நோய்களும் அதற்கெதிரான போராட்டமும்
நோய்களை வென்று மரணத்தை முறியடிப்போம் என்று மருத்துவ உலகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தினமும் புதுப்புது வியாதிகள் முளைத்த வண்ணமாய் இருக்கின்றன. இன்னும் மனிதன் மூப்படைவதை தடுத்து நோயில் தத்தளிக்கும் முதியவர்களை, "என்றும் 16" ஆக்குவோம் என்று அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரில் இயங்கும் "க்ரானோஸ்", இன்னும் கேம்ப்பிரிட்ஜ்'ன் "சென்ட்டா ஜெனடிக்கஸ்", போன்ற ஆயுள் ஆய்வு மையங்கள் அறைகூவல் விடுக்கின்றன. மேலும் "ஸ்டெம் செல்"களை கண்டறிந்து உடலியல் குறைபாடுகளைக் களைவோம் என்று மரபியல் ஆய்வாளர்களும் மார்தட்டிக் கொள்ளத்தான் செய்கின்றனர். என்றாலும் இந்த நவீன உலகில் தோன்றும் புதுப் புது நோய்கள் அவர்களைத் திகிலடையச் செய்யாமலில்லை. எழுபதுகளில் 54ஆக இருந்த இந்திய ஆயுள் சராசரி விகிதம் தற்போது 64ஆக உயர்ந்துள்ளது என்னவோ உண்மைதான். என்றாலும் இது ஒரு ஆரோக்கிய வாழ்வின் சான்று என்று எடுத்துக்கொள்ள இயலாது. இதைத்தான் மனித ஆர்வலர் நெல்லை சு.முத்து இப்படிக் கூறுகிறார். "தொற்று நோய்களைத் தோற்கடித்தோம் அதனால் நீண்ட நாள் வாழ முடிகிறது. இது கிருமிகளுக்கு எதிரான போராட்டமே யன்றி மூப்புக்கு எதிரான வெற்றியல்ல" என்று. (நன்றி : தினமணி 15-02-2005). ஆக நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?!
வருமுன் காப்போம்!
நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த M.B.B.S. மருத்துவர்கள் எல்லாம் இன்று Traffic Police-களைப் போன்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து சிறப்பு மருத்துவர்களை பரிந்துரைக்கும் வழிகாட்டிகளைப் போன்றும்தான் செயல்படுகின்றனர். அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேதம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தீராத மூட்டு நோய்க்கு நிரந்தரத் தீர்வு, மூன்றே மாதங்களில் மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஆண்மைக் குறைவை நீக்க அவசர சிகிச்சை போன்ற பயமுறுத்தும் பத்திரிக்கை விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருந்துகளை உண்ணாதீர்கள் அதில் பக்கவிளைவுகள் அதிகம் என்ற பத்திரிக்கை உபதேசங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஆரோக்கிய வாழ்வை நாடும் நம் உள்ளங்களில் எழும் கேள்வி நோயற்ற வாழ்விற்கு வழிதான் என்ன? என்பதுதான்.
ஆரோக்கிய வாழ்வின் அவசியத் தேவைகள்
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நம் உடல் இயக்கம் பற்றிய தெளிவு நமக்கு ஓரளவிற்கு அவசியம். தொழில் துறையில் முன்னேறிவிட்ட இந்த இயந்திர உலகத்தில் மனிதன் சுவாசிக்கும் காற்றிலிருந்து குடிக்கும் குடிநீர்வரை எல்லாம் சுகாதாரமற்றதாகவே இருக்கின்றது. மேலும் நவீன இயந்திரங்களும் தானியங்கிகளும், கணினியும், மோட்டார் வாகனங்களும் நமது உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்துவிட்டன. என்றாலும் நமது வசதியைக் கருதி சுவைமிக்க வகைவகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றோம். உடல் உழைப்பும், உட்கொள்ளும் உணவும் சரிசமமாய் அமைய வேண்டும் என்ற உடலியக்கச் சூட்சுமம் நமக்குத் தெரிவதேயில்லை. உட்கொள்ளும் உணவைவிட உடல் உழைப்பு குறையும் போது மேல் மிச்ச உணவுகள் உடலில் கொழுப்பாக படிந்துவிடுகின்றன. விளைவு.. இரத்த அழுத்த நோய், இதய நோய், புற்று நோய், இரைப்பை புண், நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு மனிதன் இரையாகின்றான். இத்தகைய நோய்கள் கிருமிகள் மூலமாக பரவுவதில்லை. மாறாக மனிதன் தானாகவே தேடிக்கொள்ளும் வியாதிகள். மொத்தத்தில் நோயற்ற வாழ்விற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை உடற்பயிற்சியும் நல்ல உணவுப் பழக்கமும்தான். எனவே இவ்விரண்டையும் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சியின் நோக்கம் உடலை வலிமைப் படுத்துவது மட்டும்தான் என நினைக்கின்றோம். அது உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் "பளு" தூக்குவதும், "தண்டால்" எடுப்பதும்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றாட வீட்டுச் சாமான்களை நாமே சென்று வாங்கிவருவது, ஐவேளைத் தொழுகைகளை நடந்தே சென்று தொழுவது. சைக்கிள் பயணம், நீச்சல் போன்றவைகள் அனைத்துமே ஒரு வகை உடற்பயிற்சிதான். என்றாலும் இவை முழுப்பலனையும் தராது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.
மெல்லோட்டத்தின் (Jogging) பயன்கள்
மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1) நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
2) கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
4) இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
7) கை, கால்களில் விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாத வாறு உரத்த ஆடைகளை அணிவது நல்லது.
9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
10) 30 நிமிட மெல்லோட்டத்திற்குப் பின் தசைகள் மற்றும் உறுப்புக்களை தளர்வடையச் செய்யும் Callisthanic Exercise பத்து நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை வலிகள் ஏற்படாது.
11) நாள்தோரும் மெல்லோட்டம் செல்ல வேண்டும்.
12) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது.
உணவும், உடற் பருமனும்
வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) அறிக்கையின் படி உலகம் முழுவதும் 100 கோடி பேர் அளவுக்கதிகமான எடையுடையோர்கள், 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர், 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49% பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர் (நன்றி : தினமணி, 09-03-2005)
பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும் இந்த உடற் பருமனால் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்த நோய், மாரடைப்பு, சில வகைப் புற்று நோய்கள், Type - 2 வகை நீரிழிவு நோய், கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.
தேவை சரிவிகித உணவு
உணவின் ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பல உணவுகளைக் கலந்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்து உணவை சரிவிகித உணவு எனலாம். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத் திறன் (கலோரி)"ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு நாம் உட்கொள்ள வேண்டிய சரிவிகித உணவுப் பட்டியலையும் கலோரிகளை கணக்கிடும் முறை பற்றியும் ஒரு மாதிரி அட்டவனையை கீழே தருகிறோம்.
வ.எண் | உணவுப் பொருள் | அளவு (கிராமில்) | கலோரி/கிராம் | கணக்கிடும் முறை | கலோரியின் நிகர அளவு |
1 | அரிசி, கோதுமை, ராகி | 460 | 3.46 | 460 x 3.46 | 1591 |
2 | பருப்பு மற்றும் பயிர் வகைகள் | 40 | 3.40 | 40 x 3.40 | 136 |
3 | கீரை வகைகள் | 40 | 0.40 | 40 x 0.40 | 16 |
4 | காய்கறி வகைகள் | 60 | 0.40 | 60 x 0.40 | 24 |
5 | கிழங்கு வகைகள் | 150 | 1.20 | 150 x 1.20 | 180 |
6 | எண்ணைய் மற்றும் நெய் | 40 | 9.00 | 40 x 9.00 | 360 |
7 | சர்க்கரை | 30 | 4.00 | 30 x 4.00 | 120 |
மொத்த கலோரிகள் | 2452 |
நாளொன்றுக்குத் தேவைப்படும் கலோரியின் அளவு
வ.எண் | வேலையின் தன்மை | தேவைப்படும் கலோரி (ஆண்கள்) | தேவைப்படும் கலோரி (பெண்கள்) | 1-லிருந்து 3 வயது வரை | 4-லிருந்து 6 வயது வரை | 10-லிருந்து 12 வயது வரை |
1 | எளிய வேலை | 2400 | 1900 | 1200 | 1500 | 2100 |
2 | மிதமான வேலை | 2800 | 2200 | -- | -- | -- |
3 | கடினமான வேலை | 3900 | 3000 | -- | -- | -- |
தவிர்க்க வேண்டியவை
போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள் (Fast Food) , ஐஸ் கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு (Refined Foods) களையும், வெள்ளை மைதா போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட (Processed Food) களையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணையை பல முறை உபயோகப்படுத்தக் கூடாது.
சமையல் எண்ணை ஓர் தெளிவு
சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)
2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)
இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.
இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும்

வ.எண் | எண்ணெய்யின் பெயர் | முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid) விகிதம் | முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid) விகிதம் |
1 | சபோலா (கார்டி) ஆயில் | 73.3% | 9.4% |
2 | கார்ன் ஆயில் | 57.4% | 12.7% |
3 | சன் ஃபிளவர் ஆயில் | 52% | 17 % |
4 | சோயா ஆயில் | 50.8 % | 15 % |
5 | கடலை எண்ணைய் | 31 % | 17.4 % |
6 | நல்லெண்ணைய் | -- | -- |
7 | கடுகு எண்ணைய் | 18.1 % | 5.5 % |
8 | பாம் ஆயில் | 9 % | 53 % |
9 | தேங்காய் எண்ணெய் | 1.8 % | 86.3 % |
10 | நெய் | 0.0 % | 64.2 % |
எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.
1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்
2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்
3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்
4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு
5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக