மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம்.
இன்று தமிழ் எழுத்து பற்றி காண்போம்.
(1)எழுத்து;- சொல்லிற்கு முதற்காரணமான ஒலியே எழுத்து எழுத்தெனப்படும்.எழுத்திற்கு ஒலிவடிவம்,வரிவடிவம் என இருவகை வடிவங்கள் உண்டு. எழுத்துக்கள் பேசப்படும் போது ஒலி வடிவம் பெறுகிறது.எழுதும்போது வரிவடிவம் பெறுகிறது. பேசப்படும்போது எழுத்துக்கள் பெறும் ஒலி வடிவத்திற்குத் தக்கபடியே சுருக்கெழுத்து அமையும்.
(2) முதலெழுத்து;- எழுத்துக்கள் முதலெழுத்துக்கள்,சார்பெழுத்துக்கள் என இருவகைப்படும்.மற்ற எழுத்துக்கள் உண்டாவதற்குக் காரணமான எழுத்துக்கள் முதலெழுத்துக்களாகும். முதலெழுத்துக்கள் உயிரெழுத்துக்கள்,மெய்யெழுத்துக்கள் என இரு வகைப்படும்.
(3) மெய்யெழுத்துக்கள்;- க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன், மற்றும் ஜ்,ஷ்,ஸ்,ஹ்,க்ஷ் என்ற வடமொழி எழுத்துகள் ஐந்துமாகச்சேர்ந்து மெய்யெழுத்துக்கள் 23 ஆகும்.
(4) மெய்க்குறிகள்;- எல்லா மெய்யெழுத்துக் குறிகளுக்கும் -நேர்கோடு,(, ), கால் வட்ட வளைவு கோடுகளைக் கொண்டே மெய்க்குறிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ண், ய், ழ், ள், ற், ன் ,க்ஷ் இவைகளுக்கு மட்டும் (டிக் மார்க் என்னும்)கொக்கியிட்ட கோடுகள் போடப்படும்.
(5) ஜோடி மெய்க்குறிகள்;- இந்த ஜோடி மெய்க்குறிகள் பற்றி மற்ற மொழிக்காரர்களுக்கு பிரச்சினை இல்லை.தமிழில் மட்டும் வல்லின மெய்களான க்,ச்,ட்,த்,ப் மட்டும் ஜோடி மெய்க்குறிகள் வரும். சிறிது உன்னிப்பாகக் கவனிக்கவும். உதாரணமாக ;- (1)கடமை,வங்கம்,(2) சக்கரம்,மஞ்சள்,(3) டப்பா,கண்டம், (4) தத்தி ,சொந்தம், (5) பலகை,கம்பம்,
இந்த வார்த்தைகளில் முதலில் உள்ள வார்த்தைகளையும்,இரண்டாவதாக உள்ள (அடிக்கோடிட்ட) வார்த்தைகளையும் உச்சரித்துப்பாருங்கள்.
மின்தடை காரணமாக அடுத்த பதிவில் இன்னும் விரிவாக.................நன்றிங்க!
PARAMES DRIVER // THALAVADY// ERODE -Dt

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக