13 ஆகஸ்ட் 2011

பிரண்டை


பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌ற்‌கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம்.

‌
பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம்.

எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம்.

‌
பிர‌ண்டையை ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் இ‌ட்டு வத‌க்‌கி சாறு ‌பி‌ழி‌ந்து 20 - 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர முறைய‌ற்ற மாத‌வில‌க்கு ‌சீராகு‌ம்.

‌
பிர‌ண்டையை ‌தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் ஊற வை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 2-3 நா‌ட்க‌ள் குடி‌த்து வர பெரு‌‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்  


‌திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம்.

‌
பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.

சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம்.

‌
பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

‌
பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  போதைமது புகைத்தல் தீங்குகள் விழிப்புணர்வு