30 மார்ச் 2020

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 02

  திருக்குறள் பெருமை அறிவோம் வாங்க! பகுதி-02

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.முதல் பகுதியில் குறள் மலைச்சங்கம் பற்றி அறிந்தோம்.இந்தப் பகுதியில் இந்தியாவின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் விண்ணை நோக்கும் வானுயரத்தில் அமைந்துள்ள 
அய்யன் திருவள்ளுவர் சிலை பற்றி காண்போம்.

It is necessary to maintain the Thiruvalluvar statue which comes ...
                  இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்,சீர்திருத்தவாதியான மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திரு. ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே(एकनाथ रामकृष्ण रानडे )அவர்கள் விவேகானந்தா சிலைக்கு அருகிலுள்ள  பாறையில் திருவள்ளுவருக்கு ( तिरुवल्लुवर पुतळा)
சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து, அதற்கான முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அன்றைய முதல்வர்கலைஞர் மு. கருணாநிதி அவர்களிடம் கொடுத்தார் .

     தொடர்ந்து 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.1979ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ்பட்வாரி,பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையில்அன்றைய  தமிழக முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
1990-91 ஆம் ஆண்டு நிதிநிலையில் வள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 1990 செப்டெம்பர் 6 ஆம் தேதி திருவள்ளுவர்சிலை அமைக்கும்பணியை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தம் கரங்களால்உளி எடுத்து செதுக்கி தொடங்கிவைத்தார்.
  இவ்வாறாக பலசோதனைகளை எதிர்கொண்டு 2000 ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 சிலை அமைப்பு
     அய்யன் திருவள்ளுவர் சிலை
 குமரிக் கடல் நடுவே 30அடி உயரமுள்ள பாறைமீது அமைக்கப்பட்டுள்ளது.
அறத்துப்பால் 38 அதிகாரங்களை குறிக்கும்வகையில்1500 டன் எடையுள்ள கருங்கற்களால் 38 அடி உயரத்திற்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் மேல் பொருட்பால் 70அதிகாரம் மற்றும் இன்பத்துப்பால் 25அதிகாரம் குறிக்கும்வகையில்2500டன் எடையுள்ள கருங்கற்களால் சிலை 95அடி உயரம் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 மொத்த சிலையின் உயரம் - 133 அடி,
 திருவள்ளுவர் சிலை பலமாடிக் கட்டடம் போன்று கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட அமைப்பாகும்.உட்புறம் 130அடி உயரம் வரை வெற்றிடமாக உள்ளது.மண்டபத்தின் உட்புறம் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறட்பாவை தேர்ந்தெடுத்து 133 குறட்பாக்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் உரிய தெளிவுரையுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________


 திருக்குறள் மாமலை மாத இதழுக்கு சந்தா செலுத்திவிட்டீர்களா?

மேலும் விபரங்களுக்கு.....

                                              இன்னும் தொடரும்...

என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
இலக்கியக்கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...