கொதிக்காமல் இருக்கத்தான் குக்கர்
பிரஷர் குக்கர் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
திரவங்களை கொதிக்க வைக்க வேண்டுமானால் ஒன்று அவற்றின் உஷ்ண நிலையை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றின் ஆவி அழுத்தத்தை(Vapour Pressure) குறைக்க வேண்டும்.
இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் Vacuum Evaporator கள் இயங்குகின்றன.
எல்லா திரவங்களுக்கும் குறிப்பிட்ட உஷ்ண நிலையில் குறிப்பிட்ட ஆவி அழுத்தம் இருக்கும். உஷ்ண நிலையைக் கூட்டினால் ஆவி அழுத்தம் குறையும். அதனால் அவை ஆவியாக ஆரம்பித்து அழுத்தத்தை அதிகரிக்க முயலும். ஆவி அழுத்தத்தை கூட்டினால் அவை ஆவியாவது தாமதிக்கப்படும்.
பிரஷர் குக்கரில் இரண்டு தண்ணீர் உண்டு.
ஒன்று சமைக்கும் நீர். இன்னொன்று சமைக்கப்படுகிற நீர்.
சமைக்கும் நீர் நேரடியாக உஷ்ணத்தைப் பெறுவதால் சமைக்கப்படும் நீரை விட சீக்கிரம் கொதித்து ஆவியாகிறது.
சமைக்கும் நீர் ஆவியாகி, குக்கரின் உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகமான சூழலில் உஷ்ண நிலையும் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக சமைக்கப்படும் நீரின் ஆவி அழுத்தம் அதிகமாகி அது ஆவியாவது ஒத்திப் போடப் படுகிறது.
விளைவு, உஷ்ணமான நீர் சீராக உஷ்ணத்தை அரிசிக்கு அளிக்கிறது. அது சீராக வெந்து சோறாகிறது.
ஆகவே, பிரஷர் குக்கர் தண்ணீரை கொதிக்க வைக்க உதவவில்லை. அது கொதிக்காமல் இருக்கவே உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக