26 அக்டோபர் 2011

தமிழர்களின் அளவைகள்

அன்பு நண்பர்களே,வணக்கம். 

   இந்த பதிவில் தமிழர்களின் அளவைகள் பற்றி காண்போம்.


கால வாய்ப்பாடு

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

   நீள வாய்ப்பாடு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

     முகத்தலளவை

1 சோடு - 360 நெல்
1 ஆழாக்கு - 168 மி.லி.
1 உழக்கு - 336 மி.லி.
1 உரி - 672 மி.லி.
1 நாழி - 1.3 லி.
1 குறுணி - 5.3 லி.
1 பதக்கு - 10.7 லி.
1 முக்குறுணி - 16.1 லி.
1 தூணி - 21.5 லி.
1 கலம் - 64.5 லி.
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 700 மி.லி.
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி.
1 நெய்க்கரண்டி - 4.0 மி.லி.
1 உச்சிக்கரண்டி - 16 மி.லி.
1 மேஜைக்கரண்டி - 16 மி.லி.
1 பாலாடை - 30 மி.லி.
1 எண்ணெய்க்கரண்டி - 240 மி.லி.

  முகத்தல் வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

 

Liquid and grain measures:
2 செவிடு = 1 பிடி
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி அல்லது காடி
3 தூணி = 1 கலம்

      நிறுத்தலளவை

1 உளுந்து அல்லது 1 கிரெயின் - 65 மி. கி.
1 குன்றி - 130 மி. கி.
1 மஞ்சாடி - 260 மி.கி.
1 மாஷம் - 780 மி.கி.
1 பனவெடை - 488 மி.கி.
1 வராகனெடை - 4.2 கி.
1 டிராம் - 4.2 கி.
1 கழஞ்சு - 5.1 கி.
1 பலம் - 41 கி. (35 கி.)
1 கஃசு அல்லது கைசா - 10.2 கி.
1 தோலா - 12 கி.
1 ரூபாவெடை - 12 கி.
1 அவுன்ஸ் - 30 கி.
1 சேர் - 280 கி.
1 வீசை - 1.4 கி.கி.
1 தூக்கு - 1.7 கி.கி.
1 துலாம் - 3.5 கி.கி.

பொன்நிறுத்தல் வாய்ப்பாடு

4 நெல் எடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பனவெடை
8 பனவெடை = 1 வராகனெடை
5 பனவெடை = 1 கழஞ்சு
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்

 பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...