10 அக்டோபர் 2011

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி

                      பெற்றோர் சங்க நிர்வாகிகள்-தேர்வு
  
    அன்பு நண்பர்களே,வணக்கம்.

     கொங்கு தென்றல் வலைப்பதிவிற்கு தங்களை வருக! வருக!! என வரவேற்கிறோம்.
       
       கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள   கோபி கலை & அறிவியல் கலைக்கல்லூரியின் இந்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
          கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய முனைவர். ஆர். செல்லப்பன். அவர்கள் அனுமதியின்பேரில்  10-10-2011 அன்று நடைபெறும்   பெற்றோர் சங்க பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பிதழை பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.என 27-09-2011ந்தேதியன்றே  அனைத்து மாணவ,மாணவியர்களிடம் பெற்றோர்களுக்கு சென்றடையும் வண்ணம் கொடுத்து அனுப்பப்பட்டன.
            அதன்படி, பெற்றோர் சங்கப் பேரவைக்கூட்டம் 10-10-2011 இன்று மாலை 3-30மணிக்கு (KAM)கல்லூரி கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அவர்கள் முன்னிலை வகிக்க இந்த ஆண்டுக்கான பெற்றோர் சங்க செயற்குழுக் கூட்ட நிர்வாகிகள் பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
          கடந்த ஆண்டு செயற்குழு நிர்வாகிகள் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட பெற்றோர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும்,  கடந்த ஆண்டுகளைப் போலவே மாணவ,மாணவியராகிய நமது குழந்தைகள் நலனுக்காகபெற்றோர் சங்கப் பேரவை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்புக்கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
        புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பேரவை நிர்வாகிகள்  தம் குழந்தைகளான மாணவ,மாணவியருக்கு ஒழுக்கம்,சமுதாயச்சிந்தனை,ஆளுமைத்திறன்,வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை மேம்படுத்துதல்,பிறருக்கு உதவும் மனப்பாங்கு,தொழில்நுட்பத் தெரிவுகள், பல்கலைக்கழகத்திலேயே மிகச்சிறந்த   இக்கல்லூரியின் நூலகத்தைப் பயன்படுத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியப்    
பெருமக்களோடு இணைந்து  இக்கல்லூரியில் எளிதாகக் கிடைக்கும் வசதிவாய்ப்புகளைப்பயன்படுத்த,  இன்னும் ஊக்கம் அளித்தல் இவை சம்பந்தமான அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு கொடுத்து கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்களுக்காக  கல்லூரி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பது மற்றும் செயல்படுவது மற்றும் இக்கல்லூரியின் அனைத்து வசதிகளையும் மாணவ,மாணவியர்கள் அறியச்செய்வதுடன் பெற்றோர்களாகிய நாமும் அறிந்து கொள்ளவேண்டும்.இந்த வசதிகளை நம் குழந்தைகள் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதனையும் கண்காணிப்பது.என உறுதி ஏற்றுக்கொண்டனர்.
   தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயல்பட அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 திருமதி ;  பெற்றோர் சங்கப் பேரவைத் துணைத்தலைவி அவர்கள் நன்றியுரையாற்ற பெற்றோர் சங்கக்கூட்டம் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...