30 மார்ச் 2020

Thirukkural Perumai Arivom Part -04

                                   திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -04
                                 -------------------------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

             சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் என்னும் தெய்வப் புலவர் மனித வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறள் நூலை ,உலக மாந்தர்கள் தமது அகவாழ்விலும்,புறவாழ்விலும் வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும், சுமூகமாகக் கூடி வாழவும்  தேவையான அடிப்படைப் பண்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வாழ்வியல் நூலாக எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும்விதமாக அனைத்துலக சமயத்தவர்களும் ஏற்றுக்கொள்ளும்வகையில் உலகப் பொதுமறைநூலாக எழுதியுள்ளார்.

                    (1) திருவள்ளுவர் சந்நிதி ஒன்று...

                        திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் சென்னை மைலாப்பூரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அதாவது சுமார் 1500ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

       இந்த கோவிலுக்கு 1974ஆம் ஆண்டு திருப்பணிகள் நடத்தப்பட்டு 23-1-2001ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.இந்தக் கோவிலில் திருவள்ளுவர் மற்றும் வாசுகி அம்மையார் இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவிலின் மைய மண்டபம் அருகில் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.1935ஆம் ஆண்டில் இந்த மரத்தைச் சுற்றிலும் மேடை அமைத்து அடிமரத்தில் செப்புத் தகடு பூணப்பட்டுள்ளது.இங்கு...

 ஆதி பாலகனை மடியில் ஏந்தியவாறும்,பகவன் நின்றநிலையிலும் சிலைகள் உள்ளன.
 இந்த ஆலயத்தில் வள்ளுவர் தினம் சிறப்பானமுறையில் நடத்தப்படுகிறது.
மாசி உத்திரத்தன்று திருவள்ளுவருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அறுபத்திமூவர் திருவிழா நடத்தப்படுகிறது.
ஆவணி மூல நட்சத்திரத்தில் திருவள்ளுவர் வாசுகி அம்மையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு விழா ஒன்று எடுத்து வருகிறது.அன்றையதினம் காலை10மணி முதல் மதியம் 12மணிவரை மாணவ,மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 இந்தக் கோவிலானது  ஶ்ரீமுண்டகக்கண்ணி அம்மன் கோவிலின் சார்புக் கோவிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரித்துவருகிறது.
 கோவில்வழிபாட்டுக்கு திறந்திருக்கும் நேரம் தினமும் காலை 6.30மணி முதல் பகல் 11.30மணிவரை மாலை 4.30மணி முதல் இரவு 8 மணிவரை
             - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

                                 (2)திருவள்ளுவர் சந்நிதி இரண்டு
                
     விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929ஆம் ஆண்டு திருக்கோவில் அமைத்து மூலவராக திருவள்ளுவர்வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.
மாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று முளைப்பாரி வீதி உலா போன்ற ஊர்வலங்களுடன் திருவள்ளுவர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

                   (3)தனி மதம் உருவாக்கிய திருக்குறள்..
'வள்ளுவம்' என்ற பெயரில், திருக்குறளுக்கென்றே தனியாக மதம் உருவாக்கப்பட்டு வழிபடுவதாகவும் தகவல் அறிகிறோம். கேரளாவில் 42 கோவில்கள் திருவள்ளுவருக்கு அமைத்துள்ளார்களாம். என சூரியன் எப் எம் செய்தியளித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் மாமலை - மாத இதழுக்கு சந்தா செலுத்தி உறுப்பினராகுங்க..
மேலும் விபரங்களுக்கு.....

                                இன்னும் தொடரும்....
அன்புடன்,
 செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...