13 ஆகஸ்ட் 2011

உணவுப்பழக்கம்.


சிறந்த உணவு பழக்கம்
நமது உணவுப்பழக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அரைவயிறு அன்னம் (திடப்பொருள்), கால்வயிறு நீர் (திரவப்பொருள்), கால்வயிறு காற்று (காலியிடம்) என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு சாப்பாடு: அவரவர் வயிறு அவரவர்க்கு தெரியும், அந்த அளவே சாப்பிட வேண்டும். கூடுவதும் குறைவதும் நல்லதல்ல.
இரவு நேரங்களில் குறைவாக சாப்பிடலாம்.
சிறுவயது என்றால் கொஞ்சம் அதிகமானாலும் பிரச்சனையி்ல்லை, ஆனால் வயதானவர்களுக்கு எல்லா உணவையும் செரிக்கும் அளவுக்கு உடல் ஒத்துக்காது.
சாப்பிடுவதில் அவசரம் வேண்டாம். அதிகம் சாப்பிடுவதை குறைக்கவும் அவசரமாக உள்ளே தள்ளி புரையேறுவதை தடுக்க இன்றைய மனோநல மருத்துவர்கள் கூறுவது சாப்பாடு வைத்ததும் அதை கொஞ்ச நேரம் உற்று பார்ப்பது.
இதை நாம் வேறு விதமாக செய்து கொண்டிருந்தோம். அதாவது சாப்பிடும் முன் இறைவனை நினைத்து கொஞ்சம் சாப்பாடு எடுத்து ஓரத்தில் வைத்துவிட்டு சாப்பிடுவதும், பிரார்த்தனை/அர்ப்பணம் செய்துவிட்டு சாப்பிடுவதும் ஆகும். இவ்வாறு செய்யாவிட்டாலும் பரவாயில்லை சாப்பிடுவதில் அவசரம் வேண்டாம்.
அதிகம் சாப்பிடுவர்களுக்கும் சாப்பாடே இல்லாதவர்களுக்கும் யோகம் இல்லை என்கிறது கீதை. அதிகமாக சாப்பிடுவதை விட அதிக சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது
உணவுக்கு இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறுகிறது இன்றைய மருத்துவம். ஆனால் உணவுக்கு முன் தான் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம், இடையிடையே தண்ணீர் குடிப்பது கூடாது என்றால் கஞ்சி உணவையே உண்ணக்கூடாது என்பது போலாகிவிடும்.
தேவை என்னவென்றால் வயிற்றில் உணவை செரிக்க வைக்கும் அமிலம் உணவுடன் கலக்க வேண்டும், அவ்வளவும்தான். உணவை நன்றாக சவைத்து சாப்பிடும் போது உமிழ்நீர் அதிகமாக உணவில் கலந்து சீரணிப்பதை எளிதாக்கும். தண்ணீர் அதிகமாக குடித்தால் சீரணி்ப்பதை கடினப்படுத்தும் என நினைக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் தண்ணீர் மிக மிக விரைவாக செரித்து விடும்.
கடின உணவு செரிக்க நேரம் ஆகும். இடையிடையே அல்லது முதலில் தண்ணீர் குடிப்பது சாப்பாட்டின் அளவை குறைக்கும். எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது சாப்பிடும் சாப்பாட்டை பொறுத்தது.
பொதுவாக சாப்பி்ட்டு கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.
அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிட்டால் உடம்பு அதிகமாகும், ஏனென்றால் நொறுக்குத்தீனி அதிகமாக பொரித்தது, இனிப்பு என்பதாக இருக்கும்.
உடம்பு வைத்துவிடும் என பயந்து சாப்பிட மறுப்பது தேவையில்லாத விசயம். அதற்குப்பதிலாக யோகா செய்தால் போதுமானது.
மாதத்திற்கு ஒரு நாளாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள். விரதம் தான் இருக்க வேண்டும் என்றில்லை இருந்தால் சந்தோஷம், ஆனால் மாதத்தில் ஒரு நாளாவது சாப்பாடு இல்லாமல் இருப்பது உடலுக்கு மிகமிக நல்லது.
இது முடியாவிட்டால் குறைந்த பட்சம் நீர் ஆகாரம் மட்டும் குறைந்த அளவு எடுத்து ஒரு நாள் இருந்து பழகுங்கள்.
சைவமா அசைவமா என்பது பெரிய பட்டிமன்ற தலைப்பு.
எந்த உணவானாலும் அதில் நிறைகுறைகள், தேவை தேவையில்லாதது சத்து அதிகமானது குறைந்தது என பலவகைகள் உள்ளது,
இருந்த போதும் நோய்நொடிகள் குறைவாக வருவது சைவ உணவில்தான். சைவ உணவிலும் மிக சத்தான உணவுகள் உள்ளது. ஆனால் சைவ உணவு அதிகமாக அது வேறு பிரச்சனைகளை கொடுக்காததாக இருக்கும்.
சில அறிவுரைகள்:
இரவில் தூங்கப்போகும் முன் பால் அல்லது வெந்நீர் குடியுங்கள்.
காலை எழுந்ததும் குறைந்தது 2 கப் தண்ணீர் குடியுங்கள்.
சாப்பி்ட்டு முடிந்ததும் 2 கப் தண்ணீர் குடியுங்கள்.
பசிக்காமல் சாப்பிட வேண்டாம். ஆனால் மதியம் கண்டிப்பாக நேரத்துக்கு சாப்பிட்டு விடுங்கள். சாப்பிட நேரமாகும் என்றால் தண்ணீராவது குடியுங்கள்.
காபி டீயை குறைத்துக்கொள்ளுங்கள்.
பெரியவர்கள் நொறுக்குத்தீனியை குறையுங்கள்.
இரவில் குறைவாக அல்லது லகுவான சாப்பாட்டை சாப்பிடுங்கள்.
அதிக குளிரானதையும் அதிக சூடானதையும் சாப்பிட வேண்டாம்.
அதிக காரம், அதிக இனிப்பு, அதிக புளிப்பு, அதிக உவர்ப்பு என்று எதி்லும் அதிகமாக இருப்பதை குறையுங்கள். அதற்காக இவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடாதீர்கள்.
பிள்ளைகள் சாப்பிடவில்லை என வருந்தாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என பாருங்கள், உடலுக்கு பாதகம் இல்லை என்றால் அவ்வகையானதை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். சாப்பாடாகத்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை.
மதியம் சாப்பிட்டதும் இரசம் சேர்த்தால் எளிதாக சீரணம் ஆகும்.
இறச்சி என்றால் உள்ளி(வெங்காயம்) தயிர், உருளைகிழங்கு என்றால் பூடு (வெள்ளைஉள்ளி), மற்றும் அவ்வப்போது நல்லமிளகு, கடுகு, மல்லி, மஞ்சள், பப்பாளி, பாவற்காய், வாழைப்பூ, கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி என்பது சரிவிகித உணவு. இதை கண்டிப்பாக அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இரவில் தினம் வாழைப்பழம் சாப்பிடலாம். (இழுப்பு, மூச்சுமுட்டல் உள்ளவர்கள் பாழையம்தோடன் என்றவகை பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்)
அளவாக சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அசோக சக்கரவர்த்தி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். சரித்திரத்தின் மூலம் அவரை நினைவில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அசோக
சக்கரவர்த்தி சாலை ஓரங்களில் மரங்கள் நடும்படி தன் குடிமக்களை பணித்தார். ஏன் தெரியுமா? மரங்கள் களைப்புற்றவழிப்போக்கனுக்கு நிழல்தருவதுடன் ஒரு வனப் பாதுகாப்பை ஒரு முக்கிய ஆக்ஸிஜன் மூலத்தை - நமது பிராண வாயுவை அளிக்கின்றன. மரங்கள் தட்ப வெப்ப நிலையை மட்டுப்படுத்துவதுடன், வெள்ளத்தை தடுக்கின்றன. முக்கியமாக மண் அரிப்பை நிறுத்துகின்றனமேலும் அவை லட்சகணக்கான  பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சரணாலயமாக விளங்கி மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழச் செய்கின்றன.
 
நான் ஏன் பழங்காலக் கதையைக் கூறுகிறேன்? அதற்கும் சைவ உணவிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் வியப்படையக் கூடும். நான் கதையை முடித்தபின் அதைப் பற்றிக் கூறுகிறேன்.
 
கடந்த சில ஆண்டுகளாக நாம் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நமது சாலைகளையும், நெடுஞ்சாலைகளையும் போடுவதற்கு அகலப்படுத்துவதற்கும் தடையாக நின்ற பல மரங்களை வெட்டியிருக்கிறோம். விநோதத்தைப் பார்த்தீர்களா - அசோக சக்கரவர்த்தி சாலையோரங்களில் மரங்களை நட்டார். நாம் சாலை அமைக்க மரங்களை  அகற்றுகிறோம். குறுகிய காலத்தில் நகரங்களை உருவாக்கவும் வீடுகளைக் கட்டவும் நாம் திருப்பிக் கொடுக்க இயலாத அளவு மரங்களை வீழ்த்தியுள்ளோம்.
   
இந்த பாரபட்சமான செயலின் விளைவுகளை நாம் இப்போது சந்திக்கிறோம் அல்லவா? இந்த மர இழப்பால் நாம் இன்று பிராண வாயுவிற்காகவும் சுத்தமான காற்றுக்காகவும் கஷ்ட
சுவாசம் செய்கிறோம் அல்லவா?     நமது தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால் தேவையான அளவு மழை பெய்வதில்லை.   கிடைக்கும் சிறிதளவு மழை கூட மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தங்கள் வேர்களை ஆழமாக செலுத்தி மண்ணை இறுக்கி வெள்ளத்தையும், மண் அரிப்பையும் தடுக்கக்கூடிய மரங்கள் இல்லை.    மேலும் நாம் பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளைக் கேட்க முடிவதில்லை. ஏனெனில் அவற்றிற்குப் புகலிடம் ஏதும் இல்i. இவையெல்லாம் ஏற்படக்காரணம் நாம் நமது அடிப்படைச்சரித்திரத்தை மறந்ததுடன் நமது முன்னோர்களின் அனுபவமும் அறிவும் மிக்க அறிவுரைகளை உதாசீனப்படுத்தியதுதான். நம்மில் பலருக்கு அசோகரை நினைவில்லை.     இப்பொமுதுதான் - எல்லாத் தீமைகளும் செய்யப்பட்ட பின்தான் - நாம் விழித்துக் கொண்டுவனமஹோற்சவத்தைகொண்டாடி முக்கிய நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நடுகின்றோம்.     நமது அரசு இப்போது வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து வனப்பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரால் எல்லாவற்றையும் செய்தபின், அசோக சக்கரவர்த்தி சொல்லிச் செய்ததன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். ஆனால் பூமித்தாய்க்குப் போதிய அளவு தீங்கு விளைவித்த பின்தான் இவற்றைச் செய்கிறோம்.     அதே போல் நாம் சைவ உணவு பற்றிப்பேசும் போது நம் முன்னோர்களால் பழமையும் பாரம்பரியமும் மிக்க அனுபவத்தால் நிருபிக்கப்பட்ட சரிவிகித சைவ உணவுதான் உடம்பையும் மனத்தையும் தூய்மையாகவும், ஆரோக்கியாமாகவும் வைத்திருக்க முடியும்.
 
பொதுவாக உணவு என்பது வழக்கம், தனிப்பட்ட கலை, பழக்கம் ஆகியவற்றால்  விளைந்த தனிப்பட்ட தெரிவாகும். எனினும், அதைத் தெரிந்து கொள்ளுமுன் சரிவிகித உணவு என்ன
என்பதைச் சொல்லவேண்டும். சரிவிகித உணவு என்பது
சக்தி:    கடுமையான வேலைகள் செய்ய - இது மாவுச் சத்து எனவும் வழங்கப்படும்.
புரதம்: உடல் அணுக்கள், கேசம், திசுக்கள் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான இரத்த அணுக்கள் மற்றும் பலமிக்க தோல் எதிர்ப்பு சக்திக்கும் தேவை.
சுண்ணாம்புச்சத்து:  இது புரத செரிமானத்திற்கு உதவி எலும்புகளுக்குச் சக்தி  அளித்து வளர உதவுகிறது.
கொழுப்பு: மிகக் குறைந்த அளவில் இது தசை இணைப்புகள் இலகுவாக இயங்க எண்ணையிடுகிறது.
ஜீவசத்து மற்றும் தாதுசத்து: மிதமான அளவில் கண்பார்வை பலப்படவும் பாதுகாக்கவும் உதவி, எல்லா புலன்கள். உறுப்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தை இயங்க வைக்கிறது.
ஏல்லாவற்றையும் விட முக்கியமானது உங்கள் உணவு இருதயம், ஈரல் மற்றும் சிறு நீரகங்கள் அதிக  பாரமேற்றக்கூடியதாக இருக்கக்கூடாது. ஏனெனில் இவை உடம்பில் உள்ள அதி முக்கிய உறுப்புகள். இவை நம் உடம்பை  நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன.
நார்ச்த்து: நாம் உண்ணும் உணவு எளிதில் செரிப்பதுடன் உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவ  வேண்டும். இதை சைவ உணவின் மூலம்தான் பெறமுடியும்.
 
சரிவிகித உணவுபற்றி சொல்லிவிட்டதால் இப்போதுதான் சைவ உணவு ஏன் அதி முக்கியமானது என்பதைக் கூறுகிறேன். நீங்கள் சாதம், சப்பாத்தி அல்லது எந்தத் தானியம் உண்டாலும் இந்தத் தானியங்கள் உங்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கின்றன.     இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகளுடன் ஒரு கோப்பை சாதம், அல்லது அடிப்படையில் அரிசி உண்பவராக இருப்பின், இரண்டு கோப்பைகள் அரிசி, குறைந்த பட்ச அளவு மாவுச்சத்து  அல்லது சக்தி வழங்கக்கூடியது.     இத்தோடு நீங்கள் ஒரு சிறிய அளவு பருப்பு- உதாரணமாக 50 கிராம்.இது கையளவுதான் இருக்கும். அதோடு சிறிதளவு கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு  மஞ்சள் இவை உங்களுக்குத் தோவையான அனைத்து புரதங்கள் மற்றும் ஓரளவு அனைத்து புரதங்கள் மற்றும் ஓரளவு சுண்ணாம்புச் சத்து, தாதுச்சத்து மற்றும் ஜீவசத்து  வழங்குகின்றன.
 
இதோடு சேர்த்து நீங்கள் சிறிய அளவில் ஏதாவது ஒரு பச்சையான  இலைகளுள்ள காய்கறியை  உண்டால் உங்கள் உடலுக்குத் தேவையாள அளவு  ஜீவசத்து கிடைத்துவிடும். நீங்கள்
இவற்றோடு மசாலா பொருட்களை (சிறிய அளவில்) சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் போன்றவை தேவையான அளவு தாதுச்சத்து கொடுக்கவல்லது. வெந்தயத்தூள் நிறைந்த அளவு சுண்ணாம்புச் சத்துக் கொடுக்கும். இது நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது. முட்டைக்கோஸ்,பீன்ஸ், காரட் இந்த காய்கறிகளில் பீட்டா  கரோட்டின் உள்ளது. இது புற்று நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
   
நீங்கள் காலை உணவு  உட்கொள்ளுமுன் ஒரு டம்ளர் நீர் அருந்துங்கள். இது உங்கள் அங்கக்கட்டை சுத்தப்படுத்தி உணவு மூலம் ஏற்படும் அமிலத்தன்மையிலிருந்து வயிற்றையும்,
குடலையும் பாதுகாக்கிறது.    காலை உணவிற்கு - இட்லி, தோசை அல்லது பூரியுடன் தேங்காய் சட்னி அல்லது உருளைக்கிழங்கு கறி சுவையாக இருப்பதுடன் தேவையான சக்தி வழங்கும் உணவாகும். ஆதோடு ஒரு நாள் உழைப்புக்குத் தேவையான ஜீவசக்தி கிடைக்கிறது     நீங்கள் பால் அருந்துபவராக இருந்தால் மதியம் ஒரு டம்ளர் மோர் அருந்துங்கள். இரவில் ஒரு டம்ளர் பாலுடன் ஒன்று அல்லது இரண்டு பழங்களை உண்ணுங்கள்.
   
காலை உணவை அரசனைப் போல் உண்ணுங்கள். (சைவ உணவுதான்) இது இட்லி, வடை, தோசை, பூரி போன்றவகைகளுடன் கொஞ்சம் சட்னி அல்லது காய்கறி. மதிய உணவை  
இளவரசனைப்போல் உண்ணுங்கள். சப்பாத்தி,சாதம்,காய்கறிகள், பச்சடி முதலிய வளர்ச்சி உணவு. இரவு உணவை ஏழையைப்போல் உண்ணுங்கள் (அதாவது வகைகளை குறைத்து குறைந்த அளவு உண்ணுங்கள்.     இது உங்கள் செரிமான  உறுப்புகளுக்கு இரவில் ஓய்வளிக்கிறது. என்னை நம்புங்கள். இது இரவில் கெட்ட கனவுகளை அகற்றி அமைதியான உறக்கத்தை அளிக்கிறது. இது காலையில் புத்துணர்ச்சியுடனும் சக்தியுடனும் எழுந்து உழைக்க உதவுகிறது.
   
நீங்கள் நான் கூறியுள்ளது போல் சைவ உணவு உட்கொண்டால் உங்கள் உடம்புக்கு தேவையானவற்றை தானாக எடுத்துக் கொள்கிறீர்கள். மருத்துவர் உங்களிடம் 2700 கலோரிகள்
அல்லது 1900 கலோரிகள்   சக்தியுள்ள உணவு உட்கொள்ள வேண்டும். எனக்கூறும் போது குழப்பமடைய வேண்டாம். ஏனெனில் நான் தெரிவித்துள்ள உணவு அதே அளவு மதிப்புடையது.
என்னை நம்புங்கள். உங்களுக்கு இதற்கு மேல் ஜீவசத்து தாதுசத்து, புரதம் தேவையில்லை. ஆதற்கு மேல் ஏதாவது  உண்டால் உடல் அதைச் செரிக்க இயலாமல் வீணடிக்கப்படும்.
   
இந்த உணவை தொடர்ந்தால்  விரைவீலேயே உங்களை மாரடைப்பு., சிறுநீரக கோளாறுகள், ஈரல் கோளாறுகள் மற்றும் எந்த நோயும் பாதிக்காது என்பதை உணர்வீர்கள். எங்களுக்கு
தலைவலி அல்லது  சளி போன்றவை கூட வராதது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் அஜீரண மற்றும் மலச்சிக்கல் கோளாறுகளால் துன்புறமாட்டீர்கள்.
   
நீங்கள் வயிற்றுவலிக்கு மருந்து உண்ண மாட்டீர்கள் - அதாவது உங்கள் குடற்புண் அல்லது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாது. பச்சை காய்கறிகள் உங்கள் கண்பார்வையை
மேம்படுத்தும். உங்களுக்கு இரத்த சோகை வராததுடன் உங்கள் எடை சரிவிகிதத்;தில் இருக்கும். எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் ஜீவசத்து சி அளிக்கின்றன. சூரிய ஒளி உடம்புக்கு ஜீவசத்து டி அளிக்கிறது.
   
நீங்கள் அதிகப்படி புரதம் உட்கொள்ளுவதை நிறுத்திக் கொண்டால் நீங்கள் சுண்ணாம்புச்சத்து இழப்பால் பாதிக்கப்படமாட்டீர்கள். அதாவது உங்கள் எலும்புகள் பலமிழக்காது. உங்களை
ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்புகள் பலமிழப்பதால் வரும் நோய் உங்களை பாதிக்காது.
    சைவ உணவின் மகத்துவம் அப்படிப்படது. நீங்கள் ஆரோக்கியமான, நோயற்ற வாழ்வு வாழலாம்.
    சைவ உணவு உங்களுக்கு இவ்வளவு கொடுக்கும் போது அதிகப்படி புரதம். ஜீவசத்து, தாதுசத்து பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். (நான் கூறுவது அசைவ உணவின் மூலம்
கிடைப்பவற்றை) நீங்கள் கேட்கலாம். எவ்வளவோ அசைவ உணவுக்காரர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களே என்று.
   
நான் ஒரு விசயத்தை கூற விரும்புகிறேன். இந்த அசைவ  உணவுக்காரர்கள் பாதிக்கப்படும் போது மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் என்ன கூறுகிறார்? உப்பு. அனைத்து வகை
மசாலாக்கள், மிளகாய் சார்ந்த உணவு இவற்றைவிலக்கச் சொல்கிறார். அதன் அர்த்தம் என்ன? இந்த மசாலாக்கள், உப்பு, மிளகாய் இல்லாமல் எந்த அசைவ உணவாவது சுவையாக இருக்குமா? எனவே தான் நீங்கள் சைவ உணவுக்காரராக கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். எனவே நான் கேட்கிறேன். ஏன்  இப்போதிருந்தே சைவ உணவுக்காரராக இருந்து இந்த  தொந்தரவுகளை தவிர்க்கக்கூடாது.
   
அசைவ உணவை அடிப்படையாகக் கொண்ட இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 210 மில்லியன் ரூபாய்கள் வயிற்றளச்சிக்காக செலவு செய்கின்றனர் என்பது தெரியுமா? ஏன்? ஏனெனில்
அவர்கள் அனைவரும் குடல்புண்,பெருங்குடல் புற்றுநோய,; அடிக்கடி தலைவலி மற்றும் பல  நோய்களுக்கு மூலகாரணமான மல்ச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். அசைவ உணவு உங்களுக்கு என்ன செய்யும் என்பதற்கு  இது ஒரு சிறு உதாரணம். எனவே சைவ உணவு என்பது நோயற்ற வசதியான  வாழ்வுக்கு ஆயுள் காப்பீடு செய்வதாகும்.
   
நான் ஆரம்பத்தில் மரங்கள் பற்றி கூறிய கதையை போல் இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்று  நமது முன்னோர்களும், பெரியோர்களும் கூறியவற்றை
உதாசினப்படுத்துவதன் மூலம் நமக்குப் பிரச்சினைகளை அழைக்கிறோம். நாம் மேலும் உதாசீனப்படுத்தினால், நாம் மரங்களுக்கும் காடுகளுக்கும் செய்ததைப் போல, நாம் ஏதாவது சரிப்படுத்தும் செயல் செய்ய முடியாமல் போகும். நினைவில் வைத்திருங்கள். இது உங்கள்; ஆரோக்கியம், உங்கள் உடம்பு, நல்ல ஆரோக்கியத்தை நிரந்தரமாக இழந்தால் மருந்துகள் கூட அதை மீட்டுக் கொடுக்க முடியாது.
   
