20 செப்டம்பர் 2018

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.

தனக்கு மட்டுமே வாழ்ந்து மடிவது இறகைவிட லேசானது!
 மக்களுக்காக வாழ்ந்து மடிவது மலையைவிடக் கடினமானது.-மாவோ

மரியாதைக்குரிய ஆசிரியப்பெருமக்களே,
 ஆசிரியர் பணி அறப்பணி,அதற்கே உன்னை அர்ப்பணி என்ற சான்றோர் வாக்குப்படி அறிவுலகத்தின் முதுகெலும்பாகத் திகழும் தங்களுக்கு,சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
                        தங்களைப்போன்ற கல்வியாளர்களிடமும்,சமூக சிந்தனையாளர்களிடமும் என்னைப்போன்றோர் வாசிப்பு,யோசிப்பு!,அதுவே நேசிப்பு என்னும் சுவாசத்தை செவி மடுத்ததன் விளைவாக,

                     நமது முன்னோர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களை அறம்,பொருள்,இன்பம்,வீடுபேறு இந் நான்குமே நற்பண்புள்ள மனிதனாக வாழ்வதற்குத்தேவை என்பதை (இலக்காக இயம்பி) இலக்கியமாக படைத்துள்ளனர்.

                         அவ்வாறான முன்னோர்களின் அனுபவச்சிந்தனைகளை எழுத்துக்களாக விதைத்த புத்தகங்களை  பொது அறிவை வளர்க்க மக்கள் மனதிலே விதைக்க வேண்டும்.குறிப்பாக மாணவச்செல்வங்களின் மனதிலே விதைக்க வேண்டும் என்ற சமூக  முன்னேற்றத்திற்கான குறிக்கோளினை இலக்காக வைத்து ,

                         அரசியல்,சாதி,மதம்,இனம் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்ட சமத்துவத்துடன்கூடிய சமூக முன்னேற்றத்திற்காக, விதைகள் என்ற பெயரிலேயே வாசகர் வட்டத்தினை நம்ம சத்தியமங்கலத்திலே தொடங்கி, தங்களைப்போன்ற கல்வியாளர்களையும்,சமூக சிந்தனையாளர்களையும்,சான்றோர்களையும், எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு,
                       மாணவர் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகதினமான ஏப்ரல் 23 ந்தேதி குழந்தைகள் புத்தகத்திருவிழாவாகவும், ஒவ்வொரு ஆண்டும் மகாத்மாகாந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி ஐந்துநாட்கள்  மக்கள் திருவிழாவும் நடத்தி வருகிறோம்.
                            இந்த ஆண்டும் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதிவரை ஐந்து நாட்கள் புத்தகத்திருவிழாவோடு தினசரி மாலை 6மணிக்குமனமகிழ்ச்சிக்கான இலக்கியச்சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு அறிவுசார் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் ,

         'தொட்டனைத்தூறும் மணற்கேணி-மாந்தர்க்குக்
                   கற்றனைத்தூறும் அறிவு'.
              என்ற குறளின் வாக்குக்கேற்ப ஆசிரியப்பெருமக்களாகிய தாங்கள் நட்பு சூழ,தங்களது குடும்பத்தோடு  தங்களிடம் பயிலும் மாணவக்குழந்தைகளையும் அவரவர் பெற்றோருடன் வரச்சொல்லி பொது அறிவுக்கான புத்தகங்களை வாங்குவதோடு,அக்டோபர் 2ஆம் தேதி முதல் அக்டோபர்7ஆம் தேதிவரை தினசரி மாலை6மணிக்கு நடைபெறும் சான்றோர்களின் அறிவுசார்ந்த உரைகளையும் கேட்டு இன்புற்று மனமகிழ்வோடு செல்ல வலியுறுத்துமாறு சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.
                                  +++++++++++++++++++++++++++++++++=
 சொல்லுதல் யார்க்கும் எளிய-அரியவாம்
 சொல்லிய வண்ணம் செயல் .
                  என்னும் குறளோசையும் செவிகளில் ரீங்காரமிடுகிறது! என்றபோதிலும் தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு  பொது அறிவுத் திங்கள் இதழாக,                நம்ம  சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்டபகுதிகளிலுள்ள  எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,மாணவக்குழந்தைகளின் படைப்பாற்றலை   வெளிக்கொணரும்வகையிலும், எழுத்தாளுமைமிக்க மாணவ,மாணவியர்,இருபால் ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,சாதனையாளர்கள்,சான்றோர்கள்,
கொடைவள்ளல்களை இணைத்து மாதம்தோறும் இலக்கியச்சிற்றிதழ்  நடத்தும் திட்டம் உள்ளது.
 துணிந்து செயலாற்ற தங்களது ஆதரவும் ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. ஆசிரியப்பெருந்தகையீர்,தங்களைப்போன்ற கல்வியாளர்களும்,சமூக சிந்தனையாளர்களும் மனது வைத்தால் எந்த தடையையும் உடைத்தெறிந்து நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான சிறந்த படைப்பாளிகளையும், அறிவியலார்களையும்,அரசியல்வாதிகளையும்,அரசு அலுவலர்களையும்,சாதனையாளர்களையும் ,தொழிலதிபர்களையும் உருவாக்கமுடியும்.ஆதலால் நம்ம சத்தியமங்கலத்தின் 3வது ஆண்டு புத்தகத்திருவிழாவிற்கு தினமும் வாங்க.புதியதோர் உலகு செய்வோம் என மீண்டும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
                                            என அன்புடன் வரவேற்கும்,
                                               சி.பரமேஸ்வரன்,
                                                         செயலாளர்,
                                                விதைகள் வாசகர் வட்டம்,
                                              சத்தியமங்கலம்,
                                                    ஈரோடு மாவட்டம்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...