13 செப்டம்பர் 2018

இந்திய அரசியல் சாசனம் - CONSTITUTION OF INDIA

இந்திய அரசியல் சாசனம் ஒரு அறிமுகம்...
   மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.
                    இம்மென்றால் சிறைவாசம்;ஏனென்றால் வனவாசம்.,என்ற வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு பலியாகி அல்லலுற்ற நமது மக்கள் பெற்ற விடுதலையை பேணி காக்கவும்,தமக்காகத் தம் உரிமைகளை வலியுறுத்தி நிலைநாட்டிக்கொள்வதற்கும் வழங்கிக்கொண்ட அடிப்படை உரிமை சாசனம் இந்த இந்திய அரசியல் சாசனம் ஆகும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  51(A) ன்படி 
                       இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும்,
உட்பிரிவு (அ) ன்படி
                அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவும்,அதன் நோக்கங்களையும்,அதன்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளையும் தேசக்கொடியையும் தேசீய கீதத்தையும் மதிக்கவும்,
உட்பிரிவு(ஆ)ன்படி
                       நமது தேசீய விடுதலை போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்துள்ள புனிதமான கொள்கைகளை போற்றவும்  கடைப்பிடிக்கவும்,
உட்பிரிவு(இ)ன்படி
              இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒப்புயர்வற்ற தன்மையையும் நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும்,
உட்பிரிவு(ஈ)ன்படி
             தேசத்தைப் பாதுகாப்பதற்கும் அப்படி அழைக்கப்படும்போது தேசத்திற்கு சேவை செய்ய முன்வரவும்,
உட்பிரிவு(உ)ன்படி
                        சமயம்,மொழி,பிராந்தியம் ஆகியவற்றை தாண்டி வந்து இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும், பெண்களின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் பழக்கவழக்கங்களை தவிர்த்திடவும்,
உட்பிரிவு(ஊ)ன்படி
                        நமது விலை மதிப்பற்றதும் பல்வகைப்பட்டதும் தொன்றுதொட்டு வருவதும் ஆன பண்பாடுகளை மதிப்பதற்கும் காப்பதற்கும்,
உட்பிரிவு(எ)ன்படி
                    காடுகள்,ஏரிகள்,ஆறுகள்,காட்டுவிலங்குகள் மற்ற உயிரினங்கள் உட்பட நம்மிடையே சுற்றியுள்ள இயற்கைச்சுற்று சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில்கருணை காட்டவும்,
உட்பிரிவு(ஏ)ன்படி
                   அறிவியல்ரீதியாக அணுகுமுறை,மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம்,சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் காப்பதற்கும்,
உட்பிரிவு(ஐ)ன்படி
                  பொதுச்சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் வன்முறை கண்டு அஞ்சி விலகுவதற்கும்,
உட்பிரிவு(ஒ)ன்படி
                      முன்னேற்றப்பாதையில் நாடு முனைந்து வெற்றிபெற அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் சிறப்படைய முயற்சி செய்வதற்கும்,
       ஆவணபுரிவதை தமது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசியல் சாசனம் பிரிவு  38 ன்படி
நீதி,சமூகம், பொருளாதாரம், மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.அவற்றைக் காப்பதற்கும்,அவற்றை அனைவரும் பெறுவதற்கும் தேவைப்படக்கூடியவற்றை மக்களின் நலன் கருதி,மேம்பாட்டிற்காக அரசு முயற்சி எடுத்துக்கொள்ள  வேண்டும்.தேசீய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
 இந்திய அரசியல் சாசனம் பிரிவு  39 ன்படி
உட்பிரிவு(அ)ன்படி
               குடிமக்கள் அனைவரும் ஆண்,பெண் பேதமின்றி சரிசமமாக வாழ்வதற்குத்தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்,
உட்பிரிவு(உ)ன்படி
                  தொழிலாளர் நலத்தையும்,வேலைத்தறனையும்,ஆண்,பெண்,குழந்தைகள் ஆகியோரைத்  தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களை தமது வயதிற்கும்,சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்குப் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுப்பதற்கும்,
உட்பிரிவு(ஊ)ன்படி
                  குழந்தைகள் சுதந்திரமான சூழ்நிலையிலும் கண்ணியத்தோடும்,நல்வாழ்வுடன் வளர்வதற்கும்,அப்படி வாழ்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்கும்,இளைஞர்களை,சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பளிப்பதற்கும்,ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும்,
 உரியவகையில் தமது கொள்கைகளை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு  39(A) ன்படி
 சட்ட அமைப்புகளை நீதிப்பூர்வமாக இயங்குவதற்கும்,அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதற்கும், உரிய சட்டதிட்டங்கள் மூலம் இலவச சட்ட உதவி கிடைப்பதற்கும்,பொருளாதாரம் அல்லது வேறு குறைபாடுகளினால் எந்த குடிமகனுக்கும் தன் பிரச்சினைகளில் நீதி வழங்கப்படாதிருப்பதைத் தவிர்ப்பதற்கும் உண்டான வழிகளை வலியுறுத்த வேண்டும்.
 
இந்திய அரசியல் சாசனம் பிரிவு  43 ன்படி
வேளாண்மை,தொழிற்சாலை மற்றும் வேறுவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அனைவருக்கும் வாழ்வதற்குரிய ஊதியம்,தொழிலாற்றுவதற்கேற்ற சுமூகமான சூழ்நிலையில்,போதுமான ஓய்வு,சமூக மற்றும் பண்பாட்டுப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைப்பதற்கும் உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவோ,அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவோ உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  46 ன்படி
பிற்பட்ட மக்களிடையே,அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை மிகுந்த அக்கறையோடு அமல்படுத்த வேண்டும்.சமூக அநீதிகளிலிருந்தும்,எல்லாவகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

  இந்திய அரசியல் சாசனம் பிரிவு  47 ன்படி
 உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும்,அடிப்படை வாழ்க்கைவசதிகளைப் பெருக்கவும்,நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும்,உடலுக்குத்தீங்கு பயக்கும் நச்சுப்பொருட்களையும் மருந்தாக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் பிரிவு  48(A) ன்படி
    தேசத்திலுள்ள காடுகளையும் காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு மேற்படியான அரசியல் சாசனப்பிரிவுகளின்படிதாங்க மாணவர்களின்,கல்வி வளர்ச்சி,பாதுகாப்பு,முன்னேற்றத்திற்கான சமூக சேவை புரிந்து வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...