திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி-03
- - - - - - - - - - - - - - - - - - - -
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
இந்தப் பகுதியில்,மதச் சடங்குகள் இல்லாத திருவிழாவாக தமிழர்களுக்கென்று ஒருவிழா வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் 'திருக்குறள் திருவிழா' நடத்திவருகின்ற திருவள்ளுவர் அறக்கட்டளை பற்றி காண்போம்.
குமரியை அடுத்துள்ள மாத்தூர் சேர்ந்த தமிழ்த்திரு.மா.செ.தமிழ்மணி அவர்களது தலைமையில் திருவள்ளுவர் அறக்கட்டளை தொடங்கி 1-8-2005 ல் பதிவு செய்யப்பட்டு 2007ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வைகாசித்திங்கள் முதல்நாளன்று திருக்குறள் திருவிழா நடத்திவருகின்றனர்.
திருக்குறள் திருவிழா தொடங்கும் முன் பத்துநாட்கள் ஒண்சுடர் ஊர்தி பயணமாக அங்கு பத்து கிராமங்களுக்கு திருக்குறளின் பெருமைகளைப் பரப்பி ஒண்சுடர் ஏந்தி வந்து குமரிமுனையிலுள்ள சங்கிலித்துறை, ஒண்சுடர்த்தூண் வளாகத்தில் தமிழகமெங்கும் வருகைபுரிந்துள்ள தமிழ்ச் சான்றோர்கள் திருக்குறள் முற்றோதல் நடத்துகின்றனர்.
குமரிமுனை இலீபுரம் அருகில் திருக்குறளூர் என்ற பெயரில் மனை இடங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டுள்ளது.அங்கு 42செண்ட் இடம் வாங்கப்பட்டு அந்த இடத்தில் தமிழரின் மரபு அறிவியலான வானியல்,அறிவர் மருத்துவம்,தமிழ்க்கலைகள் ஆகியவற்றில் பயிற்சியளிக்க நடுவம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். ஶ்ரீகணபதி ஸ்தபதி பெருந்தச்சரிடம் 2008ஆம் ஆண்டு வரைவு பெறப்பட்டு அங்கு நூலகம்,தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாதந்தோறும் முதல்நாளன்று திருக்குறள் ஓதப்படுகிறது.திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளர் தமிழ்த்திரு.மா.செ.தமிழ்மணி அய்யா அவர்கள் 10-7-2015ல் மறைந்த பிறகு தற்போது தமிழ்முகிலன் 9443176764 ஆட்சிப் பொறுப்பாளராகவும்,
திரு.வீ.இறையழகன் 93400047779 பணப் பொறுப்பாளராகவும் இருந்து திருக்குறள் திருவிழா நடத்தி வருகின்றனர்.
________________________________________________________
தமிழார்வலர்களின் கனிவான கவனத்திற்கு...
திருக்குறள் மாமலை மாத இதழுக்கு சந்தா செலுத்திவிட்டீர்களா?
மேலும் விபரங்கள் அறிய......
இன்னும் தொடரும்........
என அன்புடன்
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக