30 மார்ச் 2020

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 05



                                  திருக்குறள் பெருமை அறிவோம்- பகுதி 05
                                             ---------------------------------------
                                                       வள்ளுவர் கோட்டம்,   

 மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
                             தொடரின்  ஐந்தாவது பகுதியில்  சென்னை நுங்கம்பாக்கம்,திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள  திருவள்ளுவர் நினைவுச்சின்னமான வள்ளுவர் கோட்டம் பற்றி காண்போம்.



                 1973 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களால் எப்ரல் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு 1976ஆம் ஆண்டு அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


                                         ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட வள்ளுவர் கோட்டம் நம்மை 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறள் வாசகத்துடன் அமைந்துள்ள பிரமாண்டமான நுழைவுவாயில்  வரவேற்கிறது.

                 உள்ளே 4000 பேர் தங்கும் வகையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.அரங்கம் செல்லும் வழி நெடுக அமைந்து தூண்கள் ஒவ்வொன்றிலும் புத்தகம் விரிக்கப்பட்டது போன்ற வடிவத்தில் தூண் ஒன்றுக்கு இரண்டு அதிகாரங்கள் என்றவகையில்1330குறட்பாக்களும் 665 தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
               சிறப்பு என்னவென்றால் அறத்துப்பால் 38 அதிகாரங்களும்19 தூண்களில் கருப்புநிற பளிங்குக்கற்களாலும்,
                  பொருட்பால்70அதிகாரங்களும் 35தூண்களில் வெளிர்நிறப் பளிங்குக்கற்களாலும்,
                  இன்பத்துப் பால் 25அதிகாரங்களும்13தூண்களில் சிவப்புநிறப் பளிங்குக் கற்களாலும் குறட்பாக்கள் பொறிக்கப்பட்டு ஆளுயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ஆகும்.



அறத்துப்பால் அதிகாரங்களில் இரண்டு
                                    விரிக்கப்பட்ட புத்தக வடிவம் ஒரே தூணில்!

இன்பத்துப்பால் அதிகாரங்களில் இரண்டு
                   விரிக்கப்பட்ட புத்தகவடிவம் ஒரே தூணில்!

  அரங்கத்தின் மேற்தளம் குறள் மணிமண்டபம்அல்லது வேயாமாடம்  என்று அழைக்கப்படுகிறது.அங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும்  ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

          
              இங்கு    திருவாரூர்த் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தேர்    நம்மை கவரும்வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆகும்.
         இந்த சிற்பத் தேரை 7அடி உயரமுள்ள இரண்டு கற்சிலைகளான யானைகள் இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
               தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 11.5அடி குறுக்களவு கொண்டவை.தடிமன் 2.5அடி அளவு கொண்டவையாகும்.
            இந்தத் தேரில் அமைக்கப்பட்டுள்ள பீடம் 25அடி சதுரளவிலான பளிங்குக்கல்லால் ஆனது.
                 இந்தத் தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நிலமட்டத்திலிருந்து 30அடி உயரத்தில் எண்கோண வடிவத்தில்அமைக்கப்பட்டுள்ளது.
                  தேரின் சுற்றுப்பகுதியில் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது.
 தினமணிக் கதிர் இதழில், ஜப்பானில் வள்ளுவர் கோட்டம் என்ற தலைப்பில் வள்ளுவர்கோட்டம் பற்றி தொடராக வெளியிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறது.

அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்தபசுமையான  புல்வெளியும் அமைந்த வள்ளுவர் கோட்டம் நாம் அனைவரும் நின்று நிதானித்து குறளோடும் குறள் தரும் சிற்பங்களோடும் பார்த்து ரசிக்க வேண்டிய , விடுமுறையே இல்லாத சுற்றுலாத்தளமாகும்.
 வள்ளுவர்கோட்டத்தை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை நிர்வகித்து வருகின்றது.
----------------------------------------------------------------------------------------
 திருக்குறள் மாமலை இதழ் வாசித்துவிட்டீர்களா?
 மேலும் விபரங்களுக்கு.......

                                                இன்னும் தொடரும்...
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...