06 செப்டம்பர் 2018

பான் கார்டு Pan card

                                         Pan card பற்றிய ஒரு தகவல்.!
அன்புடையீர்,
                                 வணக்கம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பான்கார்டு என்னும் நிரந்தர கணக்கு எண் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்போம். அந்த பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. 
பான் கார்டில் ( Pan Card )உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும்.
உதாரணத்திற்கு பான் கார்டு எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
இதில் முதல் மூன்று எழுத்துக்கள் வரிசைப் பதிவு ஆகும்.
நான்காவது எழுத்து என்பது தனிப்பட்ட நபரையோ, ஒரு நிறுவனத்தையோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட துறைகளில் ஒன்றையோ குறிக்கும்.
C – Company (நிறுவனம்)
P – Person (தனி நபர்)
H – Hindu Undivided Family (இந்து கூட்டுக்குடும்பம்)
F – Firm (தொழில்)
A – Association of Persons (கூட்டிணைவு/கூட்டாளிகள்)
T – Trust (அறக்கட்டளை)
L – Local authority (உள்ளூர் அதிகாரத்துறை)
J – Juridical Person (நீதித்துறையை சேர்ந்தவர்கள்)
G – Government Personnel (அரசு பணியாளர்கள்/அதிகாரிகள்)
ஐந்தாவது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவருடைய பெயரின் முதல் எழுத்தாக இருக்கும். உங்கள் பெயர் அருண்(ARUN) என்றால் ஐந்தாவது எழுத்து A என்று வரும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்கள் ஆகும். இவை 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையதே.
எனவே உங்கள் பான் கார்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்துக்கள்தான் முக்கியமானவை. இந்த எழுத்துக்களை உங்களால் எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பின் நம்பர் சரியாக இருந்தாலே உங்களது பான் கார்டு உண்மையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக