உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்த அத்தனை வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையம்வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவில்

நகர்ப்புறங்களில் 1 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 வாக்காளர்களும், ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 929 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
நகர்ப்புறங்களில் 17 ஆயிரத்து 690 வாக்குச்சாடிகளும், ஊரகப் பகுதிகளில் 30 ஆயிரத்து 681 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 மாநகராட்சிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்காளர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் அடையாளச்சீட்டு பெற இயலாதவர்கள், வாக்குப்பதிவன்று வாக்குசாவடி அருகில் தேர்தல் பணியாளர்களால் வழங்கப்படும் அடையாளச்சீட்டினை பெற்று வாக்களிக்கலாம்.

அல்லது ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்தும் வாக்களிக்கலாம்.
நகர உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 80 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுப்போட வேண்டும். அதனால் வாக்குப்பதிவு தாமதமாகலாம்.
எனவே, ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில் வாக்குச்சாவடிகளுக்கு மாலை 5 மணி வரை வரும் வாக்காளர்கள் அனைவரும், எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியாயமாகவும், அச்சமின்றியும் பணிபுரியவேண்டும் எனவும், ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்எனவும் அறிவித்துள்ளது..
இந்த வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், , வெளிப்படையாகவும், அமைதியாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்திட அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், , வெளிப்படையாகவும், அமைதியாகவும், உரிய பாதுகாப்புடன் நடத்திட அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக