15 செப்டம்பர் 2018

டயர்களில் காற்றழுத்தம். (Pascal's law)


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.   நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் நீண்டநாள் உழைக்கவும்,எரிபொருள் சிக்கனத்திற்காகவும் டயர்களில் காற்றழுத்தம் சரியான அளவு பராமரிக்கப்படவேண்டும். அதன் விளக்கமே இந்தப்பதிவு.                      
   பாஸ்கல் விதிப்படிதான் நாம் காற்றழுத்தத்தினை குறிப்பிடுகிறோம்.

                              ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.







                     
                       பொதுவாக மீட்டர் கேஜ் என்ற காற்றழுத்தமானியை பார்த்தாலே அதில்lb/in2  (PSi )மற்றும்  Kg/cm2 (KPa) (Bar) என  குறிப்படப்பட்டிருக்கும்.நாம் பெரும்பாலும் பவுண்டு அளவினைத்தான் வழக்கமாக சொல்வோம்.
 பாஸ்கலின் விதி (Pascal's law)ப்படி
(1)பவுண்டு என்பதன் ஆங்கில குறியீடுதாங்க lb/in2  (PSi )    ஒரு சதுர அங்குலத்திற்கு பவுண்டு அழுத்தம் என்பதன் சுருக்கமே  lb/in2 (or) PSi ஆகும்.அதாவது lb/in2 (or) PSi -  means -   Pounds per Square Inch .

(2) Kilo Gram Force Per Square Centimeter அல்லது kilo pascal என்பதன் குறியீடு அல்லது சுருக்கம்தாங்க    Kg/cm2 (KPa) இதனை Bar என்றும் குறிப்பிடுவர்.
 அப்படியானால் நாம் டயரில் ஏற்றப்படும் காற்றழுத்த அளவானது ஒரு சதுர செமீ.அல்லது ஒரு அங்குலத்திற்கு அழுத்தவீதத்தில் என்பதை புரிந்துகொள்ளுங்க.

பாஸ்கலின் விதி (Pascal's law)  என்பது பாய்மங்களின் அழுத்தத்தைப் பற்றிய விதியாகும்.இவ்விதி பிரெஞ்சு கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது.
                     இவ்விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்கு செங்குத்தாகவும் அமையும். இவ்வழுத்தம் கொள்கலனின் வடிவத்தைப் பொறுத்ததல்ல.
ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். பாய்ம ஓட்டத்தினை நாம் உயிர்வாழ எடுக்கும் மூச்சிலிருந்து உடலில் ஓடும் செந்நீர், பித்தநீர், சிறுநீர் ஆகியவற்றிலும், இந்த புவியில் உயிர்கள் வாழ காரணமாயிருக்கும் நீரோட்டத்திலும், அது ஓட துணை புரியும் கார்மேகங்களின் ஓட்டத்திலும், கார்மேகம் புடைசூழ கிளம்பும் கடல், ஆறு, ஏரி, ஆகிய நீர்நிலைகளில் இருக்கும் ஓட்டத்திலும், தானூர்ந்து, வானூர்தி, கப்பல், ஏவுகணை, விண்கல‌ ஏவூர்தி ஆகியவற்றின் இயக்கிகளிலும், மின் எடுக்கும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், நீர் தேக்க மின் நிலையம், காற்றோட்ட மின் நிலையம் ஆகியவற்றிலும் காணலாம்.




  என அன்புடன்
 C.பரமேஸ்வரன்,
அரசுப் பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.
.ஈரோடு மண்டலம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...