13 ஜூலை 2015

நெரிசல் வரி..

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். லண்டனில் நெரிசல் வரி போடுறாங்க! இதையே நம் நாட்டில் கடைப்பிடித்தால் என்னங்க? பதிவிட்ட நண்பர் திரு. இல.கோபாலசாமி ஐயா அவர்களுக்கு நன்றிங்க..

நெரிசல் வரி !
லண்டன் நகரின் பகுதிகள் சில ´´ congestion tax ´´ (நெரிசல் வரி?) வசூலிக்கின்றன. அதவாது, அந்தப் பகுதிக்குள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளே சென்றால் 11 பவுண்ட் (1100 ருபாய் ) வரி கட்ட வேண்டும். இது பல வருடங்களாக நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான லண்டன் வாசிகள் கார் வைத்திருப்பதில்லை. பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய ஒரு வரியை சென்னை மாநகரின் சில பகுதிகளில் அமுல்ப்படுதலாம். இருசக்கர வாகனங்களுக்கு வேண்டுமானால் சலுகை / விலக்கு அளிக்கலாம்.சாலைகளில் நெரிசல் குறையும். அதிக பேர் பேருந்து, மெட்ரோ வசதிகளைப் பயன்படுத்துவர். அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும், அதைக் கொண்டு மேலும் பொதுமக்களுக்கான வசதியை மேம்படுத்தலாம் (?!) .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக