07 அக்டோபர் 2011

காய்கறிகளிலிருந்து நல்ல பயன்களை பெற

          நமது உடல் நலத்திற்கு காய்கறிகள் இன்றியமையாதவை. நியாயமாக, நாம் எவ்வளவு ‘சாதத்தை’ சாப்பிடுகிறோமோ அந்த அளவு காய்கறி சாப்பிட வேண்டும். காய்கறிகள் விற்கும் விலைக்கு, அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது கடினம். ஆனால் நாம் உண்ணும் குறைந்த அளவு காய்கறிகளில் உள்ள சத்துக்களை தவறான சமையல் முறையினால் இழக்கக் கூடாது.
காய்கறிகளிலிருந்து நல்ல பயன்களை பெற, இதோ சில டிப்ஸ்!
• காய்கறிகள் நேரடியாக தோட்டத்திலிருந்து, சமையல் அறைக்கு புதிதாக வந்துவிட்டால் தேவலை! இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. சமைக்கும் முன் காய்கறிகளை நன்றாக தேய்த்து கழுவவும். ஆனால் எந்த சமயத்திலும், காய்கறிகளை தண்ணீர் அமிழ்த்தி வைக்காதீர்கள். உங்களுக்கு தெரியும். சில விட்டமின்களும் தாதுப் பொருட்களும் தண்ணீரில் கரைபவை என்பது. தண்ணீரில் போட்டு சில விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தண்ணீரில் கரைந்து விடும்.
• சமைப்பதற்கு சிறிது நேரம் முந்தியே காய்கறிகளை நறுக்க வேண்டும்.
• வாங்கிய காய்கறிகளை ‘ஃப்ரிட்ஜ்ஜில்’ வைக்கும் போது, காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது. ஆப்பிளுடன் கேரட்டை வைத்தால், கேரட்டின் சுவை கசப்பாகி விடும். வெங்காயத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து வைத்தால் கிழங்கு சீக்கிரம் கெட்டு விடும். இலையுடன் கூடி வரும் (காலிப்ளவர், முள்ளங்கி) காய்கறிகளை அப்படியே ‘ஃப்ரிட்ஜில்’ வைக்காமல், இலைகளை நறுக்கி எடுத்து விடவும்.
• காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்காதீர்கள். சிறிதாக நறுக்கப்பட்டால் காய்கறிகளின் ருசி, ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும்.
• காய்கறிகளின் தோலை உரிக்கும் போது, அதிகமாக தோலை நீக்க வேண்டாம்.
• உருளைக்கிழங்குகளை வாங்கும் போது, அவை திட்டு திட்டாக பச்சை நிறமாக, முளையுடன் காணப்பட்டால் அவற்றை வாங்காதீர்கள்.
• பல இல்லத்தரசிகள் செய்யும் தவறு காய்கறிகளை “ஒவராக” வேக வைத்து விடுவது தான். வேக வைக்க எவ்வளவு குறைந்த அளவு தண்ணீர் தேவையோ, அவ்வளவு தண்ணீரையே உபயோகிக்கவும். இந்த தண்ணீரை கொட்டி விடாமல், சமையலில் பயன்படுத்தவும்.
• பொதுவாக, காய்கறிகளை வேக வைக்க சிறந்த முறை ‘ப்ரஷர் குக்கரில்’ வேக வைப்பது தான்.
• தனியே வேக வைக்கும் போது, தண்ணீரை மட்டும் அடுப்பில் வைத்து, கொதித்தவுடன் நறுக்கி வைத்த காய்கறி துண்டுகளைப் போடவும். பிறகு தீயைக் குறைத்து வேக விடவும். இதற்கு விதிவிலக்கு கிழங்கு வகைகள். இவற்றை குளிர்ந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
• சமையலுக்கு பொதுவாகவோ “எவர்சில்வர்” பாத்திரங்களை உபயோகிப்பது நல்லது.
• பூச்சி அரித்தது, காற்றாலும், வெய்யிலினாலும், உலர்ந்து, வற்றிப் போய், சாரமிழந்து, நாட்பட்டதால் மக்கிய காய்கறிகளை உபயோகிக்க கூடாது என்கிறார் சுஸ்ருதர்.
உணவு நலம் ஜுன் 2010
காய்கறிகளை, சமைக்கும், முறை, காய்கறிகள், நியாயமாக, சத்துக்கள், சமையல்,
காய்கறிகளிலிருந்து, நல்ல, பயன்களை, பெற, டிப்ஸ், தோட்டம், விட்டமின்களும்,
தாதுப் பொருட்களும், ஊட்டச்சத்து, ப்ரஷர் குக்கர், எவர்சில்வர், பாத்திரங்கள்,
சுஸ்ருதர்,
காய்கறிகளை சமைக்கும் முறை
நமது உடல் நலத்திற்கு காய்கறிகள் இன்றியமையாதவை. நியாயமாக, நாம் எவ்வளவு ‘சாதத்தை’ சாப்பிடுகிறோமோ அந்த அளவு காய்கறி சாப்பிட வேண்டும். காய்கறிகள் விற்கும் விலைக்கு, அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது கடினம். ஆனால் நாம் உண்ணும் குறைந்த அளவு காய்கறிகளில் உள்ள சத்துக்களை தவறான சமையல் முறையினால் இழக்கக் கூடாது.
காய்கறிகளிலிருந்து நல்ல பயன்களை பெற, இதோ சில டிப்ஸ்!
• காய்கறிகள் நேரடியாக தோட்டத்திலிருந்து, சமையல் அறைக்கு புதிதாக வந்துவிட்டால் தேவலை! இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. சமைக்கும் முன் காய்கறிகளை நன்றாக தேய்த்து கழுவவும். ஆனால் எந்த சமயத்திலும், காய்கறிகளை தண்ணீர் அமிழ்த்தி வைக்காதீர்கள். உங்களுக்கு தெரியும். சில விட்டமின்களும் தாதுப் பொருட்களும் தண்ணீரில் கரைபவை என்பது. தண்ணீரில் போட்டு சில விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தண்ணீரில் கரைந்து விடும்.
• சமைப்பதற்கு சிறிது நேரம் முந்தியே காய்கறிகளை நறுக்க வேண்டும்.
• வாங்கிய காய்கறிகளை ‘ஃப்ரிட்ஜ்ஜில்’ வைக்கும் போது, காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது. ஆப்பிளுடன் கேரட்டை வைத்தால், கேரட்டின் சுவை கசப்பாகி விடும். வெங்காயத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து வைத்தால் கிழங்கு சீக்கிரம் கெட்டு விடும். இலையுடன் கூடி வரும் (காலிப்ளவர், முள்ளங்கி) காய்கறிகளை அப்படியே ‘ஃப்ரிட்ஜில்’ வைக்காமல், இலைகளை நறுக்கி எடுத்து விடவும்.
• காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்காதீர்கள். சிறிதாக நறுக்கப்பட்டால் காய்கறிகளின் ருசி, ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும்.
• காய்கறிகளின் தோலை உரிக்கும் போது, அதிகமாக தோலை நீக்க வேண்டாம்.
• உருளைக்கிழங்குகளை வாங்கும் போது, அவை திட்டு திட்டாக பச்சை நிறமாக, முளையுடன் காணப்பட்டால் அவற்றை வாங்காதீர்கள்.
• பல இல்லத்தரசிகள் செய்யும் தவறு காய்கறிகளை “ஒவராக” வேக வைத்து விடுவது தான். வேக வைக்க எவ்வளவு குறைந்த அளவு தண்ணீர் தேவையோ, அவ்வளவு தண்ணீரையே உபயோகிக்கவும். இந்த தண்ணீரை கொட்டி விடாமல், சமையலில் பயன்படுத்தவும்.
• பொதுவாக, காய்கறிகளை வேக வைக்க சிறந்த முறை ‘ப்ரஷர் குக்கரில்’ வேக வைப்பது தான்.
• தனியே வேக வைக்கும் போது, தண்ணீரை மட்டும் அடுப்பில் வைத்து, கொதித்தவுடன் நறுக்கி வைத்த காய்கறி துண்டுகளைப் போடவும். பிறகு தீயைக் குறைத்து வேக விடவும். இதற்கு விதிவிலக்கு கிழங்கு வகைகள். இவற்றை குளிர்ந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
• சமையலுக்கு பொதுவாகவோ “எவர்சில்வர்” பாத்திரங்களை உபயோகிப்பது நல்லது.
• பூச்சி அரித்தது, காற்றாலும், வெய்யிலினாலும், உலர்ந்து, வற்றிப் போய், சாரமிழந்து, நாட்பட்டதால் மக்கிய காய்கறிகளை உபயோகிக்க கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...