இயற்கை நமக்கு கட்டளையிட்டுள்ள உணவு தானியங்கள், பருப்பு வகைகள், கனிகள், காய்கறிகள், கீரைகள் மற்றும் கொட்டைகளை உள்ளடக்கியதாகும். 1) மனிதனுக்கு இந்த வவை
உணவிற்கான முக்கிய காரணம் இது உயிர்வதை இல்லாதது 2) தாவரம் சார்ந்த உணவு நோய்களற்றது மட்டுமல்லாமல் நோய்களைக் குணமாக்கவும் உதவுகிறது. 3) தாவரம்  சார்ந்த சைவ உணவு கொழுப்பு, மாவுச்சத்து, புரதம் ஜீவசத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து, நீர் உள்ளிட்ட சரிவிகித உணவு வழங்கக்கூடியது 4) இந்த உணவு இயற்கையான கவை மற்றும் மணத்துடன் பலவித சுவைகளில் கிடைக்கிறது. இவை கண்களையும் கவரவல்லவை. முக்கியமாக பழங்களும் காய்கறிகளும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, கறுப்பு, பழுப்பு, சிகப்பு என்று  அனைத்து நிறங்களிலும் உள்ளன. இனிப்பு, துவர்ப்பு, கசப்பு இவை கலந்து பல சுவைகளில் உள்ளன. இந்தப் பழங்கள் காய்கறிகளை உறிக்கலாம், வெட்டலாம்,உறிஞ்சலாம், பழங்கள் சுவையானவை. புத்துணர்ச்சியளிக்கக்கூடிய, கொழுப்பு சத்தைக் குறைக்க வல்லன. உண்மையில் பழங்களும், காய்கறிகளும் குறைந்த செலவுள்ள சத்துணவுச் சக்தி இல்லங்களாகும்.
   
சென்னை நகரில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை  ஆகிய இடங்களில் அரசால் நடத்தப்படும் கொலைக்களங்களில் விலங்குகளுக்கு மிகப் கொடுரமான கொடுமைகள்
இழைக்கப்படுகின்றன. சட்டங்கள் அன்றியும், விலங்குகள் காட்டு  மிராண்டித்தனமான முறையில் சுகாதாரமற்றதாக கூறப்படும்  சூழலில் கொல்லப்படுகின்றன. கொலையில் ஐந்து பேர் ஈடுபட்டுள்ளனர். ஒருவன் விலங்கின் இரு முன்னங்கால்களையும்  கட்டும் போது மற்றொருவன் இரு பின்னங்கால்களையும் கட்டுகிறான். ஒருவன் பிடிப்புக்காக
வாலை முறுக்கி மற்றொருவன் வாயைக் கட்டுகிறான். சிறிது நேரத்தில் விலங்கு மட்டமாக தரையில் கிடத்தப்படுகிறது.
   
விலங்கு கஷ்டப்பட்டு மூச்சு  விடுகிறது. வாயிலிருந்து நுரை கஷ்டப்பட்டு மூச்சு விடுகிறது. வாயிலிருந்து நுரை வருகிறது. மூக்கிலிருந்து இரத்தம் வழிகிறது.மீண்டும் எழுந்து நிற்க விலங்கு உடுக்கும் அனைத்து முயற்சிகளும் கொலைக்காரர்களின் உதை குத்துகளால் முறியடிக்கப்படுகின்றன.     ஒரு வேகமான இயக்கத்தில் விலங்கின் கழுத்து எதிர்திசையில் திருகப்படுகிறது. இதனால் கழுத்து தோல் இறுகி கழுத்து நரம்புகள் புடைக்கின்றன. கத்தயால் ஒருவன் விலங்கின் தொண்டையை வெட்ட இரத்தம் பீறிட்டு வெளிவருகிறது.    இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் அந்த விலங்கு எழுந்து நிற்க கடைசி முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே, வெப்பத்தை வெளியேற்றகாயத்தின் மேல் ஒரு வாளி தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஒரு சிறுவன் வந்து விலங்கை தலைகீழாக கட்டி  தோலுரிக்கத் துவங்குகிறான். இந்தச் சோதனை முழுவதும்  ஏழு முதல் பத்து நிமிடம் வரை நீடிக்கிறதுஅதன் பிறகே
உண்மையில் அந்த விலங்கு இறந்ததாக அறிவிக்கலாம்.    இது ஒரு தனிப்பட்ட  பசுவின் முடிவல்ல: அரசால் நடத்தப்பட்டு; கொலைக்களங்களில் தினந்தோறும் கொடுரமாகக் கொலை செய்யப்படுகிறது. தோலுரிக்கப்படும் ஆயிரக்கணக்கான பசுக்கள். ஆடுகள்,பன்றிகள் இவற்றின் விதியாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...