13 ஆகஸ்ட் 2011

உடல் தானம்


உதிரக்கொடை (இரத்த தானம் ) :
  • ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
  • உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும்
  • எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
  • சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் (இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன)
  • பலன் : இரத்தம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் படும்.
  • உதிரக்கொடை அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் உதிரவங்கியை அணுகவும்
பார்வைக்கொடை (கண் தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.

எலும்பு கொடை (எலும்பு தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும் 
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல  பிணியாளர்களுக்கு

உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறுப்பு  தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால்  இறந்த பின்னரே அவரது உறவினர்கள் தானம் செய்யலாம் 
  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
  • சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
  • முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கிட்னி தானம் செய்ய சட்டத்தில் ஒரு ஓட்டை உள்ளது. தற்சமயம் உள்ள Transplantation of Human Organs Act 1994 திருத்தப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ஓட்டை அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
உடல்கொடை (உடல்தானம்) :
·        உயிருடன் உள்ள ஒருவர் உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்ய  இசைவு தெரிவிக்கலாம்
·        இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் உடல் பெறப்படமாட்டாது
·        உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது.
·        உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
·        அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
·        பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
·        உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே. இது மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...