13 ஆகஸ்ட் 2011

மௌனம்


வார்த்தைகள் இல்லாத புத்தகம் மவுனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மவுனம் என்பது வெளிச்சம், நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மவுனம் என்பது
இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மவுனம் என்பது மூடி இதை தயாரித்து விட்டால் எல்லாஉணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மவுனம் என்பது போதி மரம்இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மவுனம் என்பது தவம் - இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
 
வரம்
    “
மவுனம் என்பது வரம்நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மவுனம் கொண்டு சிந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி  நாம்  நமக்குள் இறங்குவோம்.     எங்கே, எப்பொழுதோ படித்த இதயத்தை வருடியவரிகள் இவை. “உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல் தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சு தான்”. அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம். எதற்காப் பேசுகிறோம். எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களை பேசவிட்டு மவுனம் சாதித்து தேவையான பொழுது மட்டும் பேசி, பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறருக்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிறபேச்சை ஒலி நாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது. நாவின் அமைப்பைப் போல் நாம் சொல்லும் சொல் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும்எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன். நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததின் காரணம் ஒளவையார் போலவரப்புயரஎன்று சுருங்கப்  பேசி வாழ்வதற்குத்தான்இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய்  சொல்ல முயன்றால், சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசிய பின் பிறர் அறியாமல் நாக்கை கடித்துக் கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.
இறைவன் மொழி:
   
மவுனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணத்திற்கு பெண்ணின் மவுனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மவுனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மவுனமே பேசுகிறது.
மவுனம் இறைவன் மொழி, அது தட்சிணாமூர்த்தி தத்துவம்.
பிள்ளை மதி செஞ்சடையான்
பேசாப் பெருமையினான
என்று தாயுமானவர் தன் மவுன குருவைப் பாடுவார்.
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
என்று  முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மவுனம் தான். கல், ஆலின் குடை அமர்ந்து மவுனித்து உடல் மொழியால் சின் முத்திரைத் தத்துவத்தைப் போதித்த
தட்சிணாமூர்த்தியைவாக்கு இறந்த பூரணம். சொல்லாமல் சொன்னவன்என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும்.   அமைதி வேறு, மவுனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டானது. மவுனம் உள்ளிருந்து வருவது. அது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்றநிலைமவுனத்தை நம் முன்னோர்கள்ஓம்;” என்றபிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.
    “ஒம்என்ற பிரணவத்தை + + ம் எனப் பிரிக்கலாம் () அறிவாக உள்ள இறைவனை () உயிராக உணர்கிற மனிதன் (ம்) பேரின்ப நிலையாகிய மவுனத்தில் ஆழ்கிறான்
என்பது பிரணவப் பொருள்.
 
சுயபரிசோதனை:
   
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் போராட்டம். நின்று. நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒருமுறை,
நாட்காட்டியில் ஞாயிறன்று ஆறு நாட்களையும் சேர்த்துக் கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி, தேவை மகிழ்ச்சி. இது மவுனத் தவத்தால் கிட்டும்மவுனத் தவம் செய்கிறவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி அகக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறைமனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும் பற்று ஈகையாகிறதுமுறையற்றபால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறதுஅவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு அகந்தை அகன்று. தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கைக் கல்வியில் தேர்ச்சி.
    “ தன்னை அறிந்து இன்பமுறை வெண்ணிலாவே
     
ஒரு  தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் தத் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும்
பெறுகிறான். சாதனைகள் கை கூடுகின்றன. அவன் மனம் நிறைகிறது.   
 
மவுன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும்  வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும்.     இரண்டாவது. ஆன்மத் தூய்மைக்காக குடும்பம். பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்பு தான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும். குண்டலினி யோகம். துரியாதீத தவம் போன்றவை மவுனத் தவமாகாது. அவை குறுகிய கால உளப் பயிற்சியாகும்.     மவுனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மவுனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரிஎன்றார். இரண்டாம் துறவுநீ பேசி விட்டாய்என்றார். மூன்றாம் துறவிநான் மட்டும் தான் பேசவில்லைஎன்றார்.   தமிழன்பனின் உள்ளொலியை மவுனமாகக் கேளுங்கள் உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறக்காமல் பதில் சொன்ன மொழி. ஒசை  இல்லாமல் பதில் சொன்ன மொழி. வார்த்தை இல்லாமல் பதில் சொன்ன மொழி.- மௌனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...