05 அக்டோபர் 2014

குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை-காசிபாளையம்.

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
                  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                             இன்று 5-10-2014 இரவு ஏழு மணிக்கு கோபி காசிபாளையம்-குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற  பொதுகுழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு   பெருமையுடன் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டுக்கான2014செப்டெம்பர் 5 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற சூரிபாளையம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மனோகரன் அவர்கள் , கலந்துகொண்டு பாராட்டுப் பெற்றார். 
         அவரது பாராட்டு ஏற்புரையில் கடந்து வந்த பாதை பற்றி கூறும்போது, ''பலனை எதிர்பாராமல் கடமையை செய்யவேண்டும்என்றார்.உள்ளூர் பொதுமக்களாகட்டும்,கல்வி அதிகாரிகளாகட்டும் திடீர் வருகை புரிந்து கண்காணிப்பதையே தான் விரும்புவதாக கூறினார்.காரணம் வாக்கு சுத்தம்,தொழில் நேர்மை,நேரந்தவறாமை மற்றும் கடமை தவறாமையினை ஆரம்ப காலத்திலிருந்தே கடைப்பிடித்து வருவதாக கூறினார்.நல்லாசிரியர் விருதுக்கு கூட தானாக விண்ணப்பிக்கவில்லையென்றும்.அவரது நண்பரான இன்னொரு ஆசிரியரின் வற்புறுத்துதலே காரணம் என்றும் கூறினார்.14யூனியன்களில் நம்பியூர் A.E.O.,அவர்கள் தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய 82 தலைமையாசிரியர்களில் அனைவரின் சம்மதம் பெற்று தனியொருவராக சூரிபாளையம் பள்ளி தலைமையாசிரிரான திரு.மனோகரன் அவர்களை பரிந்துரை செய்து இருந்ததாகவும் பெருமைபடக் கூறினார்.(நல்லாசிரியர் விருது பெற்ற மரியாதைக்குரிய தலைமையாசிரியர் அவர்க பணியின் நேர்மை மற்றும் கடமை தவறாமை நமக்கும் பாடமாக அமையட்டும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக