23 ஜூலை 2015

முளை கட்டிய தானியங்கள் !சிறந்த உணவுங்க..

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். முளை கட்டிய தானியங்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.
          முளை கட்டிய தானியங்களை 
                     சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
முளை கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைத்து அவற்றை ஆரம்பமுளைப்பு என்னும் முளைக்க வைப்பதையே  முளை கட்டுதல் என்கிறோம்.
                பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளை கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் போது, அவற்றிலிருந்து கிடைக்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானியங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா? இது உண்மை தான்.
                    முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளை கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான். பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளை கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளை கட்டப்படும்போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
இங்கு அத்தகைய முளைகட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்சைம்கள்
           பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு
அதிக புரதச்சத்து
            பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.
அதிகமான நார்ச்சத்து
               எடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.
வைட்டமின்கள்
            முளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமினோ அமிலங்கள்
              முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும். 
         ( நாம் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும்).
மிகவும் அவசியமான தாதுக்கள்
             நமது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படும் வகையில், பல்வேறு வடிவங்களினாலான தாதுக்களை முளை கட்டிய தானியங்கள் கொண்டுள்ளன. முளை கட்டும் போது, அல்கலைன் தாதுக்களான கால்சியம், மக்னீசியம் ஆகியவை புரதங்களுடன் சேர்ந்து, செரிமானத்தின் போது உடலால் எளிதில் கிரகிக்கப் படுகின்றன.
பாதுகாக்கும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்தல்
விதைகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் செயலை வீட்டிலேயே சுத்தமான சூழலில் செய்ய முடியும். இதன் மூலம் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளிலிடமிருந்து உங்கள் உணவுப் பொருள் பாதுகாக்கப்படுகின்றன.
சக்தி வெளிப்பாடு
             முளை கட்டுவது என்பது ஒரு விதமான வாழ்வின் தொடக்க நிலையாகும், இதன் மூலம் தானியங்களில் மறைந்திருக்கும் சக்திகள் வெளிப்படுத்தப்பட்டு அவை உடலில் கலக்கின்றன. பாதாம் கொட்டைகளை முளைகட்டும் போது, அதில் உள்ள உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக கொழுப்பை எரிக்கும் லைபேஸ் என்ற என்சைம் உருவாக்கப்படுகிறது.
எளிதில் கிடைக்கும்
கறி மற்றும் பழங்கள் போன்ற புரதச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளைப் போலல்லாமல், முளை கட்டிய தானியங்கள் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரிப்பதால், செலவும் குறைவு என்பது தான் முக்கியமான விஷயம்.
பல்வகைப் பயன்பாடுகள்
                 முளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.
 என்னங்க?
 இப்போதே தயாராகிவிட்டீர்களா! இனிமேல் நமக்கு காலை உணவு முளை கட்டிய தானியங்களே!.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...