18 மார்ச் 2012

ரகசிய கேமரா- உசாருங்க! உசாரு!?!


 அன்பு நண்பர்களே,

             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இங்கு ரகசியக் கேமரா பற்றிய ஒரு எச்சரிக்கைத் தகவல் பற்றி இங்கு காண்போம்.




இது ஒரு எச்சரிக்கை! மற்றும் விழிப்புணர்வு பதிவு. குறிப்பாக பெண்கள் படித்து உசாராக இருக்க வேண்டும்.எனவே அவசியம் பெண்கள் படித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

           இந்த பதிவைப் படிக்கிற உங்களுக்கு ஒரு எளிமையான கேள்வி? , நீங்கள் ரோட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களை  ஒரு நாலு பேர் ஒரு மாதிரியாக, கண்இமை மூடாமல் பார்க்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.அதைக் கண்ணுற்ற உங்களால் சரியாக நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன, தடுமாற்றத்துடன் நடக்கும்நிலை ஏற்படுகிறது இல்லைங்களா?. அதிலும் நடப்பது ஒரு வாலிப வயதுடைய பையனாக இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நன்றாக நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பார்க்கிறார்கள் என்பது தெரிந்ததும் தடுமாறி   நடக்க ஆரம்பித்திடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இவை எல்லாம் மனிதனின் இயல்பு.  அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பமாகிக் கொண்டு இருக்கிறதுங்க.  எப்படின்னு கேட்கிறீர்களா? நாம் ரோட்டில் நடக்கும் போதும் சரி, மளிகைக்கடை,ஜவுளிக்கடை,நகைக்கடை,அழகு சாதனக்கடை,என கடைகளில் இருக்கும் போதும் சரி, ஆஸ்பத்திரிகளில் இருக்கும் போதும் சரி, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷாப்பிங் மால், டிராபிக் சிக்னல் என எங்கு பார்த்தாலும் இன்றைக்கு கண்காணிப்புக் கேமரா இல்லாத இடமே இல்லை என கூறும் அளவுக்கு நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் ரகசியக் கேமராக்கள் நம்மை படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றன.
என்னுடைய நண்பர் ஒருவர் சொன்ன ஒரு புள்ளி விவரம் , லண்டனில் ஒருவர் ஒரு நாள் காலையில் ஆபீஸுக்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவரை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபட்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டனுக்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ம ஊரிலேயே இருக்கிறதே! ஆயிரத்தெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினமும் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன. அது சரிங்க. எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்கெல்லாம் இதோ பதில், குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக.என்பவைகள்தாம். அதாவது இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பும் இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போய் வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்தக் குற்றமும் செய்யாத நம்மைக் கண்காணிக்க வேண்டும்? ஆக மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே  நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கேயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்களைத் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துக்காட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்கள் அவர்கள் தப்பிக்க திருடர்கள் ஒரு கூடுதலான வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்புக் காமெராக்களை முதலில் செயல் இழக்கச் செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் இருப்பதற்கான மறைக்கும் வேலையை செய்ய வேண்டி இருக்கும் .ஆனால்  தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேல் கவலையே இல்லை! அப்புறம் எங்கீங்க கண்காணிப்பு காமெராவைப் பற்றி எல்லாம் கவலைப்பட போகிறார்கள் ? வந்த வேலையை செய்து முடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.
       சரிங்க, இப்போது கண்காணிப்பு கேமரா பற்றி கேள்விப்பட்ட நமக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எத்தனை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
           அதாவது வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே நமக்குள் எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதைப் புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேலே சென்று! எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும்?????????!!!!!!!!
              இன்றைய தினம் இவை எல்லாம் நடக்குதுங்க! . இவைகள் எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , கூடுதலாக எவைகள் எல்லாம் இணையதளத்தில் வெளியாகின்றன . இதற்கான காரணங்கள்தான் என்ன?எவ்வாறு நம்மை அறியாமல்நமது படங்கள் எடுக்கப்படுவது எவ்வாறு? முடிந்த அளவு அவைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? 
               ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.    கண்காணிப்பு கேமராக்களுக்கும் , ரகசிய கேமராக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதுங்க. கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லோருக்கும் தெரிகிற மாதிரி அதிகாரப் பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்கு பெயர் Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera ).  ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கப்படக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசியக் கேமராக்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam  என்று பல பெயர்கள்.  சரிங்க. இந்தக் கேமராக்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பதைக்கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு ஆளாகிவிடுவீர்கள். .
         நான் ஓட்டுனராக  இருப்பதால், மற்றும் இணையதளம் மற்றும் முகநூல் பயன்பாடு அதனால் அறிமுகம் ஆன அல்லது அறிமுகம் இல்லாத நண்பர்கள் என சமூகத்தில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.அவர்களுக்கு ஏற்றார்போல சில கருத்துரைகள் கொடுத்துவிட்டால் போதும்.அவர்கள் வாயிலாகப் பல விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவ்வாறாக! ரகசியக் கேமரா பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு அதன்வழியாக சில கம்பெனிகள் விவரம் கிடைக்க, நான் அதிர்ந்துதான் போனேன் . சொன்னால் நம்ப மாட்டிங்க. இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மையிலேயே மிகவும் மோசமான அதிர்ச்சியை உண்டாக்கின.அதாவது ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்,பொம்மை,பூந்தொட்டி,திரைச்சீலை,வரவேற்பு மாடல்கள்,போர்டுகள்,  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன.இதனை வாங்கி அப்படியே பொறுத்தினால் போதுமானது.  யாராலும் கண்டு பிடிக்க முடியாது.அதே சமயம் அந்தக் கேமரா நாள் கணக்கில் பதிவு செய்யும்.ஆச்சரியமாக இருக்கிறதுங்களா! இது உண்மைதாங்க. இவை தவிர பேனா வடிவில்,பெல்ட் வடிவில்,சட்டைப்பொத்தான் வடிவில்,மூக்குக்கண்ணாடி வடிவில்,மோதிர வடிவில்,நெற்றிப்பொட்டு வடிவில்,சாவிக்கொத்து வடிவில்,தனியாக சாவி வடிவில்,கால்குலேட்டர் வடிவில்,ஸ்டிக்கர் வடிவில் என்றெல்லாம் சிறிய ரகசியக் கேமராக்கள் வந்து விட்டன,
(அதாவது நம்ம தமிழ் சினிமாவான  மங்காத்தாபடத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார்.

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோகப் படுத்தப்படுகிறது? என்று கேட்டீர்கள் என்றால் அவைகள் எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணிக் கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் எல்லா ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
             இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி! பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை .

    
     பெரும்பாலான பிரபலங்களின் குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆவது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தங்கும் போது கண்டுபிடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராக்களைப் பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? கவலைப்பட்டது உண்டா?இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 

இனி ஹோட்டலில் தங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
1) தம்பதிகள் மிக எச்சரிக்கையாக இருங்கள். . 
2). கிராம புற மக்களே உஷார். எதார்த்தமாக இருந்தால்! நீங்கள் கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வழி இல்லை .
3) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையில் இருக்கும் போது. உடை மாற்றும் போது என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
4) அதே போல் பெண்கள் குளிக்கும் போது உடம்பை மறைக்க துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இவையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி , வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேறு வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை தடுப்பது எப்படி? 
உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள WEB CAM வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ? 

.                  இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின்புறமாகக் கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம்தான் யாருக்கும் அவ்வளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளுக்குப் பின்னால் ரகசிய கேமரா வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பெண்கள் இனிமேல் கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை அரைகுறை தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும்.அதாவது பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீசார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்துக் கொண்டும், பதிவு செய்து கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்து ரசித்துக் கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை.! 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting ன்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை ‘’தில்லாலங்கடி’’ கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :

1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க. இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுணுக்கமாகக் கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கைப் பையில் எப்போதும் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைத்துக் கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் ,மற்றும்  உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி ஆக இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  
2. உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்துப் பார்த்தால் அதில் ஒளி ஊடுருவுகிறதா! என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 
3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப எளிமையான பரிசோதனைங்க.  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியைக் குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்புக் கண்ணாடிகள் பொருத்தி இருக்கும் இல்லையா அதில் நாம் கருப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட காருக்குள் என்ன இருக்கிறதென்று சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா? அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதைப் பற்றி . ஆனால் இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த புகைப்படமோ , வீடியோவாகவோ அப்படியே வெளியிடப்படுகிறது. அதற்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய சொந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருதுங்க  இணையதளத்தில்!?!?!?!?!??!. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருகிறதுங்க? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  படத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது
இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் சுலபமுங்க. , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைப்படமோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் ???????? படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்திற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும். அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்துக் கொண்டு மற்ற புகைப்படங்களை அல்லது பிறகு எடுக்கும் குடும்ப மற்றும் நட்பு சம்பந்த படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோவுக்கு கொடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்கு Recovery Software என்று பெயருங்க. இந்த சாப்ட்வேர் Delete ஆன file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டரில்  இருக்கின்ற மெமரியில் delete ஆன  file களைக் கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரிக் கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்சினைதான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்! நெருங்கின நண்பராகக் கூட இருக்கலாம்.அவர்களது குறுக்குப் புத்தியால் இந்த Recovery Software பயன்படுத்தி மெமரிக்கார்டை ஆராய்ந்து அதனை அவர்களது நண்பர்கள் அல்லது சுற்றுச்சூழலில் கிடைத்த வசதிகளைப்பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்!. .இப்படி தங்களுடைய கேமராவில் தாங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்ப்பது?
டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்,
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய ??????? படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் சொந்த போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும். அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு!?! இருக்கிறது.என்பதே எனது கருத்து! (இன்னும் தெளிவில்லை)




                                                      
உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


         
சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது லேப்டாப்பிலோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லாமல் யாரேனும் ஆன் செய்து உங்களைப் பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் கூகுள் டாக் என்னும்
Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்டில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு பதிவிட விரும்பவில்லைங்க. ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்கு என்ன சாப்ட்வேர்  தரவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . பிறகு தவறான விசயங்களை நானே இந்த சமூகத்திற்கு விசங்களாக கொடுத்தது போல் ஆகிவிடும். எனவே,விசயங்களை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
    இதில் இருந்து தப்பிக்க : 

1.
நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்து இருப்பவரானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 

2.
நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமாங்க. லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கரையாவது அல்லது ஸ்டிக்கர் பொட்டையாவது  ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .




      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது.  அதனால் தயவு செய்து இதில் உள்ள நல்ல வியங்களை மட்டும் எடுத்து கொள்ளவும்.இந்த பதிவில் உள்ள நாகரீகமற்றவைகளாக தாங்கள் கருதும் செய்திகளை தவிர்த்துவிடவும் . தேவை இல்லாத வியங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்றுவாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வாழ்க்கைக்கு தரும் பாடம்.

  ஒவ்வொரு அசைவும் முக்கியமானது. ஆட்டத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கவனமாக செயல்படுத்த வ...