31 மே 2017

போக்குவரத்துக்கழகத்தில் ??????

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இதுதாங்க போக்குவரத்துக்கழகத்தில் பிரச்சனை? 

[19:42, 16/05/2017] Gm Off Nataraj: ஓய்வு பெற்ற ஒரு தமிழக போக்குவரத்து கழக ஓட்டுனரின் கண்ணீா் மடல் :
ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..
நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாட்கள் அந்த இன்ஜின் சூட்டின் அருகிலே வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன். ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.
உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..

இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது, என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.
அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.
மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.
முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.
எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.
நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர! எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா?.
தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...
இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத் தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: முதல்வரிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்துவர திருமிகு. செங்கோட்டையன், தங்கமணி எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றுள்ளார்கள். 10 நிமிடத்தில் வருவதாக சென்றுள்ளார்கள்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: எஸ்மா சட்டம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொருந்தாது நாம் id act ஊழியர்கள் அதாவது நாம் நேரடியாக அரசு ஊழியர்கள் அல்ல அன்டர் டேக்கிங் ஊழியர்கள் அதனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாது ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம்
[19:45, 16/05/2017] Gm Off Nataraj: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ...
அத்தியாவசிய சேவை புரிபவர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம் .இதனால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம்.இந்த நிலையை உயர் நீதிமன்றம் ஒரு நபரின்வழக்கின் அடிப்படையில் ஒரு புறதீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்து அதன் மீது பேச்சுவார்த்தை நடந்து அதன் முடிவின் மீதுதொழிலாளர்கள் உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று சட்டம் உள்ளது.
ஆகவே நாம் செய்யும் வேலை நிறுத்தம் சட்டப்படியானது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள எஸ்மா சட்டம் என்பது நமக்கு பொருந்தாது. மேலும் நீதிமன்றமும் இத் தீர்ப்பிற்கு தொழிற்சங்கங்கள் விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளது.
நாளை தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் நமது சட்டப்படியான நடவடிக்கைகளையும் நமது கோரிக்கைகளையும் அதனை ஏற்காத அரசின் நிலைப்பாட்டையும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த உள்ளார்கள்.
இதன் பிறகே இரு தரப்பு வாதத்தின் அடிப்படையில் விசாரணை செய்து அதன் பிறகு நமக்கு எஸ்மா பொருந்துமா? பொருந்தாதா? என நீதிபதிகள் கொடுக்கும் தீர்ப்பே தற்காலிக தீர்ப்பு.இதன் பிறகு யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செல்லவும் சட்டம் உள்ளது.
தொழிலாளர்களே இன்று வந்த நீதிமன்ற எஸ்மா சட்ட தீர்ப்பினால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொழிற்சங்கங்கள் வழிகாட்டுதல்படி நாம் செயல்படுவோம் என்று ஆணித்தரமான முடிவோடு வேலை நிறுத்தத்தை தொடர்வோம்.


ஒரு நூறு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பங்களை நான் அறிவேன். ஒட்டுநர்/ நடத்துனர் உத்தியோகங்களில் பணியில் இருப்பவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகள் (occupational hazards) சொல்லில் வர்ணிக்க இயலாதவை. சுவாசக் கோளாறு, எலும்பு தேய்மானங்கள், இடுப்பு எலும்பு/தசை வலிகள் என அவர்களின் வாழ்வே இருண்டு கிடக்கிறது. நம் குண்டும்குழியுமான சாலைகளில் இந்த காயிலான் கடை பேருந்துகளை 30-40 ஆண்டுகள் ஓட்டுவதும், அதில் பணி நேரம் முழுவதும் இருப்பது என்பதும் துயரத்திலும் துயரமே, அவர் விரும்பி அல்ல தங்களின் வறுமை/குடும்ப சூழல் கருதியே இந்த கேடு கெட்ட வேலையில் நீடிக்கிறார்கள்/ நீடித்தார்கள்.
அவர்களின் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை 20 ஆண்டுகளாக வழங்காமல் அவர்களை அலைக்கழித்து அதை வைத்து சூதாடிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் மீது மக்கள் காறி உமிழ வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களம் காண வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...