11 ஜூலை 2016

சமூக ஆர்வலர்களான ஆசிரியப் பெருமக்கள்-தாளவாடி

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
    15-07-2016 வெள்ளிக்கிழமை இன்று ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தினவிழா,மாணவர் நூலகம் துவக்கவிழா,மாணவ வாசக வட்டம் துவக்கவிழா ஆகிய முப்பெரும்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றன. திருமிகு. R.மாதேஷ்,பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் அனைவரையும் வரவேற்றார்.திருமிகு.N.நஞ்சுண்ட நாயக்கர் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமை ஏற்றார். பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.அதன்பிறகு தொடங்கிய  ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களின தலைமையுரையில்  பெருந்தலைவர் காமராஜர் கால் பதித்த பள்ளி தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என பெருமைப்பட்டதோடு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்து வைத்த வகுப்பறைக் கட்டடத்தை நினைவுகூர்ந்தார்.சிறப்புரை ஆற்றிய திருமதி.R. ராஜம்மா A.E.E.O. அவர்கள் மாணவர் நூலகத்தை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது  தமிழகம் முழுவதும் கிராமம்தோறும் அதிகளவு பள்ளிகளை திறந்து கல்விக்கண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என புகழாரம் சூட்டினார்.K.C.T.Matricபள்ளி தாளாளர் திருமிகு சுரேஷ் அவர்கள், READ NGO பொறுப்பாளர் திருமதி சுந்தரி அவர்கள் , மற்றும் ROTARY CLUB OF THALAVADI தலைவர் திருமிகு.வியானி அவர்கள், மற்றும்  PALM2NGO நிர்வாகி திருமிகு S.யேசுதாசன் அவர்கள், மற்றும் மனித உரிமைகள் தலைவர் A. பாபு அவர்கள் T.V.ஆனந்த நாராயணன் செய்தியாளர் தாளவாடி அவர்கள் திருமிகு. A.P.ராஜூ அவர்கள் ,திருமிகு வடிவேல் அவர்கள்,திருமதி லதா ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆசிரியை   உட்பட பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர்.திருமிகு.C. பரமேஸ்வரன் அவர்கள் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  மாணவர் நூலகத்தின் நோக்கம் பற்றிய உரையில் ,  அனைத்து மாணவர்களையும் வாசிக்க உரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.அப்போதுதான் எழுத்துப்பிழை,சொற்பிழை,கருத்துப்பிழை தவிர்த்து அறிவு வளரும்,சிந்தனை பெருகும்,கற்பனை வளரும்.பாடப்புத்தகங்களையும் விரைவாக வாசித்து நினைவில் வைக்கவும் உதவும். மாணவர்களால் எடுத்துச்செல்லப்படும் புத்தகங்கள் பெற்றோருக்கும் வாசிக்க உதவும்.ஆசிரியப்பெருமக்களும் வாசிக்கும் பழக்கத்தை தொடர்வர் என்றார்.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு என்பது குழந்தை முதல் குடியரசுத்தலைவர் யாராக இருப்பினும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்று சேவையாற்றுவது.சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில்  எப்போதும்,யாரும்,எங்கிருந்தும் இணையலாம்.சமூகப்பணியாற்றலாம்.ஆலோசனை வழங்கலாம்.புத்தகங்கள் வழங்கலாம். paramesdriver@gmail.com மின்னஞ்சலிலும்,+91 9585600733 என்ற நகர்பேசி எண்ணிலும்  தொடர்பு கொள்ளலாம்.என்றார்.நிறைவாக முதல் கட்டமாக முப்பது மாணவர்களை உறுப்பினர்களாக சேர்த்து வாசிப்பதற்காக சுழல்முறையில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.அப்போது பள்ளியின் இருபால் ஆசிரியப்பெருமக்கள் மாணவர் நூலகத்திற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பில் இணைந்தனர்.சிற்றுண்டி உட்பட விழா ஏற்பாட்டினை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் இருபால் ஆசிரியப்பெருமக்கள் செய்திருந்தனர்.













சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்,
C.பரமேஸ்வரன்,
சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்,
தாளவாடி - ஈரோடு மாவட்டம்-638461






1 கருத்து:

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...