10 மே 2017

பாரதி பாடலில் ஒன்று

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்தி டுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயி ராக்கி - எனக்கு
ஏதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு
மாறா உடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர் போல் - ஒளி
நண்ணித் திகழும் முகம் தந்து - மத
வேளை வெல்லுமுறை கூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்
எண்ணுங் காரியங் களெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - பல
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணில் கோடிவகை யின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருளல் வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்- அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!!!!
மகாகவி பாரதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...