30 மார்ச் 2020

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 05



                                  திருக்குறள் பெருமை அறிவோம்- பகுதி 05
                                             ---------------------------------------
                                                       வள்ளுவர் கோட்டம்,   

 மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம். கொங்குத் தென்றல் வலைப் பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
                             தொடரின்  ஐந்தாவது பகுதியில்  சென்னை நுங்கம்பாக்கம்,திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள  திருவள்ளுவர் நினைவுச்சின்னமான வள்ளுவர் கோட்டம் பற்றி காண்போம்.



                 1973 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களால் எப்ரல் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு 1976ஆம் ஆண்டு அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


                                         ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட வள்ளுவர் கோட்டம் நம்மை 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறள் வாசகத்துடன் அமைந்துள்ள பிரமாண்டமான நுழைவுவாயில்  வரவேற்கிறது.

                 உள்ளே 4000 பேர் தங்கும் வகையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.அரங்கம் செல்லும் வழி நெடுக அமைந்து தூண்கள் ஒவ்வொன்றிலும் புத்தகம் விரிக்கப்பட்டது போன்ற வடிவத்தில் தூண் ஒன்றுக்கு இரண்டு அதிகாரங்கள் என்றவகையில்1330குறட்பாக்களும் 665 தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
               சிறப்பு என்னவென்றால் அறத்துப்பால் 38 அதிகாரங்களும்19 தூண்களில் கருப்புநிற பளிங்குக்கற்களாலும்,
                  பொருட்பால்70அதிகாரங்களும் 35தூண்களில் வெளிர்நிறப் பளிங்குக்கற்களாலும்,
                  இன்பத்துப் பால் 25அதிகாரங்களும்13தூண்களில் சிவப்புநிறப் பளிங்குக் கற்களாலும் குறட்பாக்கள் பொறிக்கப்பட்டு ஆளுயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ஆகும்.



அறத்துப்பால் அதிகாரங்களில் இரண்டு
                                    விரிக்கப்பட்ட புத்தக வடிவம் ஒரே தூணில்!

இன்பத்துப்பால் அதிகாரங்களில் இரண்டு
                   விரிக்கப்பட்ட புத்தகவடிவம் ஒரே தூணில்!

  அரங்கத்தின் மேற்தளம் குறள் மணிமண்டபம்அல்லது வேயாமாடம்  என்று அழைக்கப்படுகிறது.அங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும்  ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

          
              இங்கு    திருவாரூர்த் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தேர்    நம்மை கவரும்வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆகும்.
         இந்த சிற்பத் தேரை 7அடி உயரமுள்ள இரண்டு கற்சிலைகளான யானைகள் இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
               தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 11.5அடி குறுக்களவு கொண்டவை.தடிமன் 2.5அடி அளவு கொண்டவையாகும்.
            இந்தத் தேரில் அமைக்கப்பட்டுள்ள பீடம் 25அடி சதுரளவிலான பளிங்குக்கல்லால் ஆனது.
                 இந்தத் தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நிலமட்டத்திலிருந்து 30அடி உயரத்தில் எண்கோண வடிவத்தில்அமைக்கப்பட்டுள்ளது.
                  தேரின் சுற்றுப்பகுதியில் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது.
 தினமணிக் கதிர் இதழில், ஜப்பானில் வள்ளுவர் கோட்டம் என்ற தலைப்பில் வள்ளுவர்கோட்டம் பற்றி தொடராக வெளியிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறது.

அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்தபசுமையான  புல்வெளியும் அமைந்த வள்ளுவர் கோட்டம் நாம் அனைவரும் நின்று நிதானித்து குறளோடும் குறள் தரும் சிற்பங்களோடும் பார்த்து ரசிக்க வேண்டிய , விடுமுறையே இல்லாத சுற்றுலாத்தளமாகும்.
 வள்ளுவர்கோட்டத்தை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை நிர்வகித்து வருகின்றது.
----------------------------------------------------------------------------------------
 திருக்குறள் மாமலை இதழ் வாசித்துவிட்டீர்களா?
 மேலும் விபரங்களுக்கு.......

                                                இன்னும் தொடரும்...
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

Thirukkural Perumai Arivom Part -04

                                   திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -04
                                 -------------------------------------------------------------
மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

             சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் என்னும் தெய்வப் புலவர் மனித வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறள் நூலை ,உலக மாந்தர்கள் தமது அகவாழ்விலும்,புறவாழ்விலும் வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும், சுமூகமாகக் கூடி வாழவும்  தேவையான அடிப்படைப் பண்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வாழ்வியல் நூலாக எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும்விதமாக அனைத்துலக சமயத்தவர்களும் ஏற்றுக்கொள்ளும்வகையில் உலகப் பொதுமறைநூலாக எழுதியுள்ளார்.

                    (1) திருவள்ளுவர் சந்நிதி ஒன்று...

                        திருவள்ளுவர் பிறந்ததாகக் கருதப்படும் சென்னை மைலாப்பூரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அதாவது சுமார் 1500ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

       இந்த கோவிலுக்கு 1974ஆம் ஆண்டு திருப்பணிகள் நடத்தப்பட்டு 23-1-2001ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.இந்தக் கோவிலில் திருவள்ளுவர் மற்றும் வாசுகி அம்மையார் இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவிலின் மைய மண்டபம் அருகில் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.1935ஆம் ஆண்டில் இந்த மரத்தைச் சுற்றிலும் மேடை அமைத்து அடிமரத்தில் செப்புத் தகடு பூணப்பட்டுள்ளது.இங்கு...

 ஆதி பாலகனை மடியில் ஏந்தியவாறும்,பகவன் நின்றநிலையிலும் சிலைகள் உள்ளன.
 இந்த ஆலயத்தில் வள்ளுவர் தினம் சிறப்பானமுறையில் நடத்தப்படுகிறது.
மாசி உத்திரத்தன்று திருவள்ளுவருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அறுபத்திமூவர் திருவிழா நடத்தப்படுகிறது.
ஆவணி மூல நட்சத்திரத்தில் திருவள்ளுவர் வாசுகி அம்மையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு விழா ஒன்று எடுத்து வருகிறது.அன்றையதினம் காலை10மணி முதல் மதியம் 12மணிவரை மாணவ,மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 இந்தக் கோவிலானது  ஶ்ரீமுண்டகக்கண்ணி அம்மன் கோவிலின் சார்புக் கோவிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரித்துவருகிறது.
 கோவில்வழிபாட்டுக்கு திறந்திருக்கும் நேரம் தினமும் காலை 6.30மணி முதல் பகல் 11.30மணிவரை மாலை 4.30மணி முதல் இரவு 8 மணிவரை
             - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

                                 (2)திருவள்ளுவர் சந்நிதி இரண்டு
                
     விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929ஆம் ஆண்டு திருக்கோவில் அமைத்து மூலவராக திருவள்ளுவர்வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.
மாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று முளைப்பாரி வீதி உலா போன்ற ஊர்வலங்களுடன் திருவள்ளுவர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

                   (3)தனி மதம் உருவாக்கிய திருக்குறள்..
'வள்ளுவம்' என்ற பெயரில், திருக்குறளுக்கென்றே தனியாக மதம் உருவாக்கப்பட்டு வழிபடுவதாகவும் தகவல் அறிகிறோம். கேரளாவில் 42 கோவில்கள் திருவள்ளுவருக்கு அமைத்துள்ளார்களாம். என சூரியன் எப் எம் செய்தியளித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் மாமலை - மாத இதழுக்கு சந்தா செலுத்தி உறுப்பினராகுங்க..
மேலும் விபரங்களுக்கு.....

                                இன்னும் தொடரும்....
அன்புடன்,
 செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

Thirukkural Perumai Arivom Part 03

                   திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி-03
                                             - - - - - - - - - - - - - - - - - - - -
மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
                 இந்தப் பகுதியில்,மதச் சடங்குகள் இல்லாத திருவிழாவாக தமிழர்களுக்கென்று ஒருவிழா வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் 'திருக்குறள் திருவிழா' நடத்திவருகின்ற திருவள்ளுவர் அறக்கட்டளை பற்றி காண்போம்.

                 குமரியை அடுத்துள்ள மாத்தூர் சேர்ந்த தமிழ்த்திரு.மா.செ.தமிழ்மணி அவர்களது தலைமையில் திருவள்ளுவர் அறக்கட்டளை தொடங்கி 1-8-2005 ல் பதிவு செய்யப்பட்டு  2007ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வைகாசித்திங்கள் முதல்நாளன்று  திருக்குறள் திருவிழா நடத்திவருகின்றனர்.
       திருக்குறள் திருவிழா தொடங்கும் முன் பத்துநாட்கள் ஒண்சுடர் ஊர்தி பயணமாக அங்கு பத்து கிராமங்களுக்கு திருக்குறளின் பெருமைகளைப் பரப்பி ஒண்சுடர் ஏந்தி வந்து குமரிமுனையிலுள்ள சங்கிலித்துறை, ஒண்சுடர்த்தூண் வளாகத்தில் தமிழகமெங்கும் வருகைபுரிந்துள்ள தமிழ்ச் சான்றோர்கள் திருக்குறள் முற்றோதல் நடத்துகின்றனர்.
குமரிமுனை இலீபுரம் அருகில் திருக்குறளூர் என்ற பெயரில் மனை இடங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டுள்ளது.அங்கு 42செண்ட் இடம் வாங்கப்பட்டு அந்த இடத்தில் தமிழரின் மரபு அறிவியலான வானியல்,அறிவர் மருத்துவம்,தமிழ்க்கலைகள் ஆகியவற்றில் பயிற்சியளிக்க நடுவம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். ஶ்ரீகணபதி ஸ்தபதி பெருந்தச்சரிடம் 2008ஆம் ஆண்டு வரைவு பெறப்பட்டு அங்கு நூலகம்,தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாதந்தோறும் முதல்நாளன்று திருக்குறள் ஓதப்படுகிறது.திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளர் தமிழ்த்திரு.மா.செ.தமிழ்மணி அய்யா அவர்கள் 10-7-2015ல் மறைந்த பிறகு தற்போது தமிழ்முகிலன் 9443176764 ஆட்சிப் பொறுப்பாளராகவும்,
திரு.வீ.இறையழகன் 93400047779 பணப் பொறுப்பாளராகவும் இருந்து  திருக்குறள் திருவிழா நடத்தி வருகின்றனர்.
 ________________________________________________________
 தமிழார்வலர்களின் கனிவான கவனத்திற்கு...
திருக்குறள் மாமலை மாத இதழுக்கு சந்தா செலுத்திவிட்டீர்களா?
  மேலும் விபரங்கள் அறிய......
                                                 இன்னும் தொடரும்........
 என அன்புடன்
 செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி 02

  திருக்குறள் பெருமை அறிவோம் வாங்க! பகுதி-02

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.முதல் பகுதியில் குறள் மலைச்சங்கம் பற்றி அறிந்தோம்.இந்தப் பகுதியில் இந்தியாவின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் விண்ணை நோக்கும் வானுயரத்தில் அமைந்துள்ள 
அய்யன் திருவள்ளுவர் சிலை பற்றி காண்போம்.

It is necessary to maintain the Thiruvalluvar statue which comes ...
                  இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்,சீர்திருத்தவாதியான மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திரு. ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே(एकनाथ रामकृष्ण रानडे )அவர்கள் விவேகானந்தா சிலைக்கு அருகிலுள்ள  பாறையில் திருவள்ளுவருக்கு ( तिरुवल्लुवर पुतळा)
சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து, அதற்கான முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அன்றைய முதல்வர்கலைஞர் மு. கருணாநிதி அவர்களிடம் கொடுத்தார் .

     தொடர்ந்து 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.1979ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ்பட்வாரி,பிரதமர் மொரார்ஜிதேசாய் தலைமையில்அன்றைய  தமிழக முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
1990-91 ஆம் ஆண்டு நிதிநிலையில் வள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 1990 செப்டெம்பர் 6 ஆம் தேதி திருவள்ளுவர்சிலை அமைக்கும்பணியை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தம் கரங்களால்உளி எடுத்து செதுக்கி தொடங்கிவைத்தார்.
  இவ்வாறாக பலசோதனைகளை எதிர்கொண்டு 2000 ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 சிலை அமைப்பு
     அய்யன் திருவள்ளுவர் சிலை
 குமரிக் கடல் நடுவே 30அடி உயரமுள்ள பாறைமீது அமைக்கப்பட்டுள்ளது.
அறத்துப்பால் 38 அதிகாரங்களை குறிக்கும்வகையில்1500 டன் எடையுள்ள கருங்கற்களால் 38 அடி உயரத்திற்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் மேல் பொருட்பால் 70அதிகாரம் மற்றும் இன்பத்துப்பால் 25அதிகாரம் குறிக்கும்வகையில்2500டன் எடையுள்ள கருங்கற்களால் சிலை 95அடி உயரம் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 மொத்த சிலையின் உயரம் - 133 அடி,
 திருவள்ளுவர் சிலை பலமாடிக் கட்டடம் போன்று கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட அமைப்பாகும்.உட்புறம் 130அடி உயரம் வரை வெற்றிடமாக உள்ளது.மண்டபத்தின் உட்புறம் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறட்பாவை தேர்ந்தெடுத்து 133 குறட்பாக்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் உரிய தெளிவுரையுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________


 திருக்குறள் மாமலை மாத இதழுக்கு சந்தா செலுத்திவிட்டீர்களா?

மேலும் விபரங்களுக்கு.....

                                              இன்னும் தொடரும்...

என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,
இலக்கியக்கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733

திருக்குறள் பெருமை அறிவோம் - பகுதி -01

                       திருக்குறள் பெருமை அறிவோம் வாங்க- பகுதி -01

 மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
       கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
         
     மனிதவாழ்வுக்குத் தேவையான அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு ஆகிய நான்கின் முக்கியத்துவத்தினை இலக்கியங்கள் நீதிநூல்களாக  நமக்கு வழிகாட்டுகின்றன. நாலடியார்,நல்வழி உட்பட தமிழ்நீதிநூல்களில் தலையாய நூலான திருக்குறளானது
            உலக நாடுகளால் போற்றப்பட்டுவருகிறது.திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல்நூலாகும்.மாந்தர்தம் அகவாழ்விலும்,புறவாழ்விலும் சுமூகமாக வாழவும்,இன்பமுடனும்,இசைவுடனும்,நலமுடனும் வாழவும்தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உலகின் அனைத்து சமயங்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியாக கூறப்பட்டிருப்பதால் உலகப்பொதுமறைநூலாக கருதப்பட்டு போற்றப்படுகிறது.

                         பாகம்-01 குறள் மலைச் சங்கம்.
 சென்னையைச் சேர்ந்த திரு.பா.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் கடந்த  25-01-2004 ஆம் ஆண்டு தமிழே திருக்குறள் - குறளே தமிழ்  என்பதையே மூச்சாகக் கொண்டு, குறள் மலைச்சங்கம் தொடங்கி,
      
இன்றுவரை உலகவாழ் அறிவியலறிஞர்கள்,தமிழறிஞர்கள்,கல்வியாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக் கழகங்கள்,தன்னார்வ அமைப்புகள்  ஆகியோர்களுடன் தமிழ்நாடு அரசு சார்ந்த மந்திரிகள்,மாவட்ட ஆட்சியர்கள்,வருவாய் வட்ட ஆட்சியர்கள் ,என அனைவரையும் ஒருங்கிணைத்து 1330குறட்பாக்களையும் உரிய தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக பொறித்து குறளுக்கு  எக்காலத்திலும் அழியாத நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டு தமிழுக்குத் தொண்டு செய்துவருவது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த செயலாகும்.
கல்வெட்டுக்களாக செதுக்குவதற்கான இடமாக தேர்ந்தெடுப்பதற்காக கல்வெட்டு ஆய்வாளர்கள்,சிலை வடிவமைப்பாளர்கள் ஆகிய கலைநுணுக்கமுள்ளவர்களுடன்இன்றுவரை 31 மாநாடுகள்,கருத்தரங்கங்கள்,ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி
(1)திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்மலை,(2)பழநிமலை,(3)பவளமலை,(4)பச்சைமலை,(5)சிவன்மலை,(6)ஓதிமலை, என பல மலைகளையும் ஆய்வுசெய்து அவற்றின் செங்குத்தான உயரம்,உறுதியற்ற பாறைகள்,மண்திட்டுக்கள்,மரம்,செடி,கொடிகள் நிறைந்த மண்வளங்கள் என பல காரணிகள் 1330குறட்பாக்களையும் ஒரே இடத்தில் கல்வெட்டுக்களாகச் செதுக்க குறைகளாகிவிட,மனம் தளராமல் ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்தில் அமைந்துள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி திருக்கோயில் எழுந்தருளியுள்ள 20.5 ஏக்கர் பரப்புள்ள மலையையும்  பார்வையிட்டு  அதன் உறுதியான தன்மை,  100 அடி உயரம்,ஒரே பாறையால் ஆனவட்ட வடிவமான அமைப்பு, போன்ற சாதகமான சூழ்நிலையை ஆய்வுசெய்து இதுவே கல்வெட்டுக்களாக செதுக்குவதற்கான தகுந்த மலை எனத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

                குறள்மலையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலையப்பாளையம் மலையில் குறள் கல்வெட்டு பதிக்க அரசாங்கத்திற்கு முறையாக பலமுறை விண்ணப்பம் அளித்து 21-09-2014 அன்று கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் திருக்குறள் கல்வெட்டுக்கள் முதல் முதல் மாநாடு நடத்தி அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செதுக்கிய முதல் குறட்பாவ கல்வெட்டினை  3-7-2016 ஆம் தேதியன்று அறிவியலறிஞர் இஸ்ரோ விஞ்ஞானி உயர்மதிப்பிற்குரிய மயில்சாமி அண்ணாசாமி அவர்களால்திறந்து தொடங்கிவைக்கப்பட்டது.
            குறள்மலைச் சங்கத்தின் வலைத்தளங்கள்
            (1)    www.thirukkuralmalai.org
            (2)        http:thirukkuralkalvettukkal.blogspot.com
மாத இதழ் (சென்னை)
           (3)         திருக்குறள்மாமலை
Facebookமுகவரி
        (4)     குறள் மலைச்சங்கம்/facebook.com


                திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி  தொடரும்......
 என அன்புடன்,
பரமேஸ்வரன்,
 இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண்; 9585600733

28 மார்ச் 2020

குறள்மலை, நம்பியூர்மலையப்பாளையம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு  அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.









                        உலகப் பொதுமறைநூலாம் திருக்குறள் மற்றும் அதனை இயற்றிய திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்த திரு...பா.ரவிக்குமார் அவர்கள் குறள்மலைச் சங்கம் நிறுவி தமது கடினமாக உழைப்பாலும்,சிறந்த சிந்தனையாலும் உலகத்திலுள்ள அனைத்து தமிழ்ச் சான்றோர்களையும் இணைத்து வருகிறார்.தொடர்ந்து குறள்மாமலை என்ற பெயரில் மாத இதழும் நடத்தி தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார்.
 
 மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றபோது....


     மேலும்....
குறள்மலை சங்கம் சார்பாக....
                  ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள நம்பியூர் வட்டம்,மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசாமி கோயில் அமைந்துள்ள 20.5ஏக்கர் பரப்பளவுள்ள ஒரே கல்லால் ஆன வட்டவடிவமைப்புகொண்ட 100அடி உயரமான மலையில் 1330 குறட்பாக்களையும் தெளிவுரையுடன் கல்வெட்டுக்களாக செதுக்கும் பணி ஆய்வுகள் .........


 
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய வெ.க.சண்முகம் அவர்கள் குறள்மலையை பார்வையிட்டு ஆய்வு நடத்திய காட்சி










   இன்னும் தொடரும்....
 என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
இலக்கியக் கூடல்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

25 மார்ச் 2020

மக்களின் விபரீதமான அலட்சியப் போக்கு

                                                 கொரோனா
  மனிதகுலத்துக்கே சவாலாகத் திகழும் கொரோனாவை ஒழித்துக்கட்ட அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்போம்....

                                  கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் தலைமையில் நமது மருத்துவர்களும்,செவிலியர்களும்,சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும்,இரவும் பகலும் பாராமல் படாதபாடு பட்டு வருவது கண்டு மிகவும் வேதனைப்பட வைக்கிறது.


                  இருந்தாலும் கொரோனாவின் கொடூரம் புரியாமல் படித்தவர்களே அலட்சியப்படுத்தி வருவதைக் கண்டு கவலைகொள்ளச் செய்கிறது.
வைரஸ் நோய் குணமாக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கமுடியாத நிலையில் வைரஸின் 14வாழ்நாட்களின் தொடர்பை துண்டிக்க  மக்களை தனித்திருக்க வேண்டி(தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில்  சுய ஊரடங்கு உத்தரவு)144 இட்டும் யாரும் கேட்டபாடில்லை.
 உலக நாடுகளே ஸ்தம்பித்துப்போய் கலங்கிநிற்கிறது. இந்தநேரத்தில்  கொரோனா வைரஸின்  தாக்கத்தை  படித்தவர்களே உணர்ந்தபாடில்லை!

 உதாரணமாக  சென்னையில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கைகூப்பி வணங்கி கெஞ்சிக் கோரிக்கை வைக்கிறார்! அதை துச்சமாக மதித்து போக்குவரத்து செய்யும் இளைஞர்களும்,மற்றவர்களும்? இனி  இது லாயக்கு ஆகாது!





லத்தி எடுத்து கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினால்தான் அடங்குவார்கள்..

                           இந்தோனேசியாவில் கொரோனோ நோயாளிகள் பலரைக் காப்பாற்றிய மருத்துவர் Hadio Ali அவர்கள் கொரோனாவாலேயே தாக்குதலுக்கு ஆளாகி நேற்று மரணமடைந்த செய்தி அறிந்து நம்மை கதறி அழ வைக்கிறது.இவரைப் போன்ற தெய்வங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம்...
 கொரோனா நோயால் தான் பாதித்துவிட்டதை அறிந்த மருத்துவர் வீட்டிற்கு வந்து தூரத்திலேயே நின்று தமது குழந்தைகளுக்கும் மனைவிக்கும் நிரந்தமாக பிரியும் விடையளித்துச் சென்ற காட்சி கீழே உள்ள படம்...


22 மார்ச் 2020

கோவிட்19 என்னும் Corona virus

                     உசாரய்யா! உசாரு!! கொரோனா வைரஸ் உசாரு!                                                        Corona virus





                                பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு அழைப்பிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு (இன்று) 22 -03 -2020ஞாயிறு  காலை 7மணிக்கு தொடங்கி (நாளை) 23ம் தேதி காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
                        தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.


கொரோனா என்னும் கொடிய வைரஸ்....
                    தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

                    வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய மக்கள் அனைவரையும்22-03-2020 ஞாயிறு இன்று  வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவைத்த அரக்கன்...
                     ஈரோடு மாவட்டம் ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா,பண்ணாரி மாரியம்மன் திருவிழா,சுற்றுவட்டார சந்தைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் காலிசெய்துவிட்டது...

         சீனாவில் கடந்த2020 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுவதாக சீன நாட்டின் தேசிய சுகாதாரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனமும் இவை மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.

                         கொரோனா என்னும் கோவிட் 19 என்னும் வைரஸ் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறண்ட இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது அவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது இந்த நேரத்தில் முக்கியம் என்றும் கூறுகிறார்கள்.

                 முடிந்தவரையிலும் உங்களுக்கு அறிகுறி தெரிந்தால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் பலவும் சமயத்தில் வைரஸ் தொற்றாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப குணப்படுத்துவதும் அவசியம் என்பதை இத்தருணத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.

                    சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற்கப்படும் இடத்தில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது.

             விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுவதாக சீன நாட்டின் தேசிய சுகாதாரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனமும் கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.

                கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த தொற்றுக்கு இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு விலங்குகளுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றை குணப்படுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் எச்சரிக்கையும் சுகாதாரமும் மட்டும் தான் இப்போதைக்கு நம்மை காப்பாற்றும்.

Corona virus: ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரணம் இதுதான்...




            சீன நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பியவர்கள் சிலருக்கு இந்த தொற்று இருப் பதை அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து நாடு உறுதி செய்தது. இதை தொடர்ந்து சீனா மற்றும் மற்றும் ஹாங்காங் பகுதியிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தெர்மல் ஸ்க்ரீனிங் சோதனை செய்யப்பட்டது. இதில் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கேரளா, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் சேர்ந்த பயணிகள் 11 பேரை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியது. பிறகு அதில் தொற்று இருப்பவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின்பு குணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

                 தற்போது இந்தியாவில் இந்த தொற்று315 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் குணமடைந்த நிலையில் 5பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது கட்டத்தில் நாம் இருந்துவருகிறோம். இந்த கட்டத்தை அபாயமில்லாமல் தாண்டிவிட்டால் சற்றே மூச்சிவிடக்கூட முடியும். இல்லையெனில் அதிகப்படியான ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பது மறுக்கமுடியாது.

covid -19 vaccine:
         கொரோனா வைரஸ் குணப்படுத்த மருந்து கண்டு பிடிச்சுட்டாங்களா?

