15 செப்டம்பர் 2018

விவசாயத்தின் அவலம்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்றைய வேளாண்மையின் அவலநிலையினை கவிதையாக உள்ளத்தில் வேல்பாய்ச்சுகிறமாதிரி எழுதியுள்ளமை அர்த்தமுள்ள புரிதலைத்தருகிறது.இதோ...

நானறிஞ்ச விவசாயம்!
----------------------------
நதிக்கரை நாகரிகம்
நாம் வாழ்ந்த காலமடா,
நாதியத்து போனதடா
நாமறிஞ்ச செல்வமடா.

சொன்ன நாளில் மழைபெஞ்சு
சுத்தியுள்ள குளம் நிறைஞ்சு
மண்ணெல்லாம் பொன்னா விளைஞ்சு
மனையெல்லாம் நெல் நிறைஞ்ச காலமடா...
விளக்கிருக்கும் மூலையிலே,
எடுத்து வச்ச விதை நெல்லை ,
விதைபாவி முளைச்ச பின்னாலே
வறுத்து, வாசனையா விதை அரிசியாக்கி
இனிக்க இனிக்க தின்னதெல்லாம்
இனி வரவே வராதோடா..
தொளி உழவில் ஏரைப் பூட்டி
சவதியிலும் தடுமாறாத் தடம் புடிச்சு
உழுதுபோட்டு,வரப்பு வெட்டி,மரம் தடவி
கொளைமிதிச்சு,உரம் போட்டு,நாத்தை வீசி
கொலவை போட்டு நடுவை நட்டு எல்லாரும்
குடும்பத்தோட பாத்த நம்ம விவசாயம்
தன் சாயம் இழந்து தறிகெட்டும் போனதேடா...
களைபறிச்சு நீர்பாச்சி கதிரான பயிர் அறுத்து
களத்துமேட்டில் வரவு வச்ச காலம் இனி வராதோடா..
அவுலும் பயிரும்,சிரட்டைபுட்டு,சீனிகிழங்குன்னு
நெல்ல போட்டு தின்னநாள் நினைவிலின்னும் இனிக்குதடா.
வீட்டுக்கு நெல் ஒதுக்கி, வேலை செஞ்ச சனத்துக்கெல்லாம்
ஆண்டுக்கு இவ்வளவுன்னு அளந்த போட்ட காலமடா.
காலம் இனி கலிகாலம் தலவனெல்லாம் களவாணி
மணல் எடுத்து நதி சுரண்டி மண்அள்ளி தலமேல
பூ அள்ளி போட்டது போல் புதுமையா கொள்ளையிட்டான்.
விவசாயம் செத்துப் போனா விவசாயி பொழைப்பானா?
பல சாயம் பூசி வந்து பணத்துக்கு வித்துபுட்டான்.
இனி எங்கே நாத்து நட்டு நம்மாளூ வாழப் போறான்?
 நன்றி;
Parimelazhagar Pari
11 செப்டம்பர், 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...