11 ஜூன் 2014

புதிய குடும்ப அட்டை கேட்டு RTI-2005

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1) இன் கீழ் விண்னப்பம்
பதிவு தபால் ஒப்புகை அட்டையுடன் தேதி:

விடுநர்,

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
___________ மாவட்டம்,


ஐயா,
பொருள் : புதிய குடும்ப அட்டை கேட்ட எனது விண்ணப்ப தேதி: ________ அதற்கான மனு எண் :____

புதிய குடும்ப அட்டை கேட்டு நான் செய்த விண்ணப்பத்தின் மீது நாளது வரை எனக்கு வழங்கிடவில்லை. இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இன் கீழ் தகவல்கள் அளிக்க வேண்டுகிறேன்.
1) மேற்காணும் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மானப் பதிவேட்டின் ; பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ; பதிவு அஞ்சல் பதிவேட்டின் சிறப்புப்பதிவேட்டின் ; சம்பந்தப்பட்ட பக்கத்தின் ஒளிநகல்.
2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நடைமுறைகளைக் காட்டும் ஆணையின் ஒளிநகல்
3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் பதவி அலுவலக விலாசம் விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் அவர்களின் நாட்குறிப்பின் அந்த நாட்களின் ஒளிநகல்
4) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அளிக்க வேண்டும் , அளிப்பத்தை எந்த காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம்; என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
5) மேற்காணும் எனது விண்ணப்பத்தினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்துப் பக்கங்களின் ஒளிநகலையும் அலுவலகக் குறிப்புக்கட்டுடன் வருவாய் ஆய்வாளரின் தனிபதிவேட்டில் சிறப்பு பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியப்பட்டுள்ள பக்கத்தின் ஓளிநகல்
6) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, விலாசம், அதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்
7) நான் கோரிய புதிய குடும்ப அட்டை எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள காரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணைகளின் ஒளிநகல்
8) குடும்ப அட்டை விண்ணப்பங்களை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற எத்தனை தினங்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட சுற்றறிக்கையின் ஒளி நகல்
9) 1.5.2013 முதல் 9.6.2014 வரையிலான தங்கள் அலுவலக “புதிய குடும்ப அட்டை வழங்கல் பதிவேட்டின்” ஒளி நகல்
10) மாவட்ட , கோட்ட , வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பிர்க்க வருவாய் அலுவலர்களின் செல்பேசி மற்றும் முகவரிகளை வழங்கவும்

குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 4 இன் படி மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு துறை பொது தகவல் அலுவலர்கள் விவரங்கள் அவர்களின் முகவரிகள், எந்த தகவல்களுக்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படாத காரணத்தால் உரிய பொது தகவல் அலுவலர் முகவரி தெரியாத காரணத்தாலும் தங்களுக்கு இந்த மனுவை அனுப்புவதோடு சட்ட பிரிவு 6(3) இன் படி நடவடிக்கை வேண்டுகிறேன்.
இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இணைப்புகள்:
1) எனது புதிய குடும்ப அட்டை மனு
2) புதிய குடும்ப அட்டை கேட்டும் விண்ணப்பித்த மனுவின் ஒப்புகைச் சீட்டு
3) எனது நீக்கல் சான்று நகல்
தங்கள் உண்மையுள்ள,

++++++***************+++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...