31 மே 2017

"பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தினமும் இன்று முதல் இதுதான் உங்கள் உணவு..காலை : 100 பாதாம் கொட்டைகள், மதியம் : 4 முட்டைகள்  ,இரவு : சிக்கன்/மட்டன்/மீன்
( அளவில்லாமல்)
இப்படி உங்களுக்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கின்றீர்கள்? "தினமும் இதுதான் உணவா? ஆம்..
ஐயோ.. பத்தே நாளில் மாரடைப்பு வந்து செத்தே போய் விடுவோம்.."
இதுதான் நம் ஒவ்வொருவரின் பதிலாக இருக்கும். ஆனால்..ஆனால்?
இந்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் உங்கள் எடை 3 மாதங்களில் 12 கிலோ குறையும்.
உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, குளுகோஸின் அளவு நார்மலுக்கு வந்து விடும்.
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்துவிடும். மாரடைப்பு அபாயம் நீங்கிவிடும்..
இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மாட்டோம்.
ஆனால் அதுதான் உண்மை என்று "பேலியோ டயட்" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.
ஆனால்.. வாசிக்க வாசிக்க.. நாம் எவ்வாறு உணவு வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்கிற உண்மை என் முகத்தில் அடித்தது.
ஒட்டகப் பால் குடித்தால் சுகர் சரியாகிவிடும்.. புரோட்டின் பவுடர் சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும்.. வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுகர்போய்விடும்.
உப்பை நிறுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்..
என்றெல்லாம் நம்பப்படுவதெல்லாம் பொய் என்பதை அக்கு வேறு ஆணி வேறாய் கிழித்தெரிகிறது இப்புத்தகம்.
மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.
எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா.. ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்.. அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜேஜே என்று நடக்கும்.
இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது 80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் இருந்துவிட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை என்னும் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..
எதில் சுகர் ஏறும்?
அரிசி மற்றும் கோதுமை..
அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.
கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)
எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
BMI அளவை மாற்று..
அதென்ன BMI?
உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.
இதன்படி என்ன ஆனது?
168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.
1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்துவிட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டுவிட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.
ஆனால் படுக்கும்பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.
புரிகிறதா வியாபார தந்திரம்?
தமிழகத்தில் சுகர்நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப்படுகிறது?
காலையில் 4 இட்லி
மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்
இரவு : சப்பாத்தி.
இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?
ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒருவேளையில் சாப்பிடுகிறோம். பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?
நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.
புரிகிறதா எங்கு பிழை வருகிறது என்று?
சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.
இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது. நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.
ஆக 4 இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?
ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்? அதுதானே முறை?
சுகர் துளியும் இல்லாத உணவு எது?
அதுதான் அசைவ உணவு.
மனிதன் ஆதியில் படைக்கப்படும் பொழுதே விலங்குகளை வேட்டையாடி அதையே உண்டு வந்தான். அதை உண்ணும் வகையில்தான் மனிதனின் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இயல்பான உணவு.
அதில்தான் மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காலையில் இட்லிக்குப் பதிலாக 4 ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
அதில் துளியும் சுகர் இல்லை. எனவே ரத்தத்தில் சுகர் அளவு கூடாது. உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத்துவங்கும். தொப்பை கரையும். நம் உடல் கொழுப்பை சேகரிக்காமல் எரிக்கத் தொடங்குவதால் முட்டையில் உள்ள கொழுப்பும் எரியத் தொடங்கும்.
காலை உணவாக முட்டை சாப்பிடும் பொழுது, நான்கு மணிநேரம் பசி எடுக்காது. சுகர் அளவு கூடாது. நொறுக்குத்தீனி திங்க மனசு ஏங்காது.
இதை எப்படி நம்புவது?
பாடி பில்டிங் துறையில் பளு தூக்கும் வீரர்களுக்கு அவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் உணவு முறை என்ன?
தினமும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் மட்டுமே.
இப்பொழுது புரிகிறதா.. கொழுப்பு உணவு உடலுக்கு நன்மையே விளைவிக்கிறது என்று..
சுகர் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் திடீரென சுகரற்ற உணவிற்கு மாறாதீர்கள்.
ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழிறங்கும்.
முதல் ஒருவாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து வாருங்கள். பிறகு மாத்திரையே தேவைப்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...