15 செப்டம்பர் 2018

திருக்குறளில் வாஸ்துமுறை-01

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். திருக்குறளிலும் வாஸ்துமுறை அறிந்துகொள்ளுங்க..
                    பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களின் அமைப்பு முறைக்கான புதியதொரு விளக்கமும்.
அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய குறளினைக் கசடறக் கற்றுப் பொருள் கூறியுள்ளனர் தமிழ் அறிஞர்கள்.
பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை யாகும். திருக்குறளின் பாயிரத்தில், முதல் அதிகாரமாகக் கடவுள் வாழ்த்தும், இரண்டாவது அதிகாரமாக வான் சிறப்பும், மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமையும், நான்காவது அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் உள்ளன.
கடவுள் வாழ்த்திற்கு அடுத்தபடியாக வான்சிறப்பு கூறப்படுவதன் காரணம் என்ன? அதன்பின்னர் நீத்தார் பெருமையும் அறன் வலியுறுத்தலும் அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இக் காரணத்தை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்.
இவ்வாறான பாயிர அமைப்பு முறையானது, வேறு எந்த ஒரு தமிழ்நூலிலும் இடம் பெறவில்லை. வேறுபிற மொழிநூல்களில் இவ்வாறான பாயிர அதிகார அமைப்பு இல்லை.
பாயிர அதிகார அமைப்பு முறைக்கான புதிய விளக்கம்
வாஸ்து விஞ்ஞானம், திருக்குறளின் பாயிர அதிகார அமைப்பு முறைக்கு, ஒரு ​தெளிவான விடையைக் கூறுகிறது.
திசைகள் 1) கிழக்கு 2) மேற்கு 3) தெற்கு 4) வடக்கு என்ற வரிசையில் அறியப்படுகின்றன. வாஸ்து விஞ்ஞானம். 1) கிழக்குத் திசைக்கு அதிபதியாக இந்திரன் மற்றும் கடவுளரையும், 2) மேற்குத் திசைக்கு அதிபதியாக வருணனையும், 3) தெற்குத் திசைக்கு அதிபதியாக எமனையும், 4) வடக்குத் திசைக்கு அதிபதியாக அறக்கடவுளையும் குபேரனையும் திசைத்தெய்வங்களாகக் கூறுகிறது.
இந்நான்கு திசைகளுக்குமான, திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரத்தின் நான்கு அதிகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்குறளின் பாயிர அதிகாரம்
1 கிழக்குதிசை - இந்திரன் மற்றும் பிற கடவுளர் - கடவுள் வாழ்த்து
2 மேற்கு திசை - வருணன் - வான்சிறப்பு
3 தெற்கு திசை - யமன் - நீத்தார்பெருமை
4 வடதிசை - தரும தெய்வம் மற்றும் குபேரன் - அறன்வலியுறுத்தல்
திசை தெய்வங்களைத் துதிக்கும் நான்கு வேதங்களின் சாரமாகத் திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன என்பதும், திருவள்ளுவர் திருக்குறளில் திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரம் பாடியுள்ளதும் வியப்பினும் வியப்பாக உள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
இக் கட்டுரையைக் கண்ணுறும் அறிஞர்கள், மற்ற உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருளுடன் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் ஒன்றுசேர ஆராய்ந்து குறளின் மெய்ப்பொருளை உய்த்து உணருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
http://thirukkural-kalairajan.blogspot.com/…/09/blog-post.h…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...