10 செப்டம்பர் 2018

சமூகப்பணி செய்வது சொந்தத் தேவைக்காக???????


அனுப்புதல்,
                        C. பரமேஸ்வரன்,
                       தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை,
                        தாளவாடி கிளை,
                       ஈரோடு மண்டலம்.

 பெறுதல்;
                     திரு.பொதுமேலாளர் அவர்கள்,
                   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை,
                     ஈரோடு மண்டலம்.


                           ஐயா,

                              பணிவான வணக்கம்.
            நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்தில் சீரிய முறையில் ஓட்டுனராகப்பணிபுரிந்து நிரந்தரம் செய்யப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்தின் சிறந்த உடலுழைப்புத்தொழிலாளியாவேன்.
சராசரி ஓட்டுனராகிய எனக்கு நற்பண்புகள் கற்பித்து, சமூகப்பொறுப்புள்ள குடும்பஸ்தனாக்கி ,என்னை பண்புள்ள மனிதனாக்கிய நமது கழகமாகிய தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலத்திற்கும்,கோபி கலை அறிவியல் கல்லூரிக்கும், சத்தி மற்றும் தாளவாடி வட்டார சமூக ஆர்வலர்களுக்கும்,நன்றி செலுத்தும்விதமாகவும்,நமது அரசாங்கத்திற்கும்,நமது போக்குவரத்துக்கழகத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தரும்வகையிலும்,நமது எல்லோருக்கும் எஜமானர்களாகிய பொதுமக்கள் நலன் கருதி சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடுகளைக்கடந்து மதச்சார்பற்று ஒன்றுபட்ட சமூகமாக முன்னேறுவதற்காக தன்னால் இயன்றளவு சேவை புரிய வேண்டும் என்று அறிவுரை நல்கி ஊக்கமளித்த நமது கழகத்தின் முன்னாள் பொதுமேலாளர்கள் மற்றும், முன்னாள் கிளைமேலாளர்களின் வழிகாட்டுதல்படியும்,ஈரோடு மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டு ஆட்சியாளர் திரு.வெ.க.சண்முகம் இ.ஆ.ப.,அவர்களது பாராட்டுடன்கூடிய அறிவுரைப்படியும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 51(A)க்குட்பட்ட அனைத்து பிரிவுகளின்படியும்,குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் பிரிவு 38,39,43,46,47பிரிவுகளின்படியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி,பாதுகாப்பு,முன்னேற்றத்திற்கான சமூகப்பணிகளை இலக்காகக்கொண்டு குறிப்பாக நம்மைவிட 50ஆண்டுகள் பின்தங்கியுள்ள வாழ்க்கைச்சூழலிலிருக்கும் தாளவாடி சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் நமது போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் இதர அரசுத்துறைகளின் ஆதரவோடும்,தனித்தும்,சமூகத்தின் அக்கறைகொண்டவர்களை இணைத்தும் கடுமையான பணியான எனது ஓட்டுனர் பணி நேரம் போக ஓய்வேடுக்கவேண்டிய மீதி நேரங்களில் சமூக நலப்பணி புரிந்து வருகிறேன்.
சமூகத்தின் மீது அக்கறைகொண்டவனாக பொதுமக்களிடமும்,மாணவக்குழந்தைகளிடமும்,கல்வியாளர்களிடமும் அறிமுகமாகிவிட்ட நான் வழக்கம்போல கடந்த மாதமும் தாளவாடியில் பிரசித்திபெற்ற புத்தக பதிப்பாளர்களையும்,சென்னையிலிருந்தும்,சேலத்திலிருந்தும், மேட்டூரிலிருந்தும்,ராமனாதபுரத்திலிருந்தும் இலவச வழிகாட்டுதல் முகாம் நடத்திவரும் சான்றோர்களை வரவழைத்து பொது அறிவை வளர்க்கும் மூன்றுநாட்கள் புத்தகக்காட்சி,மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடத்தியதற்காக (தலைமை நிர்வாகம் எனக்கு ஒதுக்கியுள்ள 255நாட்கள் மொத்த விடுப்புகளில்) எனது வார ஓய்வு நாளும் சேர்த்து நான்கு நாட்களை ஒருவாரம் முன்னதாக (17-8-2018தேதியிட்ட விடுப்பு விண்ணப்ப எண்D-131853) கேட்டும் சமூகப்பணி எனது சொந்த வேலை என கூறியதோடு எனது விடுப்பினை வழங்க மறுத்து அங்குமிங்கும் அலைக்கழித்தது இன்றுவரை மிகுந்த மனவேதனையை தருகிறது.(சமூகப்பணிகளுக்கே தராத எனது விடுப்புகளை பணி ஓய்வு பெறுவதற்குள்ளாகும் வருகிற மூன்று ஆண்டுகளுக்குள் எப்போது வழங்கப்படும் என்பதனையும் தெரிவிக்க பணிவுடன் இதன் மூலமாக பணிந்து கேட்டுக்கொள்கிறேன்).  தாளவாடி கிளையின் தற்போதைய கிளை நிர்வாகம் சமூக நலப்பணியினை தேவையற்றதாக கருதினால் அந்த தவறைச்செய்த அதாவது சமூகத்திற்கு சேவை செய்வது நமது அரசின் பணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உட்படஅனைத்து அரசுத்துறைகளின் முக்கிய பணி என்று எனக்கு அறிவூட்டிய நமது கழகத்தின் முன்னாள கிளைமேலாளர்களும்,பொதுமேலாளர்களும்,மாவட்ட ஆட்சியருமே பொறுப்பு ஆவார்கள் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஐம்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் தாளவாடி வட்டார மாணவ,மாணவிகளின் எதிர்பார்ப்பால் நான் செய்துவரும் சேவைகளை தவறாக நமது போக்குவரத்துக்கழகத்தின் கிளை நிர்வாகம் கருதுதுவது நமது நாட்டின் எதிர்காலத்தின் முன்னேற்றத்தையே சந்தேகப்படும்படும்படியாகவே கருதுகிறேன்.எனவே நான் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அரசுக்கு எதிராக செயல்பட்டதாக நிர்வாகம் கருதினால் அதன் விபரங்களைத்தொகுத்து பட்டியல்படுத்தி எனக்கு ஆவணமாக அளித்து உதவுமாறு தங்கள் மேலான சமூகம் அவர்களை மிகவும் பணிவுடன் கோரி இம்மனுவினை சமர்ப்பிக்கிறேன்.
தேதி : 11-09-2018
  இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
  தாளவாடி கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...