மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது குழந்தைப்பாடல்கள் மிகவும் எளிமையானவை,இனிமையானவை.கொளப்பலூர் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நான் தொடக்கக்கல்வி பயின்றபோது கி.பி.1971ல் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் படித்து இன்புற்ற பாடல்!
பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா!
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று - வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெல்ல வெளியில் வருவதற்கும் - ஓட்டை
மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!
பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா!
கள்ளவழியில் செல்பவரை - எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக