - 01

                                  நீங்களும் சமைக்கலாம் பகுதி -01
                                   சமைத்துப் பழகலாம் வாங்க!
                                          ------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
உணவே மருந்து என்பதை உணருங்க!..
மருந்தே உணவு என்பதை தவிருங்க!!
                                (c.parameswaran Driver - 9585600733)
பொழுதுபோக்க எதையெதையோ கற்றுக் கொள்கிறோம்!...
சமையலை கற்றுக்கொள்வதில் ஏன் தயக்கம்?
                       
                       இன்றைய அவசர உலகத்தில் பல்வேறு பணிகளில் உள்ள இளைய சமுதாயம் உட்பட  ஆண்,பெண் இருவருமே சமைக்கத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.     (c.parameswaran Driver - 9585600733)     
                       உணவகங்களில் பெரும்பாலானவை ...
                    ருசிக்காவும்,மணத்திற்காகவும்,பார்வை ஈர்ப்புக்காகவும்,மட்டுமின்றி  மீதமான உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் இருப்பில் வைத்து மீண்டும் விற்று காசாக்க வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் ,ரசாயனப்பொடிகளையும்,சுவையூட்டிகளையும்,மணமூட்டிகளையும்,நிறமூட்டிகளையும்,பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளால் நமது உடலுக்கு பெரும்தீங்கினை இழைக்கின்றன. (c.parameswaran Driver - 9585600733)
      ஆரோக்கியமான முறையில்வீட்டுமுறை சமையல் செய்பவர்களும் மிகச் சிலரே உள்ளனர்.அவர்கள் நமக்கு தெரிவதும் இல்லை,தெரிந்தாலும் வெகுதொலைவில் இருக்குமாதலால் நம்மால் சென்று வருவதும் இயலாத காரியமாக இருக்கின்றது.
                  ஆதலால் நமது உடல் நலம் பேண நாமே சமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
         மற்ற பணிகளைப் போன்றே சமையலும் ஓரிருநாட்கள் மட்டுமே தடுமாற்றமாக இருக்கும்.நமது தயக்கத்தினால் சமையல் செய்யவும் தடுமாறுகிறோம். இனி கவலையை விடுங்க!....
       விரைவாக எளிதில்,சுவையாக ஆரோக்கிய உணவுகளை நாமே சமைத்துக் கொள்ளலாம்.
    இங்கு கொங்குநாட்டின் முன்னோர்களின் சமையல் அனுபவத்தை  கேட்டு பதிவிடுகிறேன்.
                       சமைத்துப் பழகலாம் வாங்க!
.                       சமையல் கலையில் திட்டமிடுதலும்,நேரமேலாண்மையும்தாங்க அவசியம்....
முதலில் திட்டமிடுங்க....
அடுத்து தேவையான பொருட்களை எடுத்து வையுங்க....
முன் தயாரிப்பு வேலைகளை செய்யுங்க....
செய்முறை பட்டியல்படி வரிசையாக செயல்படுத்துங்க...
முன்தயாரிப்புவேலைகளுக்கு ஆகும் நேரத்தைக் கணக்கிடுங்க..
சமைக்கும் நேரம் எவ்வளவு என தெரிந்துகொள்ளுங்க...
பிறகென்ன ஜாலிதாங்க!... (c.parameswaran Driver - 9585600733)
                    அதேபோல அடுப்பில் தீ  அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இல்லாமல்  தயாரிக்கும் உணவுகளுக்கேற்ப தீ அளவாக எரியவிடுதல் அவசியம்....,
                                                
                தாளிப்பவைகளையும்,வறுப்பவைகளையும்,வதக்குபவைகளையும்,
கருகிவிடாமலும்,அதேநேரத்தில் சரியான பதமில்லாமல் பச்சையாகவும் எடுத்தல்கூடாது.
     
              சாத வகைகள்,சிற்றுண்டி வகைகள்,சூப் வகைகள்,சாம்பார்,குழம்பு,ரசம்,குருமா,சிறுதானிய உணவுகள்,பழங்கள்,பயறுவகைகள்,கீரை வகைகள்,காய்கறிகள்,சுடுதல்,வேகவைத்தல், என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். (c.parameswaran Driver - 9585600733)
                 இவைகளுக்கு பக்க உணவாக,துணை உணவாக,வடக வகைகள்,வற்றல் வகைகள்,துவையல்,சட்னி,பொரியல்,வறுவல்,அவியல்,கூட்டு,பச்சடி,தொக்கு,
இவைகளுடன் தாளித்தல்,வதக்குதல், அரைத்தல்,மசித்தல்  என பல வகைகள் இருந்தாலும்
                     எளிதாக ஒவ்வொரு உணவாக சமைத்து பழகினால் எளிதானதாக இருக்கும்.



                               இன்னும் தொடரும்  அடுத்த பதிவில்.....

என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
 சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.