                     இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் இதற்கான தயார் நிலையில் படுக்கை வசதிகளை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் தலைமை மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இந்த வைரஸை எதிர்கொள்வதற்கான சோதனை மையம், தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம்.

​காய்ச்சல்

சாதாரண காய்ச்சல் போன்று வரும் இந்த வைரஸ் தொற்று மூன்று நாட்களுக்கு மேலும் குறையாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை காட்டிலும் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்திலிருந்து யாராவது சீனாவுக்கு பயணம் சென்றிருக்கலாம். அல்லது அங்கு பயணம் செய்த உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்தித்து இருக்கலாம். அக்கம் பக்கத்திலும் சீனா பயணத்தோடு யாரேனும் தொடர்பு கொண்டிருக்கலாம். அதனால் காய்ச்சலுக்கு சுயமாக மாத்திரைகள் எடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இந்த தொற்று பரவிய பிறகு 14 முதல் 20 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தெரிகிறது என்பதால் பரவுவதும் அதிகரித்துவருகிறது.

     குழந்தைகளை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யணும்?
                    உடல் வெப்பத்தை காட்டிலும் அதிகமான வெப்பம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் வைரஸ் தொற்று பரிசோதனை தாமதிக்காமல் செய்ய வேண்டும். காய்ச்சல் தொற்று இருந்தால் இந்த நேரத்தில் சுய வைத்தியம் வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது மருத்துவத்துறை.
                     தற்போது காய்ச்சலில் தொற்று என்பது 14 நாட்களுக்கு பிறகு இதன் அறிகுறி தென்படுவதாலும் 27 நாட்களுக்கு பிறகு தொற்று இருப்பது தெரியவருவதாலும் வேகமாக இந்த தொற்று பரவி வருவதை தடுக்க முடியாமல் போவதாக மருத்துவத்துறை கவலை தெரிவிக்கிறது. அதனால்

                   சளி, இருமல் அறிகுறி இருந்தாலே தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

           கொரோனா வைரஸ் தாக்காமல் தப்பிக்க கைகளை இப்படித்தான் கழுவணுமாம்...




              பொதுவாக காய்ச்சல் வந்தால் சளியும், இருமலும் உடன் வரும். அதனால் இவை உடல் சூடு அல்லது குளுமையால் தான் என்று முடிவெடுக்கவேண்டாம். தொடர் இருமலும், சளியும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சலின் போது இருமலும், சளியும் இருப்பவர்கள் பொது இடங்களிலும் துப்ப வேண்டாம்.

                   coronavirus precautions : கொரோனா வந்தாலே மரணம்தானா?, பீதியில் மக்கள் ஆனால்..

                   வீட்டிலும் தனி கழிவறையையோ அல்லது உபயோகத்துக்கு பின்பு நீரை விட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளிக்கவோ வேண்டும். யாருடைய கைகளிலும் குலுக்க வேண்டாம். கைகளை கழுவாமல் முகத்தில் குறிப்பாக மூக்கு, கண் பகுதியில் துடைக்க வேண்டாம்.வீட்டில் இருப்பவர்களிடமிருந்து தனிமை படுத்தி கொள்ளுங்கள். தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள்.

                 வீட்டிலும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவது அனைவருக்கும் பாதுகாப்பானது. தும்மல் வந்தால் கைகளை கொண்டு மூடி தும்முவதோடு உடனடியாக கைகளை சோப்பு நீர் கொண்டு சுத்தமாக கழுவுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும்போது கவனமாக கைகளை தேய்க்க வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கைகளை சோப்பு கொண்டு கழுவுங்கள்.

​மூச்சுத்திணறல்

                தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் இந்த அறிகுறிகளையும் கவனியுங்கள் காய்ச்சலோடு தொண்டை செருமல், தலைவலி, மூச்சுதிணறலும் உண்டாககூடும். எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளையும், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்த கர்ப்பிணிகளையும், வயதானவர்களையும் எளிதில் தொற்றி பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதால் இவர்களை அதிக கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

          கொரோனாவை எதிர்க்கும் 10 விதமான ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்காமல் குடியுங்கள்!

