30 மார்ச் 2020

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி -01

                       திருக்குறள் பெருமை அறிவோம் வாங்க- பகுதி -01

 மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
       கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
         
     மனிதவாழ்வுக்குத் தேவையான அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு ஆகிய நான்கின் முக்கியத்துவத்தினை இலக்கியங்கள் நீதிநூல்களாக  நமக்கு வழிகாட்டுகின்றன. நாலடியார்,நல்வழி உட்பட தமிழ்நீதிநூல்களில் தலையாய நூலான திருக்குறளானது
            உலக நாடுகளால் போற்றப்பட்டுவருகிறது.திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல்நூலாகும்.மாந்தர்தம் அகவாழ்விலும்,புறவாழ்விலும் சுமூகமாக வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும்தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உலகின் அனைத்து சமயங்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியாக கூறப்பட்டிருப்பதால் உலகப்பொதுமறைநூலாக கருதப்பட்டு போற்றப்படுகிறது.

                         பாகம்-01 குறள் மலைச் சங்கம்.
 சென்னையைச் சேர்ந்த திரு.பா.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் கடந்த  25-01-2004 ஆம் ஆண்டு தமிழே திருக்குறள் - குறளே தமிழ்  என்பதையே மூச்சாகக் கொண்டு, குறள் மலைச்சங்கம் தொடங்கி,
      
இன்றுவரை உலகவாழ் அறிவியலறிஞர்கள்,தமிழறிஞர்கள்,கல்வியாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக் கழகங்கள்,தன்னார்வ அமைப்புகள்  ஆகியோர்களுடன் தமிழ்நாடு அரசு சார்ந்த மந்திரிகள்,மாவட்ட ஆட்சியர்கள்,வருவாய் வட்ட ஆட்சியர்கள் ,என அனைவரையும் ஒருங்கிணைத்து 1330குறட்பாக்களையும் உரிய தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக பொறித்து குறளுக்கு  எக்காலத்திலும் அழியாத நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டு தமிழுக்குத் தொண்டு செய்துவருவது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த செயலாகும்.
கல்வெட்டுக்களாக செதுக்குவதற்கான இடமாக தேர்ந்தெடுப்பதற்காக கல்வெட்டு ஆய்வாளர்கள்,சிலை வடிவமைப்பாளர்கள் ஆகிய கலைநுணுக்கமுள்ளவர்களுடன்இன்றுவரை 31 மாநாடுகள்,கருத்தரங்கங்கள்,ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி
(1)திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்மலை,(2)பழநிமலை,(3)பவளமலை,(4)பச்சைமலை,(5)சிவன்மலை,(6)ஓதிமலை, என பல மலைகளையும் ஆய்வுசெய்து அவற்றின் செங்குத்தான உயரம்,உறுதியற்ற பாறைகள்,மண்திட்டுக்கள்,மரம்,செடி,கொடிகள் நிறைந்த மண்வளங்கள் என பல காரணிகள் 1330குறட்பாக்களையும் ஒரே இடத்தில் கல்வெட்டுக்களாகச் செதுக்க குறைகளாகிவிட,மனம் தளராமல் ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்தில் அமைந்துள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி திருக்கோயில் எழுந்தருளியுள்ள 20.5 ஏக்கர் பரப்புள்ள மலையையும்  பார்வையிட்டு  அதன் உறுதியான தன்மை,  100 அடி உயரம்,ஒரே பாறையால் ஆனவட்ட வடிவமான அமைப்பு, போன்ற சாதகமான சூழ்நிலையை ஆய்வுசெய்து இதுவே கல்வெட்டுக்களாக செதுக்குவதற்கான தகுந்த மலை எனத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

                குறள்மலையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலையப்பாளையம் மலையில் குறள் கல்வெட்டு பதிக்க அரசாங்கத்திற்கு முறையாக பலமுறை விண்ணப்பம் அளித்து 21-09-2014 அன்று கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் திருக்குறள் கல்வெட்டுக்கள் முதல் முதல் மாநாடு நடத்தி அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செதுக்கிய முதல் குறட்பாவ கல்வெட்டினை  3-7-2016 ஆம் தேதியன்று அறிவியலறிஞர் இஸ்ரோ விஞ்ஞானி உயர்மதிப்பிற்குரிய மயில்சாமி அண்ணாசாமி அவர்களால்திறந்து தொடங்கிவைக்கப்பட்டது.
            குறள்மலைச் சங்கத்தின் வலைத்தளங்கள்
            (1)    www.thirukkuralmalai.org
            (2)        http:thirukkuralkalvettukkal.blogspot.com
மாத இதழ் (சென்னை)
           (3)         திருக்குறள்மாமலை
Facebookமுகவரி
        (4)     குறள் மலைச்சங்கம்/facebook.com


                திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி  தொடரும்......
 என அன்புடன்,
பரமேஸ்வரன்,
 இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண்; 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...