                இதை தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதற்காக இந்த அறிகுறிகள் இருந்தாலே கொரோனா வைரஸ் நமக்குமா? என்ற பயம் வேண்டாம். அதே நேரம் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவும் வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் முக்கிய அறிவுரை.

             காய்ச்சல் என்று வந்தாலே திரவ உணவு எடுத்துகொள்ளுங்கள். கண்டிப்பாக ஓய்வும், போதுமான தூக்கமும் கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். இயன்றவரை சுய வைத்தியம் வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் இப்போதைய அறிவுரை.
          கண்டிப்பாக மருத்துவரது ஆலோசனையோடு நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதுதான் இப்போதைக்கு அனைவருக்கும் பாதுகாப்பானது.

15 மார்ச் 2020

PCRA & IRST,NSDC-TNSTC BSR-14-03-2020

 தொழிற்முறை ஓட்டுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி-2020
       இடம்;
                 ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி
           தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-பவானிசாகர்

                           நாள்; 14-03-2020
   முதல் அமர்வு;காலை 9 மணி முதல் 10மணி வரை
   பயிற்சியாளர்; திருB. அர்ஜூனன் அவர்கள்,
                             ஓட்டுனர் பயிற்றுநர்,பவானிசாகர் பயிற்சிப் பள்ளி,
 





இரண்டாம்அமர்வு; காலை 10மணி முதல் மதியம் 12.30வரை
       
                               PCRA - DRIVER TRAINING PROGRAM

  பயிற்சியாளர்;
                           திரு. M..தங்கவேல் அவர்கள், பழனி
 PETROLIUM CONSERVATION RESEARCH ASSOCIATION - SOUTHERN REGIN
 பெட்ரோலியம் கன்சர்வேசன் ரிசர்ச் அசோசியேசன்-சவுத் ரீஜனல்

     நோக்கம்;
  விபத்து தவிர்ப்பு,எரிபொருள் விரயம் தவிர்ப்பு,பாதுகாப்பான இயக்கம்,வருவாய்ப் பெருக்கம், கேட்டதை,பார்த்ததை,கற்றதை,பட்டதை நினைவுபடுத்தி உடல்நலனையும்,மனநலனையும் பாதுகாத்து
 ஒவ்வொரு நொடியும் பணியில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படத் தூண்டுதல்












மூன்றாவது அமர்வு ;
    மதியம் 12.30 மணி முதல் மாலை 5.30மணிவரை
    திரு. வினோத்குமார் அவர்கள்,
          விரிவுரையாளர், மதுரை
THE INSTITUTE OF ROAD SAFETY TRUCKNOWLEDGY,
NATIONAL SKILL DEVELOPMENT CORPORATION,
LOGITICS SKILL COUNCIL,
PRADHAN MANTRI KAUSHAL VIKAS YOJANA
 









நிறைவாக:
(1) இரண்டு இலட்ச ரூபாய்க்கான இன்சூரன்ஸ் பாலிசி 
(மூன்று வருடங்கள் வரை செல்லத்தக்கது)
(2)பேட்டரி லைட்-1 (300ரூபாய் மதிப்புடையது)
(3) பனியன்-1(100ரூபாய் மதிப்புடையது)
(4) ரூபாய்500/-(வங்கியில் நமது கணக்கிற்கு அனுப்பிவைப்பார்கள்),
ஆகிய பலன்களுடன் இல்லம் வந்தடைந்தோம்.

 மறவாதீங்க!
 (1) சமீபத்திய புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்) - 2
(2)  ஆதார் ஜெராக்ஸ்-1
 (3)  ஓட்டுனர் உரிமம் ஜெராக்ஸ்-1
 (செல்லத்தக்க உரிமம் மற்றும் பேட்ஜ் பதிவுடன்)
(4)வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் முதல் பக்கத்தின் ஜெராக்ஸ்-1
 சமர்ப்பிக்க வேண்டும்.
 கொடுக்கப்படும் விண்ணப்பத்தில்  ஆங்கிலத்தில் விபரங்களை எழுதுங்க!.